என் மலர்
தேனி
- மின்அதிகாரியின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.
- அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் செல்லும் சாலையில் கிருஷ்ணாநகர் பகுதி உள்ளது.
இங்குள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏலக்காய் வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர்.
இதேபகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகளுக்கு மங்களூரில் வளைகாப்பு நடைபெறுவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.
அன்னலட்சுமியின் உறவினரான மணிகண்டன் தினமும் வீட்டுமுன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.
இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ேமாப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீட்டில் 30 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாகவும், சுமார் ரூ.2 லட்சம் பணம் இருந்ததாகவும் அன்ன லட்சுமி தெரிவி த்துள்ளார். கொள்ளையடித்த நபர் அருகில் இருந்த ஒரு மேர்டடார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போடியில் உள்ள ஒரு ஜவுளிகடைக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார். ேமலும் எந்தவித பதட்டமும் இல்லாமல் கடைக்குள் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அது தனக்கு சரியாக உள்ளதா என போட்டுப்பார்த்து 10-க்கும் மேற்பட்ட பேண்ட்-சட்டைகளை திருடி ச்சென்றார்.
இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் போலீஸ் நிலையத்தில் அளிக்க ப்பட்டதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையன தேடி வருகின்றனர். இதனிடையே மற்றொரு சம்பவமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் கிருஷ்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வா ரியஅதிகாரி முருகதாஸ் என்பவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.
இன்று காலை அவரது மகள் வீட்டிற்கு வந்தபோது கொள்ளை நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வியாபாரி ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பொம்மைய கவுண்ட ன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
பாலமுருகன் ஜவுளிவி யாபாரம் செய்து வந்தார். மது போதைக்கு அடிமை யானதால் வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டது. ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தார்.
இதனால் அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.
கம்பம்:
கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தேனி மாவட்ட தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார்.
வ. உ .சி திடலில் தொட ங்கிய ஊர்வலத்திற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் துரை.தங்கமாயன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தினை தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்க செயலாளர் ஜெய பாண்டியன், கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், கம்பம் இந்து நாடார் சங்க நிர்வாகி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஊர்வலமானது வ.உ.சி திடலில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, எல்.எப்.மெயின்ரோடு, சிலப்பதிகாரம் தெரு, நெல்லு குத்தி புளியமரம் தெரு, கூலத்தேவர் முக்கு, வேலப்பர் கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல், பழைய பஸ் நிலையம், வரதராஜபுரம், கொண்டித்தொழு வழியாக வழியாக வ.உ .சி திடலில் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத் திடலில் ஆர். எஸ். எஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே, ஒருங்கிணைந்த செயல்பாடு, சுய கட்டுப்பாட்டு திற ன்களை வெளிக்காட்டினர்.
பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கோட்ட பொறு ப்பாளர் மகேஷ் சிறப்புரை யாற்றினார்.தேனி மாவட்டத்தில் இருந்து திரளான ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை முன்னிட்டு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.
- கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
- முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 5575 மி.கன அடியாகும். தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது.
இதனால் வீரபாண்டி வரை உள்ள முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறு கையில், கம்பம் பள்ள த்தாக்கு பாசனத்திற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தண்ணீர் தேவை இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுவது தேைவயற்றது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 30ந் தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். குறைந்தபட்சம் 136 அடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். எனவே நீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றார்.
அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுவ தால் லோயர்கேம்ப் பெரி யாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அணைக்கு 1146 கன அடி நீர் வருகிறது.
கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அதனை ஈடுகட்டவே பெரியாறு அணையில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என்ற னர்.
வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 2099 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 83 கன அடி நீர் வருகிறது. அது முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
- சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நோய் தாக்கப்பட்ட கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி தானாக உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்து கொடிகளை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாமல் மஞ்சள் நோய் வேகமாக பரவி வருகிறது.
இதுதொடர்பாக பாதிப்படைந்த விவசாயிகள் கூறுகையில் - வருடம் தோறும் நவம்பர்,டிசம்பர், மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், அவரை உள்ளிட்ட விவசாயம் நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் மஞ்சள் நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வருகிறது.
இதனால் விவசாயி களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளா ண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மஞ்சள் நோயை கட்டுப்ப டுத்த வேண்டும். மற்றும் பாதிப்படைந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
- இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
தேனி:
தமிழக அரசு ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் ஆகியோர் உயிர்வாழ் சாற்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட த்தில் 800 பேர் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.
வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. தங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரரிடம் ஆதார் கார்டு, செல்போன் எண், பி.பி.ஓ.எண்., ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தெரிவித்து தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்களும் வழங்க ப்பட்டுள்ளன. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் கோட்ட அதிகாரி தெரி வித்துள்ளார்.
- தேனி 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.
- அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
தேனி:
தேனி என்.ஆர்.டி.மக்கள் மன்றத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ஆரோக்கியகுமார் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா திட்ட விளக்கஉரையாற்றுகிறார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார், ராமகிரு ஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறுகிறார்.
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
- நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.
தேனி:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சபரிமலை அய்யப்பன் ேகாவிலில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எனவே போக்குவரத்து இடையூறு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் வாகனங்கள் குமுளி, கூடலூர், கம்பம் வழியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கம்பத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் அதன்படி சென்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள ேவப்பம்பட்டியை சேர்ந்த காமாட்சி மனைவி சுஜிதா (வயது24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று சுஜிதா வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் மாயமானார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தியபிரதேசம் மாநிலம் முறைனா மாவட்டத்தை சேர்ந்தவர் சோனம் (24). இவர் கடந்த 10 மாதங்களாக தேனி கோட்டூர் பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவரது கணவர் சத்தியேந்திரன் வீட்டிற்கு வந்தபோது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது.
- முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடலூர்:
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அணைகள் முழுகொள்ளளவை எட்டியது. மேலும் தண்ணீர் தேவைப்படாததால் முல்லைபெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை முற்றிலும் ஓய்ந்துவிட்ட நிலையில் அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. நேற்றுவரை முல்லைபெரியாறு அணையில் 105 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலைமுதல் நீர்திறப்பு 1000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு 1209 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையில் நேற்று 1899 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக நீர்திறப்பு 2099 கனஅடியாக உயர்த்தப்பட்டது. அணைக்கு 558 கனஅடிநீர் வருகிறது. நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிற நிலையில் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. 115 கனஅடிநீர் வருகிறது. அது அப்படியே திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கோஷ்டி மோதலில் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டதில் 12 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசை பகுதியில் உள்ள பராசக்தி கோவிலை 75 ஆண்டுகளுக்கு மேல் இரு சமூகத்தினர் பராமரித்து வந்தனர். இதில் ஒரு தரப்பினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோவில் முன்பு இருந்த காலி இடத்தில் கான்கிரீட் போட்டு கம்பிவேலி அமைத்தனர்.
ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் அந்த கம்பி வேலியை அவர்கள் அகற்றினர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து பின்னர் கல், உருட்டுகட்டை, கம்பி உள்ளிட்ட பொருட்களால் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் பெண்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் உத்தரவுப்படி ஏ.எஸ்.பி மதுக்குமாரி, சின்னமனுர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்ல அறிவுறுத்தினர். இந்த தாக்குதலில் ஸ்ரீரங்கன், முருகன், தாமோதரன், தியாகராஜன், செந்தட்டி, செல்வக்குமார், செல்வி, முத்துக்குமார், அர்ச்சுணன், கலைவாணி, சீனியம்மாள், அழகுமலை, சிவா உள்பட 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் போலீசார் 8 பேரும் காயம் அடைந்தனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் பார்த்திபன், நவீன், சிவா, கண்ணன் உள்பட 11 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.
- எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.
தேனி:
கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் கட்டு ப்பாட்டின்கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் , கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு அச்சகங்கள், மாவட்ட கூட்டுறவு ஒன்றியம மற்றும் இதர சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிக்கை வெளியிடப்பட்டது.
இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்ப தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்பட்டன. இதற்கான எழுத்துதேர்வு டிசம்பர் 24-ந்தேதியன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது. இதற்கான கல்விதகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கூட்டுறவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நேரடி பயிற்சி , அஞ்சல் வழி, பகுதிநேர பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துதேர்வு கொள்குறி வகையில் 200 வினாக்களுடன் 170 மதிப்பெண்களுக்கான தேர்வாக இருக்கும். மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு தேனி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் விபரம் தெரிந்து கொள்ளலாம் என தேனி மாவட்ட இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.






