என் மலர்
தேனி
- தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது
- இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. மாலையில் 133அடியை எட்டும்.
கூடலூர்:
தேனி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையின் காரணமாக முல்லை ப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 120 அடியாக இருந்த நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 132.60 அடியாக உள்ளது. 2407 கன அடி நீர் வருகிறது. 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று மாலைக்குள் 133 அடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பம் பள்ள த்தாக்கு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயரும் என எதிர்பார்த்துள்ளனர். இதனால் அவர்கள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வைகை அணையின் நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. 705 கன அடி நீர் வருகிறது. 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடியாக உள்ளது. 133.30 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 4, தேக்கடி 0.2, சோத்துப்பாறை 5 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.
- 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
- கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 1½ கி. மீ தொலைவில் அமைந்துள்ள புதுக்காலனி பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் வஞ்சி ஓடை உள்ளது.
போடி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த வஞ்சி ஓடையை தாண்டியதும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லை தொடங்குகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டி ருந்தது.
நாளடைவில் இப்பகு தியில் விவசாயம் முற்றிலும் அழிந்து இப்பகுதி முழுவதும் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு தற்போது இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.
தற்போது மழைக்காலம் என்பதால் பொதுப்ப ணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வஞ்சி ஓடைப்ப குதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி வஞ்சி ஓடை கரைகளை பலப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
ஏற்கனவே சேதமடைந்த பாலத்தின் அருகே கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.
இதனால் ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்க பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தநிலையில் இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்களால் உருவாக்கப்பட்ட பாலம் என்பதால் போடி நகராட்சி நிர்வாகமும் அணைக்கரை ப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைத்து தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே ஜெயம் நகர் விரிவாக்க பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- சோதனையில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்:
கம்பம் தெற்கு போலீசார் நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது கேரள மாநில டோக்கன் லாட்டரிகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவா (வயது 48) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
- கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கூடலூர்:
கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
தற்போது பருவமழை யால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துணைக்குழுவினர் ஆய்வு செய்தனர். மத்திய நீர்வள ஆணையர் செயற்பொறி யாளர் சதீஷ் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் பெரியாறு சிறப்பு கோட்ட பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள் கட்டபணை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அணில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் உள்ளிட்ட குழுவினர் மெயின் அணை, பேபி அணை, கேலரிபகுதி மதகு பகுதிகளை ஆய்வு செய்த னர்.
கசிவுநீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாலையில் ஆலோசனை க்கூட்டம் குமுளி 1ம் மைலில் உள்ள மத்திய கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடை பெற்றது. இதன் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறுகையில்,
அணையில் உள்ள 13 மதகுகளில் 2,4,5வது மதகுகளின் இயக்கம் சரிபார்க்கப்பட்டது. மேலும் கசிவுநீர் அளவு 62 லிட்டர் என நீர்மட்டத்திற்கு மிகத்துல்லியமாக உள்ளது. இதனை அணை மிகுந்த பலத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அணையில் வழக்க மான பணிகளை மேற்கொள்ள பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி வழங்கக்கோரி குழு தலைவரை வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.75 அடியாக உள்ளது. அணைக்கு 1324 கனஅடி நீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. 635 கனஅடி நீர் வருகிறது. 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 124 கனஅடி நீர் வருகிறது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 64.34 கனஅடி நீர் வருகிறது. 30 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 21, பேக்கரி 27.4, கூடலூர் 2.8, சண்முகாநதி அணை 0.8, உத்தமபாளையம் 1 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.
- பாலசமுத்திரம் தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
- அடிப்படை வசதிகள் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்களில் முறையான கழிவுநீர் ஓடை கட்டி தரப்படவில்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சாலைகளில் மழைநீர் கழிவுநீரோடு தேங்கி நிற்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் கொசு க்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்க ளுக்கு ஒருவாரத்திற்கும் மேலாக குடிநீர் வினி யோகம் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடி க்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திர மடைந்த கிராம மக்கள் இன்று காலை பள்ளி மாணவ-மாணவிகளுடன் பந்துவார்பட்டி, பாலசமுத்திரம் வழியாக ஆண்டிபட்டி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்த னர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஊராட்சிமன்ற தலைவர் கனிராஜ் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதனை ஏற்க மறுத்து குடிநீர் வினியோகம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
- சபரிமலை மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.
- வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கூடலூர்:
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வரு கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் தமிழகம் வழியாகவே கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
நாளை கார்த்திகை மாத பிறப்பையொட்டி இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் தொடங்குவதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர்.
வனப்பகுதி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு இடுக்கி மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சத்திரம் வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், அழுதகடவு வழியாக காலை 7 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும் முக்குழி வழியாக காலை 7 மணி முதல் மதியம் 3.30 மணி வரையிலும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம். அங்கிருந்து சத்திரத்துக்கு திரும்ப காலை 9 மணி முதல் முதல் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலை சீசனை யொட்டி பல்வேறு ஓட்டல்கள், பேக்கரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் விலை நிர்ணயம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டு ள்ளார்.
பத்தினம்திட்டா, கோட்ட யம் மாவட்டங்களில் உணவு வகைகளின் தரம், அளவு ஆகியவற்றை கணக்கிட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.
- கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது.
- அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றினர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் - போடி இடையே மாநில நெடுஞ்சாலை கோம்பை வழியாக செல்கிறது. இங்கு சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறைக்கு ஆக்கிரமிப்பின் உண்மை த்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறையினர் உரிய அறிவிப்பு ஆணை வழங்கினார்.
இதனையடுத்து அப்பகுதி யில் உள்ள கருப்பசாமி கோவில் பீடம் ஆக்கிர மிப்பில் இருந்தது தெரிய வந்தது. அந்த கோவில் பீடத்தை போலீசார் பாது காப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சா லைத்துறையினர் அகற்றி னர். மேலும் கோம்பை போலீஸ் நிலையம் அருகே உள்ள பாலம் முதல் கால்ந டை ஆஸ்பத்திரி வரை நெடுஞ்சாலையோரத்தில் இருந்து 2 வீடுகள் உள்பட நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்புகளையும் அகற்றினர்.
ஆண்டு தோறும் நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோர ஆக்கிரமிப்பு களை தொடர்ந்து அகற்றி வருகின்றனர். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அதே இடத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படு கிறது. எனவே அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.
- ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஜீவாநகரை சேர்ந்த கருப்புச்சாமி மகன் ரமேஷ் (வயது 47). இவருக்கும் கிருஷ்ணவேணி (35) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். ரமேசுக்கு சொந்தமாக கேரள மாநிலம் உடும்பன் சோலையில் ஏலக்காய் தோட்டம் உள்ளது.
அவ்வப்போது அங்கு சென்று விவசாய பணிகளை கவனித்துவிட்டு வருவது வழக்கம். இதனிடையே கணவன், மனைவியிடையே குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று ரமேஷ் தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாகவும், தான் அவரை காப்பாற்றியதாகவும் கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணவேணி தனது கணவரை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கழுத்து, மூக்கு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயங்கள் மற்றும் நகக்கீறல்கள் இருந்தது.
மேலும் அவரது மர்ம உறுப்பிலும் பலத்த காயம் இருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் கிருஷ்ணவேணியை இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
எனது கணவர் தினமும் செக்ஸ்தொல்லை கொடுத்து வந்தார். ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் நான் அதற்கு மறுத்து வந்தேன். இருந்தபோதும் அவரது தொல்லை நிற்கவில்லை. சம்பவத்தன்றும் என்னிடம் உறவுகொள்ள முயன்றபோது அவரை தாக்கி கீழே தள்ளினேன். மேலும் அவரை அடித்து தள்ளியதில் உடலில் காயங்கள் ஏற்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மர்ம உறுப்பில் மிதித்தும், கடித்தும் கொலை செய்தேன்.
அக்கம் பக்கத்தினரை நம்ப வைக்க அவர் தூக்கு போட்டதுபோல செட்டப் செய்தேன். இருந்த போதும் உடலில் காயங்கள் இருந்ததால் என்னால் தப்பிக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து ரமேசின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணவேணியை போலீசார் கைது செய்தனர்.
- குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் தகவல் தெரிவித்தனர்.
- உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்துறையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இளையநம்பி. இவர் அனுமந்தன்பட்டி தீட்டிபாைற சாலையில் உள்ள வள்ளியம்மன் குளம் அருகே கயிறு மில் வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் மில்லை பூட்டி சென்றனர். இந்த நிலையில் குடோன் மற்றும் தேங்காய் உரிமட்டை வைத்திருக்கும் பகுதியில் தீ பற்றியதாக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர் தீபக் மற்றும் பாண்டி ஆகியோர் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உத்தமபாளையம் மற்றும் கம்பம் தீயணைப்புத்து றையினர் இணைந்து போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதும் சுமார் ரூ. 7½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
- குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.
இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
தொடர் மழை காரணமாக வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. 71 அடி உயரம் கொண்ட அணையில் 70 அடியில் நீர் மட்டம் நிலைநிறுத்தப்பட்டு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 10ந் தேதி அணையின் நீர்மட்டம் 70.51 அடியாக இருந்தபோது பெரியாறு பிரதான கால்வாயின் கீழ் உள்ள முதல்போக பாசனத்திற்கு 900 கன அடி திறக்கப்பட்டது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் 5041 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பேரணை மேலூர் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக திருமங்கலம் பிரதான கால்வாயில் ஒருபோக பாசன நிலங்களுக்கு இன்று முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் இருப்பை பொறுத்து வினாடிக்கு 230 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்று முதல் பெரியாறு பாசன கால்வாயில் 900 கன அடி. திருமங்கலம் கால்வாயில் 230 கன அடி, மதுரை மாவட்ட குடிநீர் உள்பட 1899 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 597 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 70.28 அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ளது. 1053 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. வரத்து 147 கன அடி. திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 78.47 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
பெரியாறு 4.2, தேக்கடி 1.8, உத்தமபாளையம் 1.2, போடி 0.2, வைகை 3.6, மஞ்சளாறு 2, பெரியகுளம் 5, வீரபாண்டி 3.2, அரண்மனைபுதூர் 2, ஆண்டிபட்டி 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது.
- குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
தேனி:
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.






