என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் அருகே சாப்ட்வேர் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
- கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- குடும்பதகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பி.எஸ்.என் நகரை சேர்ந்தவர் இளையபாரதி (வயது28). பெருங்குடியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருந்தனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு பணி முடிந்து இளையாபரதி வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் இளையபாரதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி கவிதா அலறி துடித்தார்.
தகவல் அறிந்ததும் செவ்வாப்பேட்டை போலீசார் விரைந்து வந்து இளையபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளையபாரதியின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. வேலைபார்த்த இடத்தில் பணிச்சுமை காரணமா? அல்லது குடும்பதகராறில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






