என் மலர்
திருச்சிராப்பள்ளி
- காந்தி ஜெயந்தி நாளில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி
திருச்சி,
தேசிய பண்டிகை விடுமுறை தினமான நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை தொழிலாளர் ஆணையரும், முதன்மைச் செயலாளருமான அதுல் ஆனந்த், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்வியநாதன் ஆகியோரது அறிவுரையின்படி திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சட்ட அமலாக்கம்) தலைமையில், தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 147 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்காத மற்றும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இனிவரும் தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்களை பணிபுரிய நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை) சட்டத்தின் கீழ் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- திருச்சி பெட்டவாய்த்தலை பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி செய்யப்பட்டு உள்ளது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்
திருச்சி,
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை மெயின்ரோடு வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி முத்தாத்தாள்(வயது 67). இவர் அங்குள்ள பாலன்காவேரி பரிசல்துறை ரோட்டை சேர்ந்த முருகானந்தம் (40) என்பவரிடம் ரூ.16 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வீடு விலை பேசினார்.
அதற்கு முதல் தவணையாக ரூ.6.50 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்ற முருகானந்தம் சொன்னபடி வீட்டை கிரயம் செய்து கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுபற்றி முத்தாத்தாள் பெட்டவாய்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- திருச்சி அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்டுள்ளார்
- உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
துறையூர்,
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் கோம்பை ஊராட்சிக்கு உட்பட்ட தாளூர் கிராமத்தில் உள்ள முந்திரி காடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பள்ளம் ஒன்று தோண்டி, மூடப்பட்ட தற்கான அடையாளம் காணப்பட்டது. அங்கு ஏதேனும் பிணம் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள், இது குறித்து துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், குழி தோண்டி மூடப்பட்டி ருப்பதற்கான அடையாளம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பொதுமக்கள் சந்தேகம் சரியென உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து துறையூர் தாசில்தார் வனஜா முன்னிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவில், கூலி தொழிலாளிகள் வரவழைத்து மூடப்பட்டி ருந்த குழியில் உள்ள மண் அகற்றப்பட்டது.
அப்போது, அதில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் புைதக்கப்பட்டி ருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோத னைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார், துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையங்க ளில் காணாமல் போன வர்கள் பற்றிய விவரங்கள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இறந்த வாலிபர் அங்கேயே கொலை செய்யப்பட்டு புதைக்க ப்பட்டாரா? அல்லது வேறு எங்கேயும் கொலை செய்யப்பட்டு, இங்கு வந்து உடல் புதைக்கப்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பச்சைமலை பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் புதைக்கப்பட்ட நிலையில் கிடந்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
- ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
மண்ணச்சநல்லூர்,
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்ப டங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோயில் இணை ஆணையர் கல்யாணி கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை என ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு விரைவில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் கேமிரா உள்ளிட்ட, மின் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- முசிறி அருகே ஹோட்டல் தகராறில் பீர் பாட்டில் ஒருவர் தாக்கப்பட்டார்
- முசிறி போலீஸார் மூவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முசிறி,
முசிறி அருகே ஹோட்டலில் நேரிட்ட தகராறில் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது முசிறி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முசிறி அருகேயுள்ள வீரமணிபட்டி சேர்ந்த பழனிமுத்து மகன் முருகேசன் (40), இவருக்கும் பேரூரரை சேர்ந்த கனகராஜ் மகன் நந்தகுமார் (26) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முருகேசன் தண்டலைபுத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் நின்று கொண்டிருந்தபோது, நந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் ஆனந்த் (35) சுந்தரவேல் (26) ஆகியோர் முருகேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாகவும், அப்போது முருகேசனை நந்தகுமார் தனது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியதில் முருகேசன் தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் முசிறி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முசிறி போலீசாரிடம் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸார் நந்தகுமார், ஆனந்த், சுந்தரவேல் ஆகிய மூவர் மீது வழக்கு பதிந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நபர் சாவு யார் அவர்? போலீசார் விசாரணை
- போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவம னையில் 40 வயது மதிக்க த்தக்க ஆண் நபர் ஒருவர் கடந்த 26-ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெ பறுவதற்கு வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரை உள் நோயாளியாக அனுமதித்த சிகிச்சை அளித்தனர்.
அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் திடீரென்று இவர் இறந்து விட்டார். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற முழு விவரம் தெரியாததால், இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் கண்டோன்மெ ண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரை ந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவை த்தனர்.
பின்னர் கண்டோன்மெ ண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். முதல் கட்ட விசாரணையில் இறந்த நபர் டோல்கேட் பகு தியை சோந்த அந்தோணி சாமி என்பவரின் மகன் எபினேசர் (வயது 40) என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரு ந்தார் என்று தெரிய வந்தது.
மேலும் இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
திருச்சி,
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அன்பரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் அழகிரிசாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில்,
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில், பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியரில் இருந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணி மாறுதல் மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் பெறுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது.பின்னர் முதலில் தடையாணை வழங்கப்பட்டு பின்பு, 2008-ல் அந்தத் தடை விலக்கி கொள்ளப்பட்டதால் மீண்டும் 2008 முதல் 2015 வரை 7 ஆண்டுகள் முன்பு வழங்கியது போல் பணி மாறுதல் மூலம் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 2023-ல் டிவிசன் பெஞ்ச் தீர்ப்பில் அந்த பதவி உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதில் தனி நீதிபதி 2018 தமிழக அரசு வழங்கிய உத்தரவின்படி பள்ளி கல்வித்துறை 4-7-2018 நாளது மற்றும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதி 9 மற்றும் 13-படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் உரிமையை விட்டு தந்த தகுதியின் அடிப்படையிலும், லெயின் தொடரும் என்ற பணி விதிகளும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் 23-3- 2023 நாளிட்ட தீர்ப்பு உரிமை துறப்பு மீதான தீர்ப்பு அல்ல என்பதால் 2018, 19, 20, 21-ம் ஆண்டுகளில் பணி மாறுதல் வழங்கப்பட்ட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் பரிசீலித்து தற்போது உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரியும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் தொடர்ந்து தலைமை ஆசிரியர்களாக நீடிக்க ஆவண செய்ய வேண்டும். மாறுதல் மூலம் பணிபுரியும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்யக்கூடாது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் மாநில பொது செயலாளர்கள் அருள் சுந்தர்ராஜன், நடராஜன், அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொருளாளர் இளங்கோ, மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட பொருளாளர் திலகநாதன்,செயலாளர் பெரியசாமி, இணைச் செயலாளர்கள் அழகு சுப்பிரமணியன், சிவக்குமார், மதியழகன்மற்றும் 38 மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில பேச்சு போட்டி- கருத்தரங்கம்
- தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.
திருச்சி,
கலைஞர் கருணாநிதி நுற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாநகர பொறியாளர் அணி சார்பில், மாநில தழுவிய பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியும் நவீன தமிழ்நாட்டின் ஆர்க்கிடெக்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற்றது.
மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தென்னரசு வரவேற்றார். மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஜியாவுதீன் , மாநகர பொறியாளர் அணி அமைப்பாளர் மெய்யப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர்.மாவட்ட - மாநகர பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் த.நடராஜன், கோ.சிபிசக்கரவர்த்தி, பாலசுப்ரமணியன், ப.நவநீதகிருஷ்ணன், கோவி.செல்வராஜ், ஆ.அசோக், சாக்ரடீஸ், செந்தில்ராம், தினேஷ்கண்ணா, மணிகண்டன், கிஷோர், ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .திருச்சி தெற்கு மாவட்டத்தை சேர்ந்த இளங்கலை - முதுகலை பயிலும் பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் ,ஐ.டி.ஐ .மாணவர்கள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு தொழில்நுட்ப கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழின தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்க கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற தலைப்பில் பேசினர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பொறியாளர் அணி மாநிலச்செயலாளர் கு.கருணாநிதி, மாநகர செயலாளர் மு.மதிவாணன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர் . இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில அணி செயலாளர்கள் கே.என். சேகரன், வண்ணை அரங்கநாதன், அ.த.த.செங்குட்டுவன், என்.செந்தில், நூர்கான், சந்திர மோகன், பொன்.செல்லையா, சரோ ஜினி,தமிழ்ச்செல்வம், கே.கே.கே.கார்த்திக், மணிமேகலை, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள நீலமேகம், கே.எஸ்.எம். கருணாநிதி, எஸ். சிவக்குமார், எம்.பழனியாண்டி, எம்.ஆர்.டி.பி.கே.தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர பொறியாளர் அணி தலைவர் இன்பா நன்றி கூறினார்.
- பஸ்கள் நின்று செல்லாததால்நிழற்குடை பகுதியில் டீக்கடை வைத்து போராட்டம்
- விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முசிறி
திருச்சி மாவட்டம் முசிறியில் துறையூர் சாலையில் உள்ள பயணியர் நிழற்குடை பகுதியில் பேருந்துகள் நிற்காமல் வணிக வளாகங்கள் உள்ள பகுதியில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.முறையாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பேருந்துகளை நிறுத்தி செல்வதற்கு போக்குவரத்து பணிமனை மற்றும் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் போன்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவரும் சமூக ஆர்வலருமான மனோகரன் மாவட்ட ஆட்சியர் மற்றும் முசிறி நகராட்சி ஆணையர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கலெக்டர் பயணியர் நிழற்குடை பகுதியில் விவசாயிகள் சங்கம் சார்பில் டீக்கடை மற்றும் உணவு விடுதிகள் பெட்டிக்கடைகள் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது
- துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர்
கே.கே.நகர்,
மத்திய அரசு சார்பில் இந்தியா முழுவதும் தூய்மை பணி மேற்கொள்ள பாரத பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நேற்று திருச்சி விமான நிலையத்தில் தூய்மை பணி நடைபெற்றது. இதில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தலைமையில் அதிகாரிகளும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையின் துணை கமிஷனர் ஹரி சிங் நயால் முன்னிலையில் பங்கு பெற்றனர். இதில் விமான நிலைய ஆணையக் குழு அதிகாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி செய்தனர். தூய்மை பணி காலை 10 மணிக்கு முதல் பகல் 2 மணி வரை திருச்சி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்றது. திருச்சி விமான நிலையத்தின் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சிவகுமார் சந்தானகிருஷ்ணன் குமரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது.
திருச்சி:
திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோட்டிக் பிரசார வாகனத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் 30-ந் தேதிக்குள் வெள்ள தடுப்பு மழை நீர் வடிகால் பணிகள் முடிக்க திட்டப்பட்டு இருந்தது . ஆனால் கடந்த 50 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் அந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் அடுத்து ஒரு வாரத்திற்குள் அந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் யாருக்கும் ஏதேனும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அதற்கேற்றார் போல் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று பிற மாவட்டங்களிலும் மழை வடிகால் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்கேயும் அதிக அளவில் தண்ணீர் தேங்காமல் இருக்கப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதற்கான நிதி அந்தந்த மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் முழங்கால் அளவிற்கு தண்ணீர் நின்றால் கூட எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் தற்போது கணுக்கால் அளவு தண்ணீர் நின்றால் கூட தண்ணீர் நிற்கிறது என்கிறார்கள். அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் வடிந்து விடுகிறது.
சென்னையில் மெட்ரோ ரெயில் பணி, மின்சார தொழில்நுட்ப பணி, மெட்ரோ குடிநீர் பணி என மூன்றும் நடைபெறுவதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்படுகிறது. மழைக்காலம் முடியும் வரை எங்கேயும் சாலைகளை தோண்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி பொறுத்த அளவில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு செய்யும் பணி இன்னும் 20 சதவீத பணிகள் மட்டுமே உள்ளது. கடந்த 7 வருடமாக எதுவுமே செய்யவில்லை. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று 2 வருடத்தில் சாலை, மின்விளக்கு, குடிநீர் இணைப்புகள் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
குடமுருட்டி பகுதியில் இருந்து பஞ்சப்பூர் வரை கோரையாறு கரையை பலப்படுத்துவதற்கு ரூ. 330 கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நீர்வளத்துறை சார்பில் அனைத்து ஆறுகளும் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால் எங்கேயும் கரைகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மணப்பாறை; குழந்தை இல்லாததால் கணவர் டார்ச்சர்-இளம்பெண்தற்கொலை
- இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருச்சி
திருச்சி மணப்பாறை புத்தாநத்தம் என். பெருமாள்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி அஞ்சலை (வயது 27). இந்த தம்பதியருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. மேலும் குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி முத்துகிருஷ்ணன் மனைவியை மனரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தீர்மானித்தார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேன் கொக்கியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் சரசு புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் அஞ்சலையின் இறப்புக்கு வரதட்சணை கொடுமை ஏதும் உள்ளதா? என்ற கோணத்தில் ஸ்ரீரங்கம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத பிரச்சனையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.






