என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் சாலை புதுப்பிக்கும் பணிக்கு ரூ.2.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    காங்கயம்:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 3.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு செய்தார்.

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி, எஜமானர்புதூரில் ரூ20.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய வேளாண் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி, சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காங்கேயம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தொடு திரையுடன்கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை மற்றும் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுயஉதவிக்குழு கட்டடப் பல்நோக்கு மையம், சிவன்மலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் மண்சாலையை தார் சாலையாக புதுப்பிக்கும் பணி என மொத்தம் ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும்வளர்ச்சித்திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது காங்கேயம் வட்டாட்சியர் புவனேஸ்வரி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்காக மினி மாரத்தான் போட்டி நடக்கிறது.
    • உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உடுமலை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ்., அகாடமி மற்றும் உடுமலை லேப் அண்ட் எக்ஸ்ரேஸ் பிரியா நர்சிங் கல்லூரி சார்பில் போதைப்பொருள் நெகிழி ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் கடைபிடிப்பது பற்றிய விழிப்புணர்வுக்கான மினி மாரத்தான் போட்டி வருகிற ஆகஸ்ட் 13 .8 .23 (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெறுகிறது.

    உடுமலை இராகல்பாவிபிரிவு முதல் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது.மினி மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள பதிவு கட்டணம் ரூ. 50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு கட்டணத் தொகை புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ செலவுக்காக அளிக்கப்படுகிறது.

    உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள உடுமலை லேப் அண்ட் எக்ஸ் ரேஸ்சில் இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.9865275123 , 830056811 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். தவிர பள்ளி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களிடம் பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு 8.8.23 (செவ்வாய்க்கிழமை )மாலை 5.30 மணிக்கு நிறைவடைகிறது. இப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது

    போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பொருளாளர் சிவகுமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் நாயப் சுபேதார் நடராஜ். ஏ.ஒய்.கான், லெப்டினன்ட் சுபாஷ் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் கே .ஆர் .செல்வராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • 726 விவசாயிகள் தங்களுடைய 8,051 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர்.
    • விலை குவிண்டால் ரூ. 6,650 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விலை கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூ. 450 உயர்ந்தது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வெள்ளிக்கிழமை காலை வரை ஏலம் நீடித்தது.

    கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 726 விவசாயிகள் தங்களுடைய 8,051 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 2,491 குவிண்டால்.

    திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 25 வணிகர்கள் வந்திருந்தனர். விலை குவிண்டால் ரூ. 6,650 முதல் ரூ. 7,789 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,200. கடந்த வார சராசரி விலை ரூ. 6,750.விற்பனைக் கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர்.

    • சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
    • கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய கோவையை சோ்ந்த வாலிபர் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

    இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா், பல்லடம் சாலையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினா் கடந்த 10 ந் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில் சரக்கு ஆட்டோவில் இருந்து 1,850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

    இதுதொடா்பாக கோவை மாவட்டம், மாதம்பட்டியை அடுத்த குப்பனூரை சோ்ந்த ஜி.காா்த்திகேயன் (வயது 32) என்பவரை கைது செய்தனா். இவா் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும்படி மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள காா்த்திகேயனிடம் காவல் துறையினா் நேரில் வழங்கினா் என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது. 

    • தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.
    • விவரங்களுக்கு exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்களின் சொந்த வீடு, அடுக்குமாடி போன்றவற்றின் சொத்துவரி குறித்த கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையர்கள் சர்வே படிவத்தை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து தங்கள் வீட்டுக்கு கடைசியாக செலுத்திய சொத்துவரி ரசீது நகலை இணைக்க வேண்டும்.

    பின்னர் உதவி இயக்குனர், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண்.23, 5-வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் -641 604 என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வருகிற 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971127 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, exweltup@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 2023-24- ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்பத்துடன் செல்போன் எண், மாணவரின் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது.
    • கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் புதிதாக எம்.பி.ஏ. பாடப்பிரிவு தொடங்கப்படவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி 17 இளநிலை மற்றும் 11 முதுநிலை வகுப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், 2023-24 வது கல்வியாண்டு முதல் எம்.பி.ஏ. பாடப்பிரிவைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடமிருந்து பெறப்ப ட்டுள்ளது. எம்.பி.ஏ. பட்ட வகுப்பில் சோ்வதற்கு டான்செட் எழுதிய மாணவா்கள், அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொது கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியின் குறியீட்டு எண் 330-ஐ தோ்வு செய்ய வேண்டும்.

    தமிழக அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கல்லூரி விருப்பத் தோ்வு மற்றும் கலந்தாய்வு இணைய வழியில் இன்று முதல் நடைபெறுகிறது.

    இதுதொடா்பான விவரங்களை இணையதளம் https://cgac.in/ மூலமாக மாணவா்கள் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது.
    • 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதுடன், பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிட்ஷோ கண்காட்சி விளங்கி வருகிறது. 21-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர்-காங்கயம் மெயின் ரோட்டில் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே டாப்லைட் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறது.

    இதுகுறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:-

    கண்காட்சி அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. 6 பெரிய அரங்குகளில் 450 ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். பின்னலாடைத்துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்த கண்காட்சியில் நிட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக பிரிண்டிங் துறையில் அதிநவீன எந்திரங்கள் அதிகம் இடம்பெறுகிறது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நவீன எந்திரங்கள் இடம்பெறுகிறது. 25 தையல் எந்திர நிறுவனங்கள், 15-க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள், டேப், ரோல், எலாஸ்டிக் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 12-க்கும் மேற்பட்ட நிட்டிங் எந்திர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும். டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள் இடம்பெறுகிறது.

    இத்தாலியில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்ற நவீன எந்திரங்கள் நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

    பல்லடம்:

    கோவையை சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது ட்ரம்ஸ் கலைக்குழுவினர் 12 பேருடன் வேன் மூலம் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள பாஜக., பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். வேன் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் என்ற இடத்தில் வந்தபோது,ஈரோட்டில் இருந்து பல்லடம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து கோவை நோக்கி வந்த லாரியும் ட்ரம்ஸ் கலைஞர்கள் பயணித்த வேன் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவையை சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்கள் கௌதம்,சரவணன், சபரீஷ், மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஈச்சர் வாகன ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கு தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகளிர் உரிமை திட்டத்திற்கான பதிவு முகாம்கள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    பல்லடம்:

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பதிவு முகாம்கள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி பல்லடம் வட்டாரத்தில் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை அரசு பள்ளியில் நடைபெறும் மகளிர் உரிமைத்திட்ட பதிவு மையத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் அசோகன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோடங்கிபாளையம் ஊராட்சி செயலாளர் கண்ணப்பன், திமுக., நிர்வாகிகள் சுப்பையன், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ரூ.7.4 லட்சம் மதிப்பில் 25 மேஜை- நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரூ.14 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில்அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவ, மாணவிகள் அமர்வதற்கு மேஜை - நாற்காலிகள் வேண்டும் என மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.7.4 லட்சம் மதிப்பில் 25 மேஜை- நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், துணைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பல்லடம்:

    நெய்வேலியில் என்எல்சி., நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அன்புமணிராமதாசு கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் பஸ் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மணிகண்ணன், நந்தகோபால்,மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ்,மல்லிகா,முன்னவன்,மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×