கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு

திருச்சி தாராநல்லூர் வாலிபரிடம் பணம் பறிப்புபோலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறிப்பு
Published on

திருச்சி 

திருச்சி தாராநல்லூர் விஸ்வாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா( வயது 37) இவர் எடதெரு பொது கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார்.அப்போது அங்கு வந்த திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாக்கி என்கிற ஜாக்கிஜான் (28) அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார்.ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி கத்தி முனையில் அவரிடமிருந்து ரூ. 2000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து ராஜா காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி ஜாக்கியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com