என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து நடந்த சி.சி.டிவி காட்சிகள்.
பல்லடம் அருகே அண்ணாமலை பாதயாத்திரைக்கு சென்ற வேன் மீது லாரி மோதி விபத்து
- பல்லடம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.
பல்லடம்:
கோவையை சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது ட்ரம்ஸ் கலைக்குழுவினர் 12 பேருடன் வேன் மூலம் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள பாஜக., பாதயாத்திரை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். வேன் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் என்ற இடத்தில் வந்தபோது,ஈரோட்டில் இருந்து பல்லடம் நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து சிவகாசியில் இருந்து கோவை நோக்கி வந்த லாரியும் ட்ரம்ஸ் கலைஞர்கள் பயணித்த வேன் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவையை சேர்ந்த டிரம்ஸ் கலைஞர்கள் கௌதம்,சரவணன், சபரீஷ், மனோஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பல்லடம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஈச்சர் வாகன ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவருக்கு தலை மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






