என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மேஷாக் என்பவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.
    • கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி என்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக். இவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 17 பவுன் நகை கொள்ளை போனது.

    இதுகுறித்து துணை போலீஸ் சூப்பரண்டு விவேகானந்தா சுக்லா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் கொள்ளையில் ஈடுபட்டது செங்குன்றம் அடுத்த பம்மது குளம், சன்சிட்டி பகுதியை சேர்ந்த சிபி (31) என்பது தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்தனர்.

    • பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
    • 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தீபன் சத்திரம் தச்சூர் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளராக மூர்த்தி (40) என்பவர் உள்ளார்.

    இந்தநிலையில் மதுக்கடைக்கு வந்த 3 வாலிபர்கள் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனை விற்பனையாளர் மூர்த்தி கண்டித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்களும் பீர்பாட்டிலை உடைத்து விற்பனையாளர் மூர்த்தியை தாக்கினர். இதில் அவரது கழுத்து மற்றும் முகத்தில் பலத்த பாட்டில் குத்து விழுந்தது. இதுகுறித்து மூர்த்தி பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து விசாரித்தனர். இதில் ஓசியில் மதுபாட்டில் கேட்டு ரகளையில் ஈடுபட்டு தாக்கியது பொன்னேரி பழைய பஸ் நிலையம் வள்ளலார் தெருவை சேர்ந்த குணா, சூர்யா, லட்சுமிபதி என்பது தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • பீரோவில் இருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
    • திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் விசாரித்து வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர், மாருதி நியூடவுன், வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மேஷாக். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திர மாநிலம், நகரியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 17 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் விசாரித்து வருகிறார்.

    • கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
    • யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம் என்றார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர் நகர் என்ற பகுதியில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள 11 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர் பரமசிவம் அந்த கிராமத்திற்கு சென்று மாணவர்களின் பெற்றோரிடம் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    'யார் காலில் விழுந்தாவது உங்கள் பிள்ளைகளை காவல்துறை படிக்க வைக்கிறோம். உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் 24 மணி நேரமும் காவல் நிலைய கதவு திறந்தே இருக்கும், எங்களை வந்து அணுகுங்கள். அரசின் சார்பில் மாணவர்களுக்கு வாரத்தில் அனைத்து நாட்களிலும் இலவச ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்கப்படுகிறது. கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகிறது' என கூறிய உதவி ஆய்வாளர் பரமசிவம், பெற்றோரிடம் மன்றாடி 11 மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப செய்துள்ளார்,

    மாணவர்களின் பெற்றோரிடம் உதவி ஆய்வாளர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பாராட்டுகளை அள்ளி வருகிறது. இதுதொடர்பான செய்தியை ஷேர் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார்.

    அந்த வகையில், காமெடி நடிகர் தாடி பாலாஜி பாராட்டுகளை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • வரும் 22 ஆம் தேதி பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 16 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில், இன்று காலை ஆறு மணி முதல் 7:30 மணிக்குள் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகனின் அருள் வேண்டி அரோகரா கோஷமிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    மேலும் 22 ஆம் தேதி காலை முதல் மாலை வரை பச்சை மயில் வாகனத்தில் முருகப் பெருமான் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்றைய தினம் முருகப்பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    • வேல்முருகன் நடுரோட்டில் வழிமறித்து எங்கள் மீது புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம்,மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேன்மொழி(வயது47) ஆவார். இவர் பூண்டி ஒன்றிய 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மற்றும் மதன்குமார் ஆகியோருக்கும் இடையே உள்ளாட்சி மன்றத் தேர்தல் காரணமாக முன் விரோதம் இருந்து வருகிறது.

    இதனால் தேன்மொழி இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகளை சரி வர செய்யவில்லை என்று கூறி வேல்முருகன் மற்றும் மதன்குமார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்களாம். இந்நிலையில்,கடந்த 14-ம் தேதி பணி நிமித்தமாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வேல்முருகன் நடுரோட்டில் வழிமறித்து எங்கள் மீது புகார் செய்தால் உன்னை அழித்து விடுவேன் என்று தேன்மொழியை மிரட்டினாராம்.

    இந்த சம்பவம் குறித்து 14-ந் தேதி மாலை தேன்மொழி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர்.

    இந்நிலையில், இன்று மதியம் ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் விரைந்து வந்தார். புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழியிடம் உறுதி கூறினார். இதன் பின்னர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இப்பிரச்சினையால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது.
    • திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க அந்த பகுதியில் இருந்த ரெயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் பணிகள் நடைபெறவில்லை. ஆனாலும் கடந்த ஒரு ஆண்டாக ரெயில்வே கேட் மூடி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடைபெறாத பணிக்காக மூடி இருக்கும் ரெயில்வே கேட்டை திறக்க வலியுறுத்தியும், சுரங்கப்பாதை அமைப்பதற்காக அகற்றப்பட்ட 17 வீடுகளுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தியும் 7-வது வார்டு கவுன்சிலர் டாக்டர் கே. கார்த்திக் தலைமையில் 20 கிராம நிர்வாகிகள் ஊர்வலமாக திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றனர். இதில் பா.ஜ.க. மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், திருவொற்றியூர் மண்டல அலுவலர் சங்கரன், மற்றும் நகர நிலவரி திட்ட தனி தாசில்தார் துளசி ராம்ராஜ் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

    • திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தனது கணவரை சூதாட்ட வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து பழி வாங்குகின்றது.
    • திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த திமுகவினர் மூன்று கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முறையான வரவு-செலவு கணக்கு காண்பிக்கவில்லை எனக்கூறி 13-வது வார்டு திமுக கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் குற்றம்சாட்டி பேரூராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், கடந்த வாரம் மர்ம நபர்கள் சிலர் திமுக பெண் கவுன்சிலர் ஆபாசமாக இருப்பதாக கூறி பிட் நோட்டீசுகளை ஆரணி பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வீசிவிட்டு சென்றனர். இதை அறிந்த சிலர் உடனடியாக அந்த பிட் நோட்டீசுகளை பஜார் வீதியில் இருந்து சேகரித்துக் கொண்டு சென்று எரித்தனர்.

    இந்நிலையில்,13-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி நிலவழகன் தனது கணவரை சூதாட்ட வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து பழி வாங்குகின்றது. தொடர்ந்து எங்களது குடும்பத்தின் மீது சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று ஆடியோவை வெளியிட்டு விட்டு நேற்று மாலை தனது வீட்டில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், இச்செய்தி ஆரணி பகுதியில் காட்டு தீயாக பரவியது. திமுக கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை அடைந்ததால் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.
    • வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேரம் விளையாடும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ஒரு நகைச்சுவையான தலைப்பையும் சேர்த்துள்ளார். அதாவது 'அமைதியாக இருங்கள் மற்றும் கேரம்' விளையாடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் ஸ்மிருதி இரானி சேலை அணிந்து நின்று கொண்டு ஸ்டிரைக்கரை கவனமாக விளையாடுவது தெரிகிறது.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    ஏற்கனவே ஸ்மிருதி இரானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்றாட வாழ்க்கையில் புதுப்பிப்புகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வார்.

    அந்த வகையில் சமீபத்தில் அவர் காசி சென்றிருந்த போது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.

    • கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • குடும்பதகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பி.எஸ்.என் நகரை சேர்ந்தவர் இளையபாரதி (வயது28). பெருங்குடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு பணி முடிந்து இளையாபரதி வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் இளையபாரதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி கவிதா அலறி துடித்தார்.

    தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து இளையபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளையபாரதியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. வேலைபார்த்த இடத்தில் பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பதகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). இவர், தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். ஊத்துக்கோட்டை அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சப்-இன்ஸ்பெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கல்வி மீது ஆர்வம் கொண்ட இவர், தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அணுகி கல்வியின் அவசியம் பற்றி வலியுறுத்தி வருகிறார்.

    இவர், தற்போது பணிபுரிந்து வரும் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர்நகரில் சுமார் 40 குடும்பங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் காடுகளுக்கு சென்று விறகு வெட்டியும், தேன் எடுத்து விற்றும், அரிசி ஆலைகளில் தொழிலாளர்களாக வேலை செய்தும் வருகின்றனர். இவர்கள் தங்கள் குழந்தைகளை குல தொழில்களிலேயே ஈடுபடுத்தி வருகின்றனர்.

    இதையறிந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் நேற்று அந்த பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் 11 குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே இல்லை என்பதை அறிந்தார்.

    இதையடுத்து அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து பேசியதாவது:-

    தமிழக அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் சேர்த்து வாரத்தில் 5 நாட்கள் முட்டை, 2 நாட்கள் பயிறு வகைகள் வழங்குகிறது. மத்திய அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்படி குழந்தைகள் கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் பெற்றோர்கள் மீது வழக்கு தொடரலாம். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    வேண்டுமானால் அவர்களுடைய கல்வி செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன். குழந்தைகளுக்கு உதவ பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும். எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம். யார் காலில் விழுந்தாவது உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    இதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது 11 குழந்தைகளையும் பென்னாலூர்பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ஏற்படுத்திய விழிப்புணர்வு மூலம் 11 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து உள்ளதை பலர் பாராட்டி வருகின்றனர்.

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது.
    • திருத்தணியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    திருத்தணி:

    திருத்தணியில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. திருத்தணி நகரைச் சுற்றியும் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகளவில் இருக்கும்.

    திருத்தணியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மதிய நேரத்தில் சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் பழச்சாறு, ஐஸ்கிரீம் மற்றும் பழக்கடைகளில் குவிந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றவர்கள் குடைபிடித்தபடியும், தலையை துணியால் மூடியபடியும் பயணித்தனர். நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 103.5 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது.

    ×