என் மலர்
திருவள்ளூர்
- வட்ட செயலாளர் தேவராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஓய்வூதிய காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என முழக்கம்
பொன்னேரி:
பொன்னேரியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, வட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் தேவராஜ் தலைமை தாங்கினார்.
அரசு ஊழியர்களின் ஓய்வூதிய காலத்தை இருட்டாக்கும் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை உடனே வழங்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, வட்டத்தை சேர்ந்த வி.ஏ.ஒ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.
- ரவிச்சந்திரன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவாவை சரமாரியாக தாக்கினார்.
- படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட எருக்குவாய் ஊராட்சி, சேர்ப்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சிவா (வயது 57). இதே பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் என்ற ரவி (29). ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் சேர்ப்பேடு கிராமம், பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சிவாவிடம் ரூ.500 கடனாக கேட்டார். அதற்கு சிவா என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சிவாவை சரமாரியாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சிவா ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். பின்னர் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
- வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
- டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது.
திருத்தணி:
திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சிக்குட்பட்டது கெங்குசாமி நகர். இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளுக்கு மின்வாரியம், விவசாய கிணறுகளுக்கு செல்லும் மின்கம்பத்தில் இருந்து இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட வீடுகளுக்கு குறைந்த அழுத்த மின்சாரம் மற்றும் அடிக்கடி மின்சப்ளை துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் விவசாய கிணறுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் போது ஒரு மணி நேரம் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாரிராஜ் கெங்குசாமி நகர் பகுதிக்கு தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். அதன்படி இரு மாதங்களுக்கு முன் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு மின்கம்பங்கள் நட்டப்பட்டது. டிரான்ஸ்பார்மர் பொருத்துவதற்கு தேவையான மின்ஓயர்களும் தயார் நிலையில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் பொருத்தப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
- நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.
திருவள்ளூர்:
கூடுதல் காவல் துறை இயக்குனர் சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
மாவட்டம் முழுவதும் குற்றச்சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். அப்போது இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீசாருக்கு போலீஸ் அதிகாரி அறிவுரை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்து, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.
இந்த ஆய்வின் போது திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்கலா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர்.
- ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியை சேர்ந்தவர் லல்லி (37) இவர் தினம் தோறும் சென்னை காசிமேடு பகுதிக்கு சென்று மீன் வாங்கி வந்து திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் திருத்தணி பகுதியில் இருந்து புறநகர் ரெயில் மூலமாக சென்னை காசிமேடு பகுதிக்கு மீன் வாங்குவதற்காக லல்லி சென்று கொண்டு இருந்தார்.
திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் அருகே திடீரென 2 இளைஞர்கள் ஓடும் ரெயிலில் லல்லியின் கழுத்தில் இருந்த தாலியை பறிக்க முயன்றனர். அப்போது சுதாரித்துக்கொண்ட லல்லி இளைஞர்களை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் லல்லியின் முகம் மற்றும் கையில் பிளேடால் வெட்டினார்கள். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதனால் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த லல்லி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரெயில்வே போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பிரம்மோற்சவ விழா 27-ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது
- நாளை 26-ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருவள்ளூர் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பிரமோற்சவம் கடந்த 13-ந் தேதி விக்னேஸ்வரர் உற்சவத்துடன் தொடங்கியது.
இந்த பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் உற்சவர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ தீர்த்தேஸ்வரர் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து நாளை 26-ந் தேதி காலை தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலை வேத பாராயணம் நடைபெறுகிறது.
- பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
- உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவன் திருவேங்கடபுரம் மீஞ்சூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது பத்து ரூபாய் நாணயத்தை வாயில் போட்டு விழுங்கி விட்டதாக சக மாணவர்கள் தெரிவித்தனர்.
அதன்பேரில் பள்ளி ஆசிரியர் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனடியாக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க தெரிவித்தார்.
அதன்பேரில் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே பிரிவில் ஊழியர்கள் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.
இதனால் கடும் வேதனைக்குள்ளான மாணவனின் பெற்றோர் தனியார் எக்ஸ்ரே சென்டரில் சென்று பரிசோதனை செய்து மருத்துவரிடம் காண்பித்தனர். அப்போது நாணயம் வயிற்றினுள் சென்றதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
பொன்னேரியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். அவசர மருத்துவ தேவைக்கு வரும்போது போதிய மருத்துவர்கள் இல்லை. எக்ஸ்ரே, ஸ்கேன் வசதி இருந்தும் நோயாளிகள் வெளியில் சென்று எடுத்து வருகிறார்கள். முழு உடல் பரிசோதனை ஸ்கேன் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ரத்தவங்கி செயல்படாமல் மூடியே இருக்கிறது. உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சை பெற வரும்போது உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள்.
இதனால் போகும் வழியிலே உயிர் இழப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
- பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (45) முடி திருத்தும் தொழிலாளி. இவர் திருவொற்றியூரில் முடி திருத்தும் கடையில் வேலை செய்து வந்தார்.
கடந்த 3-ந் தேதி வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் இவரது மனைவி ரேவதி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- காயமடைந்த சிவா பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
- சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எருக்குவாய் ஊராட்சி, சேர்பேடு கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி சிவா(வயது57). இதே பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன் என்ற ரவி(வயது29).
ரவிச்சந்திரன் நேற்று முன்தினம் சேர்ப்பேடு கிராமம், பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சிவாவிடம் ரூ.500 கடனாக கேட்டார். அதற்கு சிவா உனக்கு கடனாக கொடுக்க தற்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அருகில் கிடந்த இரும்பு ராடால்(கம்பியால்) சிவாவை சரமாரியாக தாக்கினார்.இதில்,படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிவா நேற்று காலை ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். மேலும், ரவிச்சந்திரனை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர் மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி கிளை சிறையில் நேற்று இரவு அடைத்தனர்.
- கைது செய்யப்பட்ட கமல் கிஷோர் சென்னையில் உள்ள வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
- 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
பெரியபாளையம்:
வெங்கல் அருகே நகை உற்பத்திக்கூட ஊழியர்களை தாக்கி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த பரபரப்பு சம்பவம் தொடர்பான விவரம் வருமாறு:
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது43) தங்க நகைகளை செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர் ஆவார்.இவர் சென்னை, நெற்குன்றத்தில் தங்கியிருந்து தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது பணியாட்கள் மூலம் சப்ளை செய்வார்.
திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் உள்ள சுனில் என்பவரது நகைக்கடைக்கு ராமேஸ்வர்லாலின் பணியாளர்கள் தங்க நகைகளை சப்ளை செய்வது வழக்கம். இதை கவனித்த சுனில் மகன் கமல் கிஷோர் (வயது 31), அந்த பணியாளர்களிடம் இருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான கமல் கிஷோர், சென்னை அண்ணா நகரில் உள்ள பரோடா வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது கடைக்கு நகைகளை சப்ளை செய்ய வரும் பணியாளர்களிடம் கொள்ளையடிக்க கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிட்டாராம். இதற்காக பாலவேடு கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் பலமுறை திட்டமிட்டு தோல்வி அடைந்தாராம்.
இந்நிலையில், ராமேஸ்வர்லால் கடையில் வேலை செய்யும் சோகன்(வயது 23), காலுராம்(வயது30) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். பூந்தமல்லி, நசரத்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட கடைகளில் நகைகளை சப்ளை செய்து விட்டு வசூல் ஆன ரொக்கப்பணம் ரூ.ஒரு லட்சத்து 5 ஆயிரத்தையும், 1,400 கிராம் (175 சவரன்) தங்க நகைகளையும் பேக்கில் வைத்து எடுத்துக்கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றனர்.
இதனை அறிந்த கமல் கிஷோர் தனது நண்பர்கள் மூலம் ஒரு சொகுசு வாடகை கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மாகரல்- காரணி கிராமத்துக்கு இடையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து காலுராமை சரமாரியாக வெட்டினர். பின்னர், தங்க நகைகள், ரொக்கப்பணம் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செபாஸ் கல்யாண், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் குமார் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தார்.இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் மற்றும் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோர் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், சோகனை காரில் பின்தொடர்ந்து வந்ததும், மோட்டார் சைக்கிளை வழிமறித்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்தது. இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக கமல் கிஷோர்(வயது31) மற்றும் இவரது நண்பர்கள் பாலவீர் பகுதியில் வசித்து வரும் தமிழ்மணி(வயது28), பாலாஜி(வயது29), சுகுமார்(வயது26), கிளிடாஸ்(வயது30) ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 820 கிராம் தங்க நகைகளையும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும், சிலரை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் கிடைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது.
- சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் ஒப்பந்த ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
- திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிபகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் அதன் அருகே நின்று இருந்த ஒப்பந்த ஊழியர் குருபாதம் முகம், கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உடனடியாக 108 மூலம் சென்னை திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பழமையான சோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதில் வேலை செய்கின்ற 150 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் நடைபெற்றது
- பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மத்திய அரசை கண்டித்தும் பாஜக கட்சியை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பொன்னேரி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடியை விமர்சித்து பேசியதற்காக வழங்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக பாஜக அரசை கண்டித்து பொன்னேரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் பாஜக கட்சியை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதேபோன்று மீஞ்சூர் பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பேரூர் தலைவர் மற்றும் 9வது வார்டு கவுன்சிலர் துரைவேல் பாண்டியன் தலைமையில் 15 வது வார்டு கவுன்சிலர் பரிமளா அருண்குமார் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






