என் மலர்
திருவாரூர்
- திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
- பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலைகள் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது.
காலை 8 மணிக்குப் பின்னரும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர்.
மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், மாங்குடி, நன்னிலம், கொரடாச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
பனிப்பொழிவின் காரணமாக திருவாரூர் ெரயில் நிலையத்தை முழுமையாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
மேலும் தற்போது சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக பனிமூட்டம் மூடி மறைத்துள்ளது.
இதேபோன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமான கமலாலயக் குளம் முழுவதும் பனி மூட்டத்தின் காரணமாக குளம் முழுவதும் மூடுபனியால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடுமை யான பனிப் பொழிவின் காரணமாக கோவிலுக்குச் செல்ப வர்களும்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலையில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
- குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
- சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் உதயமார்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளம் 5-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியை மனிதநேய ஜனநாயக கட்சியின் ஊராட்சி மன்ற உறுப்பினர் நாச்சிகுளம் தாஜுதீன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த தொட்டியில் ஏறி தாஜுதீன் அதன் உள்ளே இறங்கி குடிநீர் தொட்டியின் சுத்தம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது குடிநீர் தொட்டியின் உள் சுவரில் பாசிகள் படர்ந்து அழுக்குகள் நிறைந்திருப்பதையும் நீண்ட நாட்களாக தொட்டி சுத்தம் செய்யப்படாமல் இருப்பதையும் கண்டறிந்தார்.
இதுகுறித்து நாச்சிகுளம் பகுதி உறுப்பினர்கள் அஜிரன், ராயல்காதர் ஆகியோருடன் ஊராட்சி மன்ற தலைவரை சந்தித்து தங்கள் வார்டுகளில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
குடிநீர் வினியோக பணியாளர் முறையாக பராமறிப்பு பணிகளை செய்வது கிடையாது. நாச்சிகுளம் பகுதி நீர் தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் .
இதுபோல் ஒவ்வொரு மாதமும் நீர்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிதண்ணீர் விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.
- அரசின் திட்டங்களை இடையூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது பணி.
- திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டராக சாரூஸ்ரீ பொறுப்–பேற்றுக் கொண்டார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்து ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் துணைஆ ட்சியராக பதவியேற்று, பின்பு வணிகவரித்துறையின் இணை இயக்குநராக பதவி வகித்து, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பதவி வகித்து,தற்போது திருவாரூர் மாவட்ட கலெக்டராக பொறுப்–பேற்றுள்ளார்.
பொறுப்பேற்றதற்கு பின் நிருபர்களிடம் கலெக்டர் கூறிய தாவது:-
திருவாரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபடுவேன். அரசின் திட்டங்களை இடை யூறின்றி பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனது தலையாய பணி.
திருவாரூர் நகராட்சியின் மேம்பாட்டிற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.
- வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது.
- வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் எண்கண் சுப்ரமணியசாமி கோவில் ஆயிரம் ஆண்டு பழமையானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக கோயில் வழங்குகிறது.
இக்கோயிலில் தைப்பூச ஜனவரி 22 முதல் பிப்ரவரி 7-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25 முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினம்தோறும் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பிப்ரவரி 2-ந்தேதி பல்லக்கு வெண்ணதாழி மற்றும் வெட்டுங்குதிரை வாகன ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 3-ந்தேதி கோவில் திருத்–தேரோட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை முதல் தைப்பூச சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் காவிரி கரை சென்று தீர்த்தம் கொடுத்தல் மற்றும் காவடி அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
நேற்று வன்னி மரத்தடியில் சிம்மவர்ம அரசனுக்கு காட்சியளித்தல் மற்றும் பக்தர் காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வுகளை காண திருவாரூர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று துவஜா அவரோகணம் நிகழ்வும், நாளை பிப்ரவரி 7-ந்தேதி விடையாற்றி சுந்தா–பிஷேகமும் நடைபெறுகிறது.
- அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாது.
- கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் ராஜேந்திரன், துணை தலைவர்கள் துரைராஜ், முருகானந்தம், துணை செயலாளர் ராஜ் மோகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜவகர் மற்றும் சங்கர் ஆகியோர் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்க்கொடி யிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
சங்கத்தின் 32-வது மாநாடு கடந்த மாதம் 7-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. இதில் குடியிருப்பு மனை பட்டா இல்லாத அனைவருக்கும் அரசு உடன் மனைப்பட்டா வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 32 ஊராட்சிகளுக்கும் ஆய்வு செய்ததன் அடிப்படையில் மொத்தம் 2 ஆயிரத்து 305 பேருக்கு அரசு வீடு கட்ட அனுமதி அளித்துள்ளது.
அவர்கள் இருக்கும் இடத்தில் பட்டா இல்லாமல் உள்ளனர்.
ஆகையால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி வழங்க இயலாத என்று அரசு அலுவலர்கள் கூறுகின்றனர். ஆகவே அரசு அவர்களுக்கு மனையும், பட்டாவும் வழங்க வேண்டும்.
கூரை இல்லாத வீடு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு குடியிருப்பு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்லா பெட்டி திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மளிகை கடைக்கு சென்று கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கச்சனம் பகுதியில்பால கணேசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் காலையில் மளிகை கடையை திறந்திருக்கிறார்.
அப்போது கடையில் சைடில் உள்ள பிளைவுட் பலகை உடைத்து இருந்தும் கல்லாப்பெட்டி திறந்து இருந்தோம் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் இது குறித்து ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்பார்த்திபன் மற்றும் போலீசார் உடன் கச்சனம் மளிகை கடைக்கு சென்று மல்லிகை கடையில் உள்ள சிசிடி கேமராவை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் படத்தான் தோப்பு தெருவை சேர்ந்த அன்பு ஸ்ரீதர் (வயது 23) என்பவர் பணம் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அன்பு ஸ்ரீதரை கைது செய்தனர்.
- அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
- கனமழை காரணத்–தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வடகால், பின்னவாசல், ஓடாச்சேரி, கீழகூத்தங்குடி, வேப்பத்தாங்குடி ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள விவசாய நெற்பயிர்களை திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பூண்டி.கே.கலைவாணன் எம்எல்ஏ தெரிவித்ததாவது, இந்த ஆண்டு முன்பாகவே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தினால் காவிரி படுகை அனைத்து இடங்களிலும் அமோகமாக நெல் விளைச்சல் ஏற்பட்டு உள்ளது.
எதிர்பாராத விதமாக கடும்மழை பெய்த காரணத்தினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்துள்ளது. இருபது நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களும் சேதமடைந்துள்ளது.
சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் கணக்கெடுக்கம் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் தமிழக முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்.
இதற்கான நிவாரணம் பாதிக்கப்பட்ட விவசாயகளுக்கு வழங்கங்கிட தமிழக முதலவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாய்வில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை த்துறை உதவி இயக்குநர் ஹேமா ஹெப்சிமா நிர்மலா, தாசில்தார் நக்கீரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், திருவாரூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் துரை தியாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.
- ஏப்ரல் 1-ந்தேதி ஆழி தேரோட்டம் நடைபெறுகிறது.
- ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.
திருவாரூர்திருவாரூர் ஆழி தேரோட்ட விழா வரும் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோவிலாகும். சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கதக்கது. ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதியாக கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதை ஒட்டி அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது.
அதை முன்னிட்டு இன்று திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பங்குனி உத்திரவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பங்குனி உத்திர பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தத்தை செய்து வைத்தனர்.
- 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டது.
- சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டு கடந்த 15 நாட்களாக அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிலும், குறிப்பாக திருத்துறைப்பூண்டி, பாண்டி, கீழப்பாண்டி, கீழப்பெருமலை, மேலப்பெ ருமலை, தில்லைவிளக்கம் புத்தகரம், உதய மார்த்தாண்டபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் கீழப்பெருமலை பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்படைந்துள்ளது.
இதனால் விவசாயிகள் நெல் மூட்டைகளை தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
- அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது.
- பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகுராமன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிரு ப்பதாவது:-
திருத்துறைப்பூண்டியில் தாசில்தார் அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் தங்கள் பணி நிமித்தமாக பொதுமக்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அலுவலகத்திற்கு செல்லும் சாலை முற்றிலும் மண் சாலையாக உள்ளது. அதுவும், தற்போது பெய்து வரும் கனமழையால் சாலை குண்டும் குழியுமாகவும், சேரும் சகதியமாகவும் காட்சியளிக்கிறது.
இதனால், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த சாலையை தார்சாலையாக அமைத்திடவும் மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் சிமெண்டு கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல் சாகுபடி செய்வதற்கும், சிறு, குறு தொழில்கள் தொடங்குவதற்கும் கடன் தொகையை பயன்படுத்தவேண்டும்.
- குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 30 மகளிர் சுய உதவிக் குழுகளுக்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் எம் சிவசண்முகம் தலைமை தாங்கினார்.
சங்க செயலாளர் (பொ) எஸ்மணிமாறன் வரவேற்று பேசினார். திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து எம்.எல்.ஏ., கோட்டூர் ஒன்றியகுழு தலைவர் மணிமேகலை முருகேசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாலஞானவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிக சாதாரண ஏழை எளிய மக்கள் கந்துவட்டி கொடுமையில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி மகளிர் சுய உதவிக் குழு அமைத்து அரசு மூலம் கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.
இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைந்துள்ளனர் நமது முதல்வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கூடுதலாக கடன் வழங்கும் திட்டதை செயல் படுதி வருகிறார் ஆனால் சில மகளிர் குழு உறுப்பினர்கள் அரசு வழங்கும் கடன் தொகையை கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன்கொடுக் கிறார்கள்.
பின்னர் அதை வசூல் செய்ய முடியாமல் ஏமாந்து போகிறார்கள் இந்த மகளிர் குழு உறுப்பினர்களை நான் கேட்டுக் கொள்வது இந்த கடன் சங்கத்தில் வழங்கப்படுகிற கடன் தொகையை ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்க்கவும் நெல் சாகுபடி செய்வதற்கும் சிறு குறு தொழில்கள் தொடங்குவதற்கும் பயன்படுத்தவேண்டும்.
இதன் மூலம் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எம் செந்தில்நாதன் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா கள மேலாளர் ஆர் வீரசேகரன் உதவி கள மேற்பார்வையாளர் வி.முத்துக்குமார் எழுத்தர் சித்ரா அலுவலக பணியாளர்கள் வேம்பையன் சதீஷ் பாண்டியன் ராஜசேகரன் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் முதுநிலை எழுத்தர் டி.சத்யநாராயணன் நன்றி கூறினார்.
- 100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவாரூர், சேந்தமங்கலம், மாங்குடி, வடகரை, வண்டம்பாலை, நன்னிலம், குடவாசல், பேரளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 1லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற் பயிர்கள் மழைநீரில் சாய்ந்துள்ளன.
நேற்று காலையில் இருந்து மாலை வரை அதிகமழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் நிம்மதி பெரு மூச்சுவிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக விவசாயிகள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே மழை நீரில் சாய்ந்துள்ள நெற்பயிர்கள் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் வயலில் கொட்டி மீண்டும் முளைக்கக்கூடிய அவல நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நி லையில் மாவட்ட முழுவதும் வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
உடனடியாக வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்து பாதிப்புகளை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும்.
100 சதவீத காப்பீட்டு தொகை கிடைப்பதற்கு முன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.






