கருணாநிதி நினைவு தினம்

சிவகங்கையில் கருணாநிதி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கருணாநிதி படத்திற்கு நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி படத்திற்கு நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Published on

சிவகங்கை

சிவகங்கையில் கருணா நிதி 5-ம் ஆண்டு நினைவு தினம் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. தி.மு.க. நகர செயலாளரு மான துரைஆனந்த் தலை மையில் மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையில் சிவகங்கை கோர்ட் வாசலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கருணா நிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

அதனை தொடர்ந்து சிவகங்கை அரண்மனை வாசலில் நகர்மன்ற உறுப்பி னர் அயூப்கான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருணா நிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பனங்காடி சாலையில் உள்ள மாற்றுதிறனாளி களுக்கான தாய் இல்லத்தில் கருணாநிதி படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில்நகர மன்ற உறுப்பினர்கள் ஜெய காந்தன், ராமதாஸ், விஜய குமார் பாக்கியலட்சுமி, சேது நாச்சியார் வீரகாளை, துபாய் கார்த்தி, கீதா கார்த்திகேயன், ராஜபாண்டி மற்றும் நகர்மன்ற துணை தலைவா கார். கண்ணன், இளைஞர் அணி ஹரிஹரன் மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com