என் மலர்
சிவகங்கை
- சிவகங்கையில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
- கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கையில் கருணா நிதி 5-ம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரு மான துரைஆனந்த் தலை மையில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் சிவகங்கை கோர்ட் வாசலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.
அதனை தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் நகர்மன்ற உறுப்பி னர் அயூப்கான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணா நிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பனங்காடி சாலையில் உள்ள மாற்றுதிறனாளி களுக்கான தாய் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில்நகர மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜய குமார் பாக்கியலட்சுமி, சேது நாச்சியார் வீரகாளை, துபாய் கார்த்தி, கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி மற்றும் நகர்மன்ற துணை தலைவா கார். கண்ணன், இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.
- திருப்புவனத்தில் கருணாநிதி நினைவு தினம் நடந்தது.
- பேரூராட்சி தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-ம் ஆண்டுநினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டதுணை செயலாளர் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லா மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரையில் நகர செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து கருணாநிதி உருவபடத்திற்க்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் வருகிற 12-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கிறது.
சிவகங்கை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்த உள்ளது. முதல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நடைபெற உள்ளது.
இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் 5-ம் வகுப்பு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிபரம், கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் https://bitly/svgjobfair1 என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்து உள்ளார்.
- ரத்த தான முகாம் நடந்தது.
- 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது.
- மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்புத் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது:-
பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லை நாயகம் முதலிய நெல் விதைகள் விதைப்பு செய்யப்பட்டது.மாப்பிள்ளை சம்பா, தில்லை நாயகம் 150 நாட்கள், காட்டுயானம் 180 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். தில்லை நாயகம் சென்ற ஆண்டு மீட்டெடுத்த உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமாகும். இது சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் புதிதாக விதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பாரம்பரிய நெல் ரகங்களும் அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் உடையவை. நன்கு வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
- அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். இதில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சரவண குமார், மாநில தொழிலாளர் நல செயலாளர் ரவிந்திரன், மதுரை மண்டல செயலா ளர் ராஜேஷ் கண்ணன், பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், வட்டச் செயலாளர் சோமு, மாநிலத் துணைத் தலைவர் இராமு, திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மற்றும் கோட்டம், உப கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் சங்கபொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
- பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.
2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.
- வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதிகளில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட முகாம்கள், குடும்ப நல முகாம்கள் நடந்தன. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
மேலும் இளையான்குடி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குடும்ப நல முகாம்களில் எவ்வித சிரமுமின்றி, விண்ணப்பங்கள் வழங்கவும், போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும் அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சாலை கிராமத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகள், அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் ஆய்வு செய்யப்பட்டது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றிய பொது நிதி 2022-23-ன் கீழ் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமையலறை கட்டு மானப்பணிகள் தொடர்பா கவும் ஆய்வு மேற்கொ ள்ளப்பட்டது.இப்பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.
மேலும் இளையான்குடி பகுதியில் குடும்ப நல விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வுகளின் போது, துணை இயக்குநர் (சுகா தாரம்) விஜய் சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டடம்) பெருமாள்சாமி, இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முனியாண்டி, இளை யான்குடி பேரூராட்சித் தலைவர் நஜீமுதீன், இளை யான்குடி வட்டாட்சியர் கோபிநாத், இளையான்குடி செயல் அலுவலர் கோபிநாத் உள்பட பலர் உடனிருந்தனர்.
- பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
சிவகங்கை
சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
- மானாமதுரை பள்ளி மாணவி சாதனை படைத்தார்.
- பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் மாணவி லலிணா சென்னை ஆலந்துார் மான்போர்ட் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பில் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு கராத்தே சாம்பியன் 2023-க்கான இப்போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கலந்து கொண்டு 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
இவரை பாராட்டி பள்ளி தலைமை ஆசிரியை பேப்லிட் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜு, பூபாலன், கலைச்செல்வி கராத்தே மாஸ்டர் சிவ நாகர்ஜூன் மற்றும் பெற்றோர் ரவீந்திரன் பாலபிரியா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.
பள்ளி மாணவி லலிணா கராத்தே போட்டியில் ஏராளமான பரிசுகள் பெற்றுள்ளார்.
- திருப்புவனம் கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்காத உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
- கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மானாமதுரை
திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவரும் திருப்புவனம் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பழனியம்மாள், சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா மற்றும் சங்கத்தின் இயக்குநர்கள், உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் சங்கத்தின் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. திருப்புவனம் ஒன்றியம் கீழராங்கியத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும், சங்கத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்த உறுப்பினர்கள் மற்றும் சங்கத்துக்கு நீண்டகாலமாக பால் வழங்காத உறுப்பினர்களை சங்கத்திலிருந்து நீக்கவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் இயக்குநர் முருகேசன் நன்றி கூறினார்.
- திருப்பத்தூர் அருகே கருவேம்பு செல்ல அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.
- நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வடக்கு இளையாத்தங் குடியில் பூரண புஷ்கலா சமேத கருவேம்பு செல்ல அய்யனார் கோவில் உள்ளது. இங்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு புரவி எடுப்பு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த ஜூன் 20-ந் தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து, சேங்கையிலிருந்து பிடி மண் கொடுத்தல் நடந்தது. தொடர்ந்து அரண்மணை குதிரை, நாட்டுக்குதிரை தலா ஒன்று, கிராமத்து குதிரை 32, நேர்த்திக் குதிரைகள் 6, பொம்மைகள் 30, காளைகள் 10 என சுமார் 80 புரவிகள் வடிவ மைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தார்களும், தங்கள் கிராமசாமியாடிகளுடன் சூளைக்கு வந்து புரவி களுக்கு மரியாதை செய்தனர். பின்பு சாமியாட்டம் நடந்தது. புரவி களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் தங்களுக்கு பாத்தியப்பட்ட புரவிகளை தோளில் சுமந்தபடி எட்டரை கிராம மக்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புரவிகளை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இந்த புரவி எடுப்பு விழாவில் வடக்கு இளையாத்தங்குடி, தெற்கு இளையாத்தங்குடி, கோயில் இளையாத்தங்குடி, சந்திரன் பட்டி, சேவிணிப்பட்டி, ஆவிணிப்பட்டி, ரகு நாதப்பட்டி, கீரணிப்பட்டி, முத்தூர்,விராமதி, கல்லாப்பேட்டை, அச்சரம் பட்டி, காவேரிபுரம் உள்ளி ட்ட எட்டரை கிராமத்தினர் பங்கேற்றனர். போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆத்ம நாபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






