கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம்

கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com