பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
Published on

சிவகங்கை

சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com