என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள்
- துறையூர் நகராட்சியில்சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள்
- 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது.
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அலுவலகத்தில் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் தலைமை தாங்கினார். நகர் மன்ற துணைத் தலைவர் மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் (பொ) ராமர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் துறையூர் நகராட்சி பகுதியில், தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வரும், 11 வியாபாரிகளுக்கு விலையில்லா விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், வீரமணிகண்டன், அம்மன் பாபு உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள், நகரத் துணைச் செயலாளர் இளங்கோ,நகராட்சி பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






