என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு தினம்
    X

    கருணாநிதி நினைவு தினம்

    • திருப்புவனத்தில் கருணாநிதி நினைவு தினம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 5-ம் ஆண்டுநினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. அதைதொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்டதுணை செயலாளர் பேரூராட்சி தலைவர் த.சேங்கைமாறன் வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லா மற்றும் நிர்வாகிகள், பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரையில் நகர செயலாளர் பொன்னுசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து கருணாநிதி உருவபடத்திற்க்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×