என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அரசு பள்ளிக்கு மேஜை-நாற்காலிகள்
    X

    மேஜை- நாற்காலிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.  

    பல்லடம் அரசு பள்ளிக்கு மேஜை-நாற்காலிகள்

    • ரூ.7.4 லட்சம் மதிப்பில் 25 மேஜை- நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • ரூ.14 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில்அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மாணவ, மாணவிகள் அமர்வதற்கு மேஜை - நாற்காலிகள் வேண்டும் என மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ.7.4 லட்சம் மதிப்பில் 25 மேஜை- நாற்காலிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி, ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், துணைத் தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திராணி வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகரில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதியிலிருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்,மற்றும் வார்டு உறுப்பினர்கள் ,பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×