என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டியில், கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
    X

    கைதான வாலிபர்.

    திருத்துறைப்பூண்டியில், கடையில் பணம் திருடிய வாலிபர் கைது

    • கல்லா பெட்டி திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • மளிகை கடைக்கு சென்று கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் கச்சனம் பகுதியில்பால கணேசன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் காலையில் மளிகை கடையை திறந்திருக்கிறார்.

    அப்போது கடையில் சைடில் உள்ள பிளைவுட் பலகை உடைத்து இருந்தும் கல்லாப்பெட்டி திறந்து இருந்தோம் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து ஆலிவலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்பார்த்திபன் மற்றும் போலீசார் உடன் கச்சனம் மளிகை கடைக்கு சென்று மல்லிகை கடையில் உள்ள சிசிடி கேமராவை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் படத்தான் தோப்பு தெருவை சேர்ந்த அன்பு ஸ்ரீதர் (வயது 23) என்பவர் பணம் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அன்பு ஸ்ரீதரை கைது செய்தனர்.

    Next Story
    ×