என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து வசதி கேட்டு மாணவ-மாணவிகள் கோரிக்கை
ராம்ஜிநகர்
திருச்சி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நவலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில், மணிகண்டம் சாலை சந்திப்பு மற்றும் நவலூர் குட்டப்பட்டு பிரிவு சாலைப் பகுதியில் அதிக விபத்து நடக்கும் பகுதியா உள்ளது. மேலும் அதிக வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகவும் உள்ளது.
அந்த பகுதியில் அடிக்கடி விபத்தி ஏற்படுவதால் அந்த பகுதியில் குறுகிய கால நடவடிக்கையாக காவல் துறை மூலம் வேகத்தடுப்புகள் ( பேரிகார்டு) அமைக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலை சார்பில் பாதுகாப்பு வேக தடுப்பு முன்னெச்சரிக்கை சமிக்கைகள் அமைக்க வேண்டும். நீண்ட கால நடவடிக்கையாக உயர்மட்ட பாலம் அமைக்க ஊராட்சி சார்பாக நெடுஞ்சாலைத் துறையை வலியுறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு லெட்சுமணன் மனு கொடுத்தார்.
மேலும் இக்கூட்டத்திற்கு வந்திருந்த நவலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஊராட்சி மன்ற தலைவரிடம், பள்ளிக்குச் செல்லும் நேரமான காலை 8 மணி மற்றும் மீண்டும் வீடு திரும்பும் நேரம் மாலை 4 மணிக்கும் அரசு பேருந்து வசதி இல்லை. எனவே எங்களுக்கு அரசு பேருந்து வசதி செய்து தர ஊராட்சியின் சார்பில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போக்குவரத்து அதிகாரிகளிடம் உடனடியாக பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவ மாணவிகளிடம் உறுதியளித்தார்.
இக்கிராம சபை கூட்டத்தில் கவுன்சிலர்கள் சுபாஷினி சண்முகம், டெல்பின் டேவிட் ராஜதுரை, துணைத் தலைவர் கலையரசன், ஊராட்சி செயலாளர் பாலச்சந்திரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






