என் மலர்tooltip icon

    தேனி

    • ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
    • அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அனைத்து பகுதிகளிலும் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பலநாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாகவும்,

    கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனம் (பார்மலின்) தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவ தாகவும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

    இதனையடுத்து தேனி மாவட்ட உணவுபாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜனகர் ஜோதிநாதன் தலைமையிலான மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர் கவுதமன் மீன்வள ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆண்டிப்பட்டி, வருசநாடு, கடமலைக்குண்டு பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். மீன்கள்களில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்டு உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தினர்.

    இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டு போன மீன்களை விற்பனை செய்த வியபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சுமார் 7 கிலோ கெட்டுப்போன மீன்கள் ரசாயன திரவம் ஊற்றி அழிக்கப்பட்டது.

    மேலும் 4 கிலோ பிளாஸ்டிக் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியா பாரிகளை எச்சரித்தனர்.

    • சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர்.

    இதையடுத்து, 15-வது நிதிக்குழு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா பிளாக், சிமென்ட் சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக திட்டப் பணிகளை மே ற்கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில், திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை யடுத்து சின்னஓவுலா புரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன.

    இதேபோல இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, தெருவின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த முள் தடுப்பு வேலியும் அகற்றப்ப ட்டது. அப்போது சின்ன மனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • வாலிபரை குத்தி கொல்ல முயன்ற வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கொலை வழக்கில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து மற்றொரு வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் கம்பம் சந்தை தெருவை சேர்ந்தவர் செந்தில்(28). இவரை கடந்த 17.5.2016-ந்தேதி கலைச்செல்வம்(28), அவரது தம்பி கலையர சன்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்ய முயன்றனர்.

    இதுகுறித்து கம்பம் நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உத்தம பாளையம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இதனிடையே கலையரசன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உதவி அமர்வு நீதிபதி சிவாஜி குற்றம்சா ட்டப்பட்ட கலை ச்செல்வத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

    • பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர்.
    • கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கூத்தனாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(50). இவரது வீட்டிற்கு பின்னால் குமார்(50) என்பவர் வசித்து வந்தார். முருகன் வளர்த்து வந்த கோழி குமார் வீட்டிற்கு சென்றதால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். சம்பவத்தன்று முருகன் வீட்டு கோழியை குமார் பிடித்து வைத்து கொண்டுள்ளார். அப்போது குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர். இதுகுறித்து முருகன் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    தங்கள் மீது புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த குமார் குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறு செய்தனர். மேலும் முருகனையும் கத்தியால் குத்தினர். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த முருகனின் மைத்துனர் வேல்சாமி (45) என்பவர் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அவரை குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழே தள்ளிவிட்டனர்.

    பலத்த காயத்துடன் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து குமார், அவரது மகன் ரெங்கேஸ்வரன், மருமகன் குணசீலன்(34), தங்கபாண்டி(26), பிச்சைமணி(40), முத்தீஸ்வரி(27) ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    கோழி மேய்ந்த தகராறு கொலை முடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி நடைபெற உள்ளது.
    • இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்ட நிர்வாகம் சார்பாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இந்த கல்விக் கடன் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண் மற்றும் தோட்டக்கலை கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் மாநில, மத்திய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல்லூரிகளில் படிக்கின்ற முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவ- மாணவிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    தேனி மாவட்டதில் உள்ள அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள் இந்த முகாமில் கலந்துகொண்டு, மாண வர்கள் இணையதளத்தில் கல்விக்கடன் விண்ண ப்பத்தை பதிவு செய்வத ற்கும், பரிசீலனை செய்வத ற்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

    இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், குடும்ப அட்டை நகல், பான் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் நகல், கவுன்லிங் மற்றும் கல்லூரி அட்மிஷன் கடிதம், கல்விக்கட்டண விவரம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.

    இந்த அரிய வாய்ப்பினை கல்லூரி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • மாடு மேய்த்து கொ ண்டிருந்த மூதாட்டியை தாக்கி கொலை செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இவ்வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழகாமக்காபட்டியை சேர்ந்த பெருமாள் மகன் குமரேசன்(31). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து திருமண த்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த செல்வம் மனைவி பொன்னுத்தாய்(56) என்பவர் தவறான தகவல்களை தெரிவித்து குமரேசனுக்கு திருமணம் நடக்காமல் இடையூறு செய்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி மாடு மேய்த்து கொ ண்டிருந்த பொன்னு த்தாயை குமரேசன் தாக்கி ெகாலை செய்ய முய ன்றார். இது குறித்து பொன்னுத்தாய் கொடுத்த புகாரின்பேரில் ஜெயமங்க லம் போலீசார் வழக்குபதிவு செய்து கும ரேசனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு தேனி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாதன் கொலை முயற்சி வழக்கில் குற்றம்சா ட்டப்பட்ட குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை யும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.
    • நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் வைகை அணைப்பகுதியில் உள்ள வைகை இல்லத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பான கண்காணி ப்புக் குழுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் தலைமையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா முன்னிலையில் நடைபெற்றது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முதல்-அமை ச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கு கண்காணிப்புக்குழு அலுவலர்களை நியமித்து, மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதனடிப்படையில் தேனி மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவ லகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவல கங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை கண்காணிக்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான நேரத்தில் உரிய வசதிகளை செய்து தருதல் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும், உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளி கல்வித்துறை, பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறும்பா ன்மையினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை மற்றும் நெடுஞ்சா லைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோ சனை மேற்கொ ண்டார்.

    மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் வைகை அணை பகுதியை பார்வை யிட்டு, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் வைகை அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தொடர் மழையால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
    • மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கடந்த மாதம் பெய்த தொடர்மழையால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்தது. கடந்த 9ம் தேதி 71 அடி உயரம் கொண்ட அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை 70 அடியில் நிலைநிறுத்தி வந்தனர். 10ம் தேதி மேலூர், கள்ளந்திரி மற்றும் 15ம் தேதி முதல் திருமங்கலம் பகுதி விவசாய பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதாவது மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடி உள்பட அணையிலிருந்து 1899 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    தற்போது மழை ஓய்ந்துவிட்ட நிலையில் அணைக்கு 461 கனஅடி நீர் மட்டுமே வருகிறது. இதனால் நீர்மட்டம் வேகமாக சரிந்து 68.93 அடியாக உள்ளது.

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. அணைக்கு 2001 கனஅடி நீர் வருகிறது. அணையி லிருந்து 105 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. வருகிற 100 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 140 கனஅடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர்.

    கூடலூர்:

    கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக அதிகளவில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ள்ளது. கார்த்திகை முதல் நாளன்று மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி இங்குள்ள பூதநா ராயணன் கோவிலில் மாலை அணிந்து ெகாள்வது வழக்கம்.

    ஆனால் வனத்துறை அருவியில் நீராட தடைவிதித்த போதிலும் ஆற்றுப்படுகையில் இன்று காலை ஏராளமான அய்யப்ப பக்தர்கள் நீராடி பின்னர் இங்குள்ள கோவிலில் வழிபட்டு சென்றனர். அருவியில் நீராடுவதற்கு வனத்துறை யினர் தடைவிதித்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுருளி அருவிக்கு நீராட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். இதுமட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம். தற்போது மழை நின்றுவிட்டதால் அருவியில் குளிக்க அனுமதி வழங்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரிக்கு திருமணமாகி 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் தனது 13 வயது மகளுக்கு அவரது தந்தை அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் 2 மாதமாக சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்த னர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற த்தில் நடந்து வந்தது.

    அரசு தரப்பில் வக்கீல் தவமணி செல்வி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிந்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வியாபாரிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் 1½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.

    • மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.
    • 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் முடிவுற்கு பயன்பாட்டுக்கு வந்தன.

    கம்பம்:

    கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை கம்பம் கிழக்குப் பகுதியில் முல்லைப்பெரி யாறு ஆற்றின் கரை யோரத்திற்கு சென்று தகனம் செய்து வருகின்றனர்.

    இங்கு மரக்கட்டைகள், வறட்டி உள்ளிட்டவைகளை கொண்டு உடல்கள் எரிக்கப்படுகின்றன. இதே போல் நகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவீன தகன மேடை அமைக்கப்பட்டு பயன்பா ட்டில் இருந்து வந்தது. மரக்கட்டைகளைக் கொண்டு இயங்கும் தகன மேடையால் அதிக சாம்பல் உருவாகிறது. அவற்றை அப்புறப்படுத்து வதே சிரமமாக உள்ளது.

    இதில் அதிக அளவு புகை வெளியேறி காற்று மாசுவை ஏற்படுத்துகிறது. மழைக் காலங்களில் உலர்ந்த விறகுகள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், நவீன எரிவாயு தகன மேடையின் தரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது, அதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் 15 வது மத்திய குழு மான்யம் மூலம் ரூ 43 லட்சம் நிதி பெறப்பட்டு கியாஸ் எரிவாயு மூலம் எரியக் கூடிய வகையில் எந்திரங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வந்தன.

    இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் நவீன எரிவாயு தகன மேடை நிறுத்தி வைக்கப்பட்டது. பணிகள் நிறைவடை ந்ததையடுத்து கியாஸ் எரிவாயு பொருத்தப்பட்ட தகன மேடை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது.

    இதையடுத்து தகனமேடை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் தொண்டு நிறுவன த்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது.இதற்கு நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் வாசுதே வன்,நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் சுல்தான் சல்மான் பார்சி மற்றும் நகராட்சி பணி யாளர்கள் உடனிருந்தனர்.

    • தேனியில் வெவ்வெறு சம்பவங்களில் வாலிபர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கொடைக்கானல் நாயுடுபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவருக்கும் பிரியங்கா என்பவருக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்த கார்த்திக் தேனியில் உள்ள ஓட்டலில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனக்கு யாரும் இல்லை என கூறி புலம்பி யுள்ளார்.

    சிறிது நேரத்தில் ஓட்டல் மாடியில் அவர் தங்கி இருந்த இடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்க ளுக்கு ஓட்டல் நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இது குறித்து தேனி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கண்டமனூர் அருகே கணேசபுரத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கண்டமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (55). கடந்த 3 வருடங்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. இதனால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×