என் மலர்tooltip icon

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:


    காரைக்குடி
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    மாங்குடிகாங்கிரஸ்75954
    எச்.ராஜாபாஜக54365
    தேர்போகி பாண்டிஅமமுக44864
    ராஜ்குமார்மநீம8351
    துரைமாணிக்கம்நாம் தமிழர்23872
     திருப்பத்தூர்
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    பெரியகருப்பன்திமுக103682
    மருதுஅழகுராஜ்அதிமுக66308
    உமாதேவன்அமமுக7448
    அமலன் சபரிமுத்துஇஜக862
    சிவகங்கை
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    செந்தில்நாதன்அதிமுக82153
    குணசேகரன்சிபிஐ70900
    அன்பரசன்அமமுக19824
    ஜோசப்சமக2105
    மல்லிகாநாம் தமிழர்22500
    மானாமதுரை (தனி)
    வேட்பாளர்கள்கட்சிவாக்குகள்
    தமிழரசிதிமுக89364
    நாகராஜன்அதிமுக75273
    மாரியப்பன் கென்னடிஅமமுக10231
    சிவசங்கரிமநீம2257
    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி தேர்தலில் தோல்வி அடைய எது காரணம் என்று கூறியுள்ளார்.
    காரைக்குடி :

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று செம்மையான ஆட்சியை, திறமையான நிர்வாகத்தை தர எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    மத்திய அரசின் அதிகார பலம், பண பலம், பாரதப்பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் இணைந்து தொடர்ந்து தொடுத்து வந்த உக்கிரமான போர் என எல்லாவற்றையும் எதிர்த்து தன்னந்தனியாக போராடி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மம்தா பானர்ஜிக்கும் அவரது கட்சியினருக்கும் எனது பாராட்டுக்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி பா.ஜ.க.வின் சீடராக மாறி விட்டார். அதுவே அவரது கட்சியின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழக சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எச் ராஜா தோல்வி அடைந்துள்ளார்.
    காரைக்குடி:

    தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், திமுக 158, அதிமுக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

    இந்த நிலையில், காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 75,511 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் எச் ராஜா 21,485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
    அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளரின் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    திருப்பத்தூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை(2-ந்தேதி) நடைபெறுகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் வாக்கு எண்ணிக்கை யையத்துக்கு வரும் அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள். அரசியல் கட்சி முகவர்கள், பத்திரிகையாளர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்ட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    ஒரு வேட்பாளருக்கு முதன்மை முகவர் உள்பட 22 பேர் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனர். இதில் ஒரு சில வேட்பாளர்களுக்கு போதுமான முகவர்கள் இல்லை. 26 வேட்பாளர்களுக்கு 497 மனுக்கள் பெறப்பட்டது.

    இதனையடுத்து, அரசியல் கட்சி பிரமுகர்கள், வேட்பாளரின் முகவர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், திருப்பத்தூர் அழகப்ப்பா பாக்கியம் திருமண மகாலில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.

    இதில் திருக்கோஷ்டியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்த 365 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் 18 பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர். வருவாய்த்துறையை சேர்ந்த 85 பேர் பரிசோதனை செய்து கொண்டனர். மொத்தம் 450 பேர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
    கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியின்போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. கொந்தகை, அகரம் ஆகிய பகுதியிலும் அகழாய்வு பணிகள் நடந்தது. கீழடியில் பாசி, மணிகள், தாயக்கட்டை கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மனித மண்டை ஓடுகள், எலும்புகள் உள்பட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.

    அகரத்தில் 2 குழிகள் தோண்டப்பட்டு மண்பாண்ட ஓடுகள், சிறிய, பெரிய நத்தை கூடுகள், சேதமடைந்த பானைகள் என கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 3-வது குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் சேதமடைந்த நிலையில் 3 பானைகள் தொடர்ச்சியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கீழடியில் நேற்று அகழ்வாராய்ச்சி பணியின் போது காதில் அணியும் பழங்கால தங்க வளைய ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீ. நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ. விட்டமாக உள்ளது எனவும் தெரிய வருகிறது. இதை ஆய்வுக்கு அனுப்பினால் தான் எந்த காலத்தில் பயன்படுத்தியது என தெரிய வரும்.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக 2 தொகுதிகளிலும், அதிமுக 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:


    மானாமதுரை

    திமுக

    சிவகங்கை

    அதிமுக

    திருப்பத்தூர்

    திமுக

    காரைக்குடி

    காங்கிரஸ்

    தேவகோட்டை அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு அழைத்தபோது தப்பி ஓடியதால் அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல வந்த அலுவலர்கள் அவரை அழைத்தபோது அச்சத்தில் அவர்களிடம் இருந்து தப்பிஓடி வயல்காட்டு பகுதியில் சுற்றி திரிந்தார். 

    அவரை தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம் தலைமையில் கிராம உதவியாளர்கள், அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். பின்னர் அவரை வேலாயுதபட்டினம் மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் சிகிச்சைக்காக ஒப்படைத்தனர். அதன் பின்னர் நேற்று அமராவதி புதூர் மருத்துவமனைக்கு மாணவரை அதிகாரிகள் அழைத்து சென்றனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரோடு பழகிய நபர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

    மேலும் அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களுக்கு உள்ளே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடையை தொடர்ந்து கோவில்களில் வெளியில் நின்று பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.
    காரைக்குடி:

    கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கோவில் களுக்கு வரும் பக்தர்கள் வெளியில் நின்று மன வேதனை யுடன் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன.

    இதில் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    தற்போது மீண்டும் கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்றும், கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தும் சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் 2-வது முறையாக கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. முதலில் ஒற்றை இலக்க எண்ணாக கொரோனா தொற்று தொடங்கி படிப்படியாக இரட்டை இலக்க எண்ணை எட்டி பிடித்தது.

    இந்த நிலையில் நேற்று 3 இலக்க எண்ணை எட்டியது. நேற்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 8 ஆயிரத்து 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தற்போது கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 520 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிைலயில் கொரோனா பாதித்து 75 பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

    கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். முககவசம் உயிர் கவசம் என்பதை உணர வேண்டும். வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது அவசியம் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும். இதை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தாக்குதலில் இருந்து நாம் விடுபடலாம். எனவே கொரோனா பரவலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    திருப்பத்தூர் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகளவு பரவி வருவதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
    திருப்பத்தூர்:

    கொரோனா தொற்று அதிகளவு பரவி வருவதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு டாஸ்மாக் கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்பத்தூர் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது நாராயணன் (வயது 65) என்பவர் ஒரு தியேட்டர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தத. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 45 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மாவட்டத்தில் பரவலாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி திருப்பத்தூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மற்றும் வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 493 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 65 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
    காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 48) இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுமுன் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய அவர் புறப்பட்டுச் சென்றபோது வழியில் தனது மோட்டார் சைக்கிளை 2 பேர் தள்ளிக் கொண்டு போவதைக் கண்டார். உடனடியாக அவர்களை வழிமறித்து பிடிக்க முற்பட்டபோது ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவன் பிடிபட்டான். பிடிபட்டவன் பெயர் திருப்பதி (வயது19) காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவன். திருப்பதி வடக்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் திருப்பதி மீது மோட்டார் சைக்கிளை திருடியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொருவனை தேடி வருகின்றனர்.
    ×