ரத்த தான முகாம்

ரத்த தான முகாம் நடந்தது. 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ரத்த தான முகாம்
Published on

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com