ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த கோவை பக்தர் திடீர் மரணம்: இன்னொரு வாலிபர் மாயம்

புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர்.சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த கோவை பக்தர் திடீர் மரணம்: இன்னொரு வாலிபர் மாயம்
Published on

திருச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் செல்வி (வயது 28). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தூர் செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா (34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் புதுமண ஜோடி இருவரும் குடும்பத்தினருடன் ஒரு காரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்தனர். இந்த நிலையில் மேலூர் ரோடு பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்தி அனைவரும் இறங்கும் போது திடீரென்று ராஜா மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதையடுத்து அவரை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கதிர்காபாளையத்தை சேர்ந்தவர் ரஜினி முருகேசன் (வயது 40). இவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட வந்தார். பின்னர் அவர் திடீரென்று காணாமல் போய் விட்டார்.

இதுகுறித்து அவரது உறவினர் தண்டபாணி ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஜினி முருகேசனை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com