என் மலர்
திருச்சிராப்பள்ளி
- முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகள், திருச்சி விமான நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் காரில் தஞ்சை மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 6.30 மணியளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
எனவே பாதுகாப்பு கருதி நாளை முதலமைச்சர் பயணம் செய்யும் சாலைகள், திருச்சி விமான நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
- திருச்சி தாராநல்லூர் வாலிபரிடம் பணம் பறிப்பு
- போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி
திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா( வயது 37) இவர் எடதெரு பொது கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாக்கி என்கிற ஜாக்கிஜான் (28) அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ. 2000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து ராஜா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணா (வயது 30 ).இவர் சத்திரம் பஸ் நிலையம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல் இரவு 11 மணிக்கு பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு வந்து கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் பால் சீலிங் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கல்லாப்பெட்டியில் பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து குணா கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி,
திருச்சியில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.
ஆனாலும் காய்ச்சல் குறையாததால் திருச்சி அரசு மருத்துவமனையல் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.
2 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முத்தரசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் இன்று அழைத்து நலம் விசாரித்தார்.
- திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில்மாநில அளவிலான பேச்சு போட்டி
- காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.
தொட்டியம்,
திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொறியியல் மாணவ- மாணவிக ளுக்கான மாநில அளவி லான பேச்சுப்போட்டி தொட்டியம் கொங்குநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த போட்டியை முசிறி எம்.எல்.ஏவும், திருச்சி தி.மு.க .வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும், கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவியும் மரியாதை செய்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கொங்குநாடு பொறியியல் கல்லூரி சேர்மன் பி.எஸ்.கே .பெரியசாமி மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் இன்ஜினியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் டாக்டர் அசோகன் அனைவரையும் வரவேற்றார். இந்தப் போட்டியில் "தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்கக் கல்வியும் தெற்குச்சூரியன், கலைஞரும் தமிழும் என்ற ஐந்து தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் கொங்குநாடு கல்லூரி பொறியியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், தொட்டியம் வெற்றி விநாயகா கல்லூரி மாணவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் நடுவர்களாக பட்டதாரி ஆசிரியர் பிரேம்குமார், கொங்குநாடு கல்லூரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஆர். மகேஸ்வரி உதவி பேராசிரியர் டாக்டர் டி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இதில் தேர்வாகும் மாணவர்கள் படிப்படியாக பல்வேறு போட்டியில் வெற்றி பெற்று தமிழக அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் பொறியியல் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரும், தி.மு.க . கழகத் தலைவருமான மு.க. ஸ்டாலின் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பா ளர்கள் இன்ஜினியர் தொட்டியம் வி.கே.நல்லி யண்ணன், ராஜேஷ்கண்ணா, முருகானந்தம், ரெங்கராஜ், வெற்றிச்செல்வன், மாதேஸ்வரன், கலைச்செல்வன், மற்றும் திருச்சி வடக்கு மாவட்ட ஆதி திராவிட நல அமைப்பாளர் வரதராஜ புரம் டி.கே.மகாமுனி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- திருச்சி - லால்குடிகூட்டுறவு மேலாண்மை டிப்ளமோபயிற்சியில் சேர நாளை கடைசி நாள்
- 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி,
திருச்சிராப்பள்ளி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தின் முதல்வர், லால்குடி கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி நிலையத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருச்சி, லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் டிப்ளமோ பயிற்சியில் சேருவதற்கு செப்டம்பர் 22-ந்தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பின் படி விண்ணப்பிக்க நாளை 6-ந்தேதி கடைசி நாள்.
இப்பயிற்சியில் பிளஸ் 2, பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு முடித்து டிப்ளமோ படித்து பின்னர் பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்டு 1-ந்தேதி 17 வயது நறைவு பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் மூலமாக ரூ.200. பயிற்சி கட்டணம் 18 ஆயிரத்து 750 ரூபாய். பயிற்சி காலம் ஓராண்டு. பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை மேலாண்மை நிலையத்திற்கு எடுத்து வந்து நேரில் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மேலாண்மை நிலையம், பழைய குட்ஷெட் ரோடு, அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடி வளாகம், சிங்காரத்தோப்பு என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ அல்லது 0431-2715748, 9994647631 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இதே போல லால்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், லால்குடி கூட்டுறவு பல்தோழில் நுட்ப பயிலக கல்லூரி வளாகம், அய்யன் வாய்க்கால் ரோடு, ஆங்கரை கிராமம், லால்குடி என்ற முகவரியில் முதல்வரை நேரிலோ, அல்லது 9489955214 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.
- சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். இந்த நிலையில் மேலூர் ரோடு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி அனைவரும் இறங்கும் போது திடீரென்று ராஜா மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கதிர்காபாளையத்தை சேர்ந்தவர் ரஜினி முருகேசன் (வயது 40). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட வந்தார். பின்னர் அவர் திடீரென்று காணாமல் போய் விட்டார்.
இதுகுறித்து அவரது உறவினர் தண்டபாணி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஜினி முருகேசனை தேடி வருகின்றனர்.
ராம்ஜிநகர்
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நவலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில், மணிகண்டம் சாலை சந்திப்பு மற்றும் நவலூர் குட்டப்பட்டு பிரிவு சாலைப் பகுதியில் அதிக விபத்து நடக்கும் பகுதியா உள்ளது. மேலும் அதிக வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் உள்ளது.
அந்த பகுதியில் அடிக்கடி விபத்தி ஏற்படுவதால் அந்த பகுதியில் குறுகிய கால நடவடிக்கையாக காவல் துறை மூலம் வேகத்தடுப்புகள் ( பேரிகார்டு) அமைக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை சார்பில் பாதுகாப்பு வேக தடுப்பு முன்னெச்சரிக்கை சமிக்கைகள் அமைக்க வேண்டும். நீண்ட கால நடவடிக்கையாக உயர்மட்ட பாலம் அமைக்க ஊராட்சி சார்பாக நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு லெட்சுமணன் மனு கொடுத்தார்.
மேலும் இக்கூட்டத்திற்கு வந்திருந்த நவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம், பள்ளிக்குச் செல்லும் நேரமான காலை 8 மணி மற்றும் மீண்டும் வீடு திரும்பும் நேரம் மாலை 4 மணிக்கும் அரசு பேருந்து வசதி இல்லை. எனவே எங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தர ஊராட்சியின் சார்பில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போக்குவரத்து அதிகாரிகளிடம் உடனடியாக பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவ மாணவிகளிடம் உறுதியளித்தார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட் ராஜதுரை, துணைத் தலைவர் கலையரசன், ஊராட்சி செயலாளர் பாலச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொன்மலையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
- பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருச்சி,
திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் பொன்மலை பட்டியில் உள்ள மதுபான கடையில் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து செல்வராஜ் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் பணம் பறித்த திருவெறும்பூர் திருநகரை சேர்ந்த விஷால் ( 23) பொன்மலை பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் ( 22 ) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் கலைஞர் நகரை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன். இவரது மகன் அஸ்வின் ராஜ் (வயது 14) இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் படிப்பில் சரியாக அஸ்வின் ராஜ் கவனம் செலுத்தாத காரணத்தால் அவரது சகோதரர் தனுஷ் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அஸ்வின் ராஜ் வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றார்.
பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்கவில்லை இது குறித்து அவரது சகோதரர் தனுஷ் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துறையூர் தொகுதியில்பகுதிநேர ரேஷன் கடை
- சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேனப்பநல்லூர் புதூர் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேனப்பநல்லூர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்களை பெற்று வந்தனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் தங்களது பகுதியிலேயே, பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தருமாறு துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமாரிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. பகுதி நேர ரேஷன் கடையை தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமதாஸ், காவிரி கணேசன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், ஆதிதிராவிடர் நலக்குழு கஸ்டம்ஸ் மகாலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் சரண்யா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ,அரசு அலுவலர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- துறையூர் நகராட்சியில்சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள்
- 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் (பொ) ராமர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகராட்சி பகுதியில், தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வரும், 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், வீரமணிகண்டன், அம்மன் பாபு உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், நகரத் துணைச் செயலாளர் இளங்கோ,நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






