search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா
    X

    பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா

    • பாரம்பரிய நெல் விதைப்பு திருவிழா நடந்தது.
    • மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய நெல் விதைப்புத் திருவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார். முன்னாள் வங்கி மேலாளர் பாரதி, முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது:-

    பாரம்பரிய நெல் விதைகளான மாப்பிள்ளை சம்பா, காட்டுயானம், தில்லை நாயகம் முதலிய நெல் விதைகள் விதைப்பு செய்யப்பட்டது.மாப்பிள்ளை சம்பா, தில்லை நாயகம் 150 நாட்கள், காட்டுயானம் 180 நாட்கள் வயதுடைய பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். தில்லை நாயகம் சென்ற ஆண்டு மீட்டெடுத்த உயர் விளைச்சல் தரக்கூடிய பாரம்பரிய நெல் ரகமாகும். இது சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரியில் புதிதாக விதைப்புச் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 பாரம்பரிய நெல் ரகங்களும் அதிக ஊட்டச்சத்தும், மருத்துவ குணங்களும் உடையவை. நன்கு வறட்சியை தாங்கி வளரக் கூடியவை. 1970-களில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சிக்குப் பிறகு இந்தியாவில் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது.ஆனால் ஊட்டச்சத்து பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.இதுபோன்ற பாரம்பரிய நெல் வகைகளை விதைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×