search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் இடிந்து விழுந்த பாலத்தால் மக்கள் அச்சம்
    X

    குடியிருப்பு பகுதியில் இடிந்து விழுந்த பாலத்தை படத்தில் காணலாம்.

    போடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் இடிந்து விழுந்த பாலத்தால் மக்கள் அச்சம்

    • 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
    • கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியில் இருந்து சுமார் 1½ கி. மீ தொலைவில் அமைந்துள்ள புதுக்காலனி பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் பின்பகுதியில் உள்ள ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் வஞ்சி ஓடை உள்ளது.

    போடி நகராட்சிக்கு ட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இந்த வஞ்சி ஓடையை தாண்டியதும் அணைக்கரைப்பட்டி ஊராட்சி எல்லை தொடங்குகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு அணைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக போடி பகுதியில் இருந்து சிறிய பாலம் அமைக்கப்பட்டி ருந்தது.

    நாளடைவில் இப்பகு தியில் விவசாயம் முற்றிலும் அழிந்து இப்பகுதி முழுவதும் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு தற்போது இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலத்தில் மிகப்பெரிய ஓட்டை விழுந்து மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது.

    தற்போது மழைக்காலம் என்பதால் பொதுப்ப ணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள வஞ்சி ஓடைப்ப குதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி வஞ்சி ஓடை கரைகளை பலப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.

    ஏற்கனவே சேதமடைந்த பாலத்தின் அருகே கனரக பொக்லைன் எந்திரம் மூலம் வஞ்சி ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாலம் முழுவதும் இடிந்து விழுந்தது.

    இதனால் ஜெயம் நகர் குடியிருப்பு விரிவாக்க பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    பாலத்தை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தநிலையில் இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்களால் உருவாக்கப்பட்ட பாலம் என்பதால் போடி நகராட்சி நிர்வாகமும் அணைக்கரை ப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பாலத்தை சீரமைத்து தருவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    எனவே ஜெயம் நகர் விரிவாக்க பகுதி பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×