என் மலர்
சிவகங்கை
- அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதா வது:-
விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், புதிய கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடனடியாக அகற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தாமல் பாதுகாத்தி டவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திடவும், விவசா யிகளின் கோரிக்கை களுக்கிணங்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் அரசின் திட்டங்களின் பயன்களை முழுமையாக பெற்றிடவும், தேவையான சான்றிதழ்களை வழங்கிடவும், துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நில அளவைத்துறை யினர் விவசாயிகள் கோரும் அளவீட்டுப்பணியினை விரைந்து மேற்கொள்ளவும், விவசாயிகளுக்கான மின் விநியோகங்களை சீரான முறையில் வழங்கிடவும், தேவையான உரங்களை இருப்பு வைத்திடவும், கண்மாய்களில் உள்ள மடைகள், தடுப்புச்சுவர்கள் பழுதடைந்து இருப்பின் விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
மேலும் புதிய தடுப்பணைகள் கட்டித்தரவும், வங்கிகளின் மூலம் கடனுதவிகள் வழங்கி வேளாண் சார்ந்த புதிய தொழில் தொடங்கிட உறுதுணையாக இருந்திடவும், கடனுக்குரிய மானியத்தொகை யினை தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கிட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கலெக்டர் திட்ட விளக்க கையேட்டினை வெளியிட்டார். இதில் பால்துரை (தேவகோட்டை), மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் ரவிச்சந்தி ரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜினு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.=
- மாவட்ட அளவிலான நாடகப்போட்டியில் தேவகோட்டை அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
- தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான நாடகப்போட்டி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளி சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் முதல் இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பைச் சார்ந்த எட்வின், பிரியதர்சினி, ஹரிணி, தீபிகா, லில்லிஷிரி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ஆகியோரை இப்பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1500 மற்றும் பள்ளியின் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- போதையில் இளம்பெண்ணிடம் போலீஸ்காரர் அத்துமீறி நடந்துள்ளார்.
- போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேவகோட்டை
தேவகோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் கோர்பச்சேவ். இவர் இதற்கு முன்பு பணியாற்றிய இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் தேவ கோட்டை டவுன் போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.
நேற்று மதுபோதையில் சீருடை அணிந்து காவலர் பணிக்கு சென்றுள்ளார். இரவு 8 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் காவலர் பின் தொடர்ந்து சென்றார். ஒத்தக்கடை ஆற்றுப்பாலம் அருகே இருள் சூழ்ந்த பகுதியில் சென்ற போது திடீரென காவலர் அந்தப் பெண்ணை வழிமறித்துள்ளார். ஏன் ஹெல்மெட் போட வில்லை? என போதையில் உளறியபடி அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார்.
அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் காவலரை சிறைபிடித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களின் பிடியிலிருந்த காவலரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் அந்த காவலர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- வேம்பத்தூர் வாராகி பீடத்தில் பவுர்ணமி சிறப்பு யாகம் நடந்தது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூரில் வாராகி அம்மன், ஆனந்தவள்ளி அம்மன் ஆகியோருக்கு பாமாலை மற்றும் கீர்தனைகள் பாடிய கவிராஜபண்டிதர் மற்றும் வாராகி அம்மன் பீடம் உள்ளது. இங்கு ஆவணி மாத பவுர்ணமி தினத்தில் சிறப்பு யாகம் வழிபாடு பூஜை நடைபெற்றது. இதில் விஜயன்சாஸ்திரி சிறப்பு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- ஜாகிர் உசேன் கல்லூரி மாணவர்க்கு பாராட்டு விழா நடந்தது.
- ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடில் உள்ள டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் பயிலும் மாணவர் விஜயகுமார், சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற ரெட் மாரத்தான் போட்டியில் 10-வது இடம் பெற அவருக்கு ரொக்க பரிசும் பெற்றார். மேலும் காரைக்குடி, கிரீடா பாரதி சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான மாரத்தான் போட்டியில் 15-வது இடம் பெற்றார். இந்த 2 போட்டிகளிலும் ரொக்க பரிசு பெற்று வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ்கான் மற்றும் கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் ஆகியோர் வாழ்த்தினர். உடன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் காஜா நஜ்முதீன் ஆகியோர் பரிசு மற் றும் சான்றி தழ் வழங்கி பாராட்டினர்.
- சிவகங்கை வார சந்தையில் முத்திரையிடாத எடையளவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் IAS மற்றும் சென்னை, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லெட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் யாஸ்மின்பேகம் மற்றும் அவர்களின் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரம ணியன் ஆலோசனையின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அம லாக்கம்) முத்து தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் வசந்தி, மகாலெட்சுமி முத்திரை ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை நகர் வாரச்சந்தையில் சட்டமுறை எடையளவுச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.
இக்கூட்டாய்வில் முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-23, மேஜை தராசு-11, விட்டத்தராசு-12, இரும்பு எடைகற்கள்-54, ஊ.அளவைகள் - 2 மற்றும் தரப்படுத்தப்படாத எடையளவுகள்-2 ஆக மொத்தம் 104 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக 25.08.2023 அன்று புளியடிதம்பம் மீன் மார்க்கெட்டில் கூட்டாய்வு மேற்கொண்டபோது, முத்திரையிடப்படாத மின்னனு தராசுகள்-7, மேஜை தராசு-2, விட்டத்தராசு - 10, இரும்பு எடைகற்கள்-10 ஆக மொத்தம் 29 எடைய ளவைகள் பொதுப்பறிமுதல் செய்யப்பட்டன.
முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் எடையளவுகளை முத்திரையிட்டு பயன்படுத்துமாறும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும், விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரையிட்டும், அதன் சான்றிதழை உடன் வைத்திருக்குமாறும், மேலும் பொட்டலப் பொருட்களில் பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, அதிகபட்ச சில்லரை விற்பனை விலை, தயாரிப்பாளர் முழு முகவரி, நுகர்வோர் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் ஆகிய சான்றுரைகள் இடம் பெற்றிருக்க வேண்டும், இல்லையெனில் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வணிகர்களை கேட்டுக்கொண்டார்.
மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.
- புதிய அங்கன்வாடி கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
- அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வாகுடி ஊராட்சி புதிய அங்கன்வாடி கட்டிடம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி யில் இருந்து கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டிச்சாமி அணைவரையும் வரவேற் றார். இந்த புதிய கட்டிடத்தில் அதிநவீன வசதிகளும் செய் யப்பட்டுள்ளது. இதேபோல் அதே பகுதியல் மின் தட்டுப்பாட்டை போக்க அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை தமிழரசி எம்.எல்.ஏ. திறந்து வைத்து இயக்கி வைத்தார்.இந்த விழாவில் ஒன்றிய குழுத்தலைவர் லதா, ஒன் றிய செயலாளர் அண்ணா துரை, ஊராட்சி துணை தலைவர் முத்தையா, வாகுடி கிளை செயலாளர் வேலுசாமி, வாகுடி காலணி கிளை செயலாளர் ராஜேந் திரன், அன்னியேந்தல் கிளை செயலாளர் மணிகண் டன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப் ரகு மான், மேல பசலை ஊராட்சி மன்ற தலைவர் சிந்துஜா, மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முருகவள்ளி தேசிங்குராஜா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- நேஷனல் அகாடமியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
- மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி யில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் தலைமை வகித் தார். கல்லூரி ஆசிரியர்கள் மது, மோனிஷா, சாந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சதக் கத்துல்லா வரவேற்றார். ஒணம் பண்டிகையொட்டி கல்லூரியில் மாணவி களுக்கு அத்தப்பூ கோல போட்டியும் அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கபட்டன. முடிவில் ஆசிரியர் பூவிழி நன்றி கூறினார்.
- எருமை மாடு, ஆடுகள் பலியிட்டு நரிக்குறவர்கள் வினோத வழிபாடு நடந்தது.
- 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட் டன.
சிவகங்கை
சிவகங்கை அருகே பழ மலைநகரில் நரிக்குறவ மக்கள் பலர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய் வத்திற்கு, எருமை மாடு வெட்டி பொங்கல் வைக்கும் வினோத பூஜையை நடத்தி–னர். அப்போது 6 எருமை மாடுகள், 10-க்கும் மேற் பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்கள் குல தெய்வத்திற்கு ஆண்டுதோறும் கிடா வெட்டி, பூஜை செய்து வரு–கிறோம். இங்கு பூஜைகள் நடத்தும் போது வெளியூர்க–ளில் உள்ள எங்கள் உறவி–னர்கள் கலந்து கொண்டு குலதெய்வம் காளியம்ம–னுக்கு எருமை கிடாவையும், துர்கையம்மனுக்கு ஆட்டுக் கிடாவையும் பலியிட்டு பூஜை செய்வார்கள்.
மேலும் இதற்காக, 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை ஆட்டு கிடாக்க–ளும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எருமை மாடுகளையும் வாங்கியுள்ளோம். இன்று அதிகாலையில் கிடா வெட்டி, ரத்தத்தை குடித்து காளியம்மனுக்கு படையல் வைத்தும், தொடர்ந்து ரவை ரொட்டிகளை செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்க–ளாக இங்கே பூஜைகள் செய்து வருகிறோம்.
பூஜைக்குப் பின் எருமை மாடுகளை உரித்து, உடல் உறுப்புகளை, உறவினர்கள் ஊருக்கு எடுத்துச் செல் வோம். எருமையின் தலையை எதற்கும் பயன்ப–டுத்த மாட்டோம். மிஞ்சும் பாகங்களை உலர்த்தி பயன் படுத்திக் கொள்வோம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எங்க–ளின் உறவினர்கள் உள்ள–னர். வசதி படைத்தவர்களாக இருந்தாலும் ஆண்டுக்கு ஒரு முறை கிடா வெட்டி காளி–யம்மனுக்கு பூஜைகள் செய்து வருறோம். இந்த பூஜையில் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் குலதெய்வத்தை வழிபட் டால் நோய் நொடியின்றியும், ஊசி மணி பாசி தொழிலும் சிறப்பாக அமையும் என்பது நீண்ட கால நம்பிக்கை என்று தெரிவித்தனர்.
- இளையான்குடி-சிவகங்கை இடையே வட்டபேருந்து இயக்க வேண்டும்.
- மனிதநேய ஜனநாயக கட்சி கோரிக்கை வைத்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்த மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் சைபுல்லா, நிர்வாகிகள் கலெக்டர் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்ப தாவது:-
இளையான்குடி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியின் பெயரை மீண்டும் தென்மலைக்கான் காதர்ஷாப் பொன்னம்பாள் பீவி பெண்கள் பள்ளி என மாற்ற வேண்டும்.
சிவகங்கை மருத்துவ கல்லூரி, இளையான்குடி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள குப்பை இடங்களை மாற்ற வேண்டும். இளையான்குடி பேரூராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட தெருக்களுக்கு பெயர்கள் சூட்ட வேண்டும். 5. சிவகங்கை, காளை யார்கோவில், மறவமங்கலம், இளையான்குடி, மானாமதுரை திருப்புவனம் ஆகிய ஊர்களுக்கு வட்டப்பேருந்து இயக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. 6. இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ள தெய்வ புஷ்பா ஊரணியை தூர்வார வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி சிவகங்கை நகர செயலாளர் அல்லா பிச்சை, காரைக்குடி நகர செயலாளர் சாகுல் ஹமீது, இளையான்குடி நகர பொருளாளர் கான்சா உஸ்மான், நகர துணைச் செயலாளர் ஆட்டோ அபுபக்கர், தகவல் தொழில் நுட்ப அணி நகர செயலாளர் அசாருதீன் ஆகியோர் உடனிருந்தனர்
- மகளிர் கபடி போட்டியில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
- இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டிபாளையம் அணியும், அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான மகளிர் கபடி போட்டி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகம், கேரளா, பீகார், டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
பிரமாண்ட கேலரியில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தது கைதட்டியும், விசில் அடித்தும், ஆரவா ரத்துடன் போட்டியை கண்டுகளித்தனர். இரவில் நடந்த இரு அரை இறுதி போட்டியில் கோபிசெட்டி பாளையம் அணியும் அந்தியூர் அணியும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதில் கோபிசெட்டி பாளையம் 27 புள்ளிகள் பெற்றது. அந்தியூர் அணி 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து முதல் பரிசை அந்தியூர் பள்ளி மாணவிகளும், 2-வது பரிசை கோபிசெட்டி பாளையம் கல்லூரி மாணவிகளும், 3-வது பரிசை மேற்கு ெரயில்வேயும் 4-வது பரிசை சென்னையும் பெற்றது.
வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 2 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.50 லட்சமும், 3-வது பரிசாக ஒரு லட்சமும், 4-வது பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் கோப்பைகள் சிறப்பு பரிசுகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். அந்தியூர் அணியில் 34 முறை பிடிபடாமல் சென்ற கவுந்தர்யாவை அமைச்சர் மற்றும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
இந்த போட்டியில், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலா ளருமான சண்முக வடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






