search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Grievance Meeting"

    • வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது.
    • குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 17ந் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற உள்ளது. எனவே தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகள் சம்பந்தமான திட்டங்கள் மற்றும் குறைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும் தங்களது கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கலாம். விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி, அதன்மீது தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அடுத்து நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் நேரிடையாக தெரிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    • கலெக்டர் அலுவலக 2-ம் தள கூட்ட அறை எண்.215-ல் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய தபால் துறை தீனதயாள் ஸ்பேர்ஸ் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தபால் தலை சேகரிப்பு குறித்த வினாடி, வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 6 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தபால் தலை சேகரிப்பு மன்றம் அல்லது தபால்தலை வைப்பு கணக்கு உள்ளவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்படிவம் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டி அக்டோபர் மாதம் 15-ந்தேதி நடக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.
    • சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அப்சர்வேட்டரி சாலை சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக நகர்மன்ற தலைவர் செல்லத்துரையிடம் கொடைக்கானலில் நடந்த விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் புகார் அளித்தனர்.

    இதனைதொடர்ந்து நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், கோட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை உதவிகோட்டபொறியாளர் ராஜன், ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர்.

    சேதமடைந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் 1-வது வார்டு கவுன்சிலர் கலாவதி தங்கராஜ், மாவட்ட பிரதிநிதி இளங்கோவன், 8-வது வார்டு கவுன்சிலர் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
    • மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேல்மலை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வட்டாட்சியர் முத்துராமன்,வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள்,வனத்துறை ஊழியர்கள்,மருத்துவத்துறையினர்,வருவாய்த் துறையினர், வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கொடைக்கானல் மேல்மலைகிராமங்களுக்கு செல்லும் தார் சாலைகள் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையப்பகுதியில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விவசாய பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வது மிகவும் கடினமானதாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். எனவே மேல்மலை கிராம பகுதியில் எரிபொருள் மையம் ஒன்று அமைக்க வேண்டும் என்றனர்.

    மேல்மலை கிராமப் பகுதியில் விவசாயப் பொருள்களை எடுத்து கொண்டு செல்லும்போது எரிபொருள் நிரப்புவதற்கு கொடைக்கானலுக்கு வர வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. விவசாய மோட்டார்களுக்கும், விவசாய வேலைகளுக்காக டிராக்டர் போன்றவைகளை பயன்படுத்தவும்,விவசாயப் பொருள்களை ஓட்டி செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதிலும் கடும் சிரமம் உள்ளது என்றனர்.

    மேலும் மேல்மலைப் பகுதியில் இருந்து வாகனங்களில் காய்கறிகளை கொண்டு வரும்போது அப்சர்வேட்டரி பகுதியிலிருந்து மூஞ்சிக்கல் சந்திப்பு வரை சாலையில் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருவதாகவும் இதற்கு தக்க தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

    உடனே நகராட்சி பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பேசக்கூடாது என்று கோட்டாட்சியர் அறிவுறுத்தினார்.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • இயற்கை விவசாய விளை பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாக குற்றச்சாட்டு

    அரக்கோணம்:

    அரக்கோணம், நெமிலி தாலுகாக்களை உள்ளடக்கிய விவசாயிகளின் குறைதீர்வு கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இச்சிபுத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள சாலை விரிவாக்கத்தின் காரணமாக பெரிய ஏரியின் நீர்வரத்து கால்வாயின் அகலம் 16 அடியிலிருந்து தற்போது இரண்டாடியாக குறுகி உள்ளது. இதனால் எதிர்காலத்தில் ஏரி நிரம்புமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதனை விரைந்து அகலப்படுத்த வேண்டும்.

    மேலேரி ஊராட்சியை சேர்ந்த களஞ்சியம் மகளிர் விவசாய குழுவினர் தாங்கள் கூட்டாக சிறுதானியங்களை தொடர்ந்து பயிரிட்டு வருவதாகவும், அதனை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தனர்.

    அதே பகுதியை சேர்ந்த நம்மாழ்வர் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர் செயற்கை உரம் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயத்தின் முலம் விளையும் பொருட்களை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் பேசிய வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உங்கள் கோரிக்கைகள் அனைத்து கலெக்டர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். கூட்டத்தில் அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன், நெமிலி தாசில்தார் ரவி, கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரன் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மில்லிமீட்டர். தற்பொழுது அக்டோபர் 27-ந் தேதி வரை 416.4 மி.மீ பெறப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெடர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தின் வருடாந்திர இயல்பான மழையளவு 814.80 மில்லிமீட்டர். தற்பொழுது அக்டோபர் 27-ந் தேதி வரை 416.4 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இம்மாதம் வரை பெறக்கூடிய இயல்பான மழையளவான 495 மி.மீ ஐ விட 15.87 குறைவாக பெறப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் உள்ள அணைகளின் மொத்த கொள்ளளவில் 34.5 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் 48.41 சதவீதம் நீர் இருப்பு இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை நெல் 10,077 எக்டேர் பரப்பளவிலும், சிறு தானியங்கள் 166 எக்டேர் பரப்பளவிலும், பயறுவகைப் பயிர்கள் 1260 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 625 எக்டேர் பரப்பளவிலும், கரும்பு 24 எக்டேர் பரப்பளவிலும், எண்ணெய்வித்து பயிர்கள் 148 எக்டேர் பரப்பளவிலும், என மொத்தம் 12,300 எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகளுக்கு அடிப்படை இடுபொரு ட்களான உரம் மற்றும் விதை தங்கு தடையின்றி தரமானதாக கிடைத்திட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் உயர்தர ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலபடுத்தும் வகையில் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காட்சி நடைபெற்றது.

    மாநில அரசின் முதன்மை திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 56 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் 12 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. வேளாண் பொறியியல் துறையின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 80 சதவீத மாநில மற்றும் மத்திய அரசு திட்டங்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 56 கிராம பஞ்சாயத்துகளிலேயே செயல்படுத்தப்பட உள்ளது.

    மாவட்டத்தில் மொத்தம் 264 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள் உள்ளன. மேற்காணும் விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டு இம்மாதம் வரை 974 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இவற்றுள் 824 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 16 மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டு, 14 விதை விற்பனை உரிமையாளர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்ட தரம் குறைந்த விதைகள் 50,3291 மெட்ரிக் டன் கண்டறியப்பட்டு விற்பனைத்தடை விதிக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.69,78594 லட்சம் ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாவட்ட வன அலுவலர் முருகன் , மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் அழகிரி, வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிசன், நேர்முக உதவியாளர் சுபசெல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
    • கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதால், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
    • மலைமாடுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விவசாயிகள் கூறியதாவது:-

    தேனி மாவட்ட வனப்பகு தியில் மலைமாடுகளுக்கு வனத்துைறயினர் மேய்ச்சல் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் மலைமாடுகள் நலிவடைந்து வருகின்றன.

    இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டு மாடு இனங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரம் நிர்ணயித்து மலைமாடுகளை அரசே ஏற்க வேண்டும். கோரையூத்து பகுதியில் விவசாயிகள் வளர்த்து வந்த 11 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. ஆனால் இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை.

    மேகமலை வனப்பகு தியில் உள்ள பட்டா நிலங்களில் ஏலக்காய், காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மேல்மணலாறு வனப்பகுதியில் உள்ள சாலையை பயன்படுத்தி விவசாய நிலங்களுக்கு சென்று வரவும் தோட்டத்தில் புதிதாக ஏலக்காய் நாற்றுகளை நடவு செய்யவும் வனத்துறையினர் தடை விதிக்கின்றனர்.

    அகமலை ஊரடி ஊத்துக்காடு மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மின் வினியோகம் தடை ஏற்பட்டு ள்ளது. பராமரிப்பு பணி மேற்கொள்ள வனத்துறை யினர் அனுமதிக்க வில்லை. கண்ணக்கரை- மறைகர் மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க விவசாயிகள் சார்பில் 12 ஏக்கர் பட்டா நிலங்கள் அரசுக்கு வழங்கப்பட்டு ள்ளது. சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறை அனுமதி வழங்காததால் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் அகமலை அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    • கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் வனத்துறை, வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் நிலவும் குறைகள் குறித்து மனுவாக அளித்தனர். தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி வழங்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

    மேலும் வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.

    • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது
    • விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 26-ந்தேதி காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட மன்றத்தில் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×