search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜவுளித் தொழிலுக்கான நவீன இயந்திரங்கள் கண்காட்சி
    X

    கோப்பு படம்.

    ஜவுளித் தொழிலுக்கான நவீன இயந்திரங்கள் கண்காட்சி

    • ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்கிறது.
    • 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்வதுடன், பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் நிட்ஷோ கண்காட்சி விளங்கி வருகிறது. 21-வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர்-காங்கயம் மெயின் ரோட்டில் ஹவுசிங் யூனிட் பஸ் நிறுத்தம் அருகே டாப்லைட் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் செலுத்தி வருகிறது.

    இதுகுறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:-

    கண்காட்சி அரங்கம் முற்றிலும் குளிரூட்டப்பட்டது. 6 பெரிய அரங்குகளில் 450 ஸ்டால்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டுள்ளோம். பின்னலாடைத்துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும் வகையில் இந்த கண்காட்சியில் நிட்டிங், எம்ப்ராய்டரி, பிரிண்டிங், தையல் உள்ளிட்ட அனைத்து வகையான எந்திரங்களும் இடம்பெற உள்ளன. குறிப்பாக பிரிண்டிங் துறையில் அதிநவீன எந்திரங்கள் அதிகம் இடம்பெறுகிறது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் நவீன எந்திரங்கள் இடம்பெறுகிறது. 25 தையல் எந்திர நிறுவனங்கள், 15-க்கும் மேற்பட்ட எம்ப்ராய்டரி நிறுவனங்கள், டேப், ரோல், எலாஸ்டிக் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 12-க்கும் மேற்பட்ட நிட்டிங் எந்திர நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 40 சதவீதம் கண்காட்சியில் பிரிண்டிங் எந்திரங்கள் காட்சிப்படுத்தப்படும். டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள் இடம்பெறுகிறது.

    இத்தாலியில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சி இடம்பெற்ற நவீன எந்திரங்கள் நிட்ஷோ கண்காட்சியில் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×