டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு

பொன்மலையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்புபொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறிப்பு
Published on

திருச்சி, 

திருச்சி கொட்டப்பட்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 55). இவர் பொன்மலை பட்டியில் உள்ள மதுபான கடையில் பாரில் வேலை பார்த்து வருகிறார். இவர் பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து செல்வராஜ் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரிடம் பணம் பறித்த திருவெறும்பூர் திருநகரை சேர்ந்த விஷால் ( 23) பொன்மலை பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் ( 22 ) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து 2 பேரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com