என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேக்கரியை உடைத்து கொள்ளை
    X

    பேக்கரியை உடைத்து கொள்ளை

    சத்திரம் பஸ் நிலையத்தில்பேக்கரியை உடைத்து கொள்ளை

    திருச்சி

    திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணா (வயது 30 ).இவர் சத்திரம் பஸ் நிலையம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் இரவு 11 மணிக்கு பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு வந்து கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடைக்குள் பால் சீலிங் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் கல்லாப்பெட்டியில் பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் விலை உயர்ந்த ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து குணா கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×