என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மண்டலத்தில் செயல்பட்டு வரும் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி நிலுவையில் இருந்து தவணை தவறிய பண்ணைசாரா கடனுக்கான ஒருமுறை கடன் தீர்வு திட்டத்தின் செயலாக்க காலம் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் செலுத்தியுள்ள கடன்தாரர்கள் மீதமுள்ள 75சதவீத தொகையை செலுத்துவதற்கு ஏதுவாகவும், இந்த திட்டத்தில் இதுவரை சேர்ந்திராத கடன்தாரர்களும் இந்தகால நீட்டிப்பை பயன்படுத்தி, இந்த திட்டத்தில் தவணையில் முழுமையாக கடனைத் திருப்பிச் செலுத்த சேர்ந்து ஒரே வாய்ப்பளிக்கும் வகையிலும், 31.3.2014 தேதியின்படி தொடக்க கூட்டுறவு மற்றும் வங்கிகளில் வளர்ச்சி நீண்ட காலமாக நிலுவையிலுள்ள அனைத்து தவணை தவறிய பண்ணை சாரா கடன்களையும் முழுமையாக தீர்வு செய்யும் வகையில், ஒருமுறை கடன் தீர்வு திட்டம் 2014-ஐ 1.1.2021 முதல் 31.12.2021 வரை காலநீட்டிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.
வேளாண்மை ஊரக சிவகங்கை மண்டலத்தில் 92 பேரிடம் இருந்து ரூ. 292.08 லட்சம் (அசல் மற்றும் வட்டியுடன்) 31.3.2014-ந் தேதியன்று நிலுவையில் இருந்து தவணை தவறிய கடனாக உள்ளது .
எனவே தவணை தவறிய பண்ணைசாரா கடன்தாரர்கள் உடனடியாக இந்த திட்டத்தில் சேர்ந்து, தொடர்புடைய தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடனை திருப்பி செலுத்தி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விருசுழி ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்ததால் ஆற்றில் வரும் தண்ணீர் குறைந்தது.
இதனையடுத்து தேவகோட்டை ஆற்று ஓரங்களில் மணல் திருடர்கள் தங்களது கைவரிசையை ஆரம்பித்துள்ளனர். தேவகோட்டை ஆற்றுப் பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
ஆற்றில் மணல் மூட்டைகளாக சேகரித்து பின்பு வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். ஆற்றின் உட்புறத்தில் மண் மூடைகள் ஆங்காங்கே உள்ளதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், விருசுழி ஆற்றில் மணல் திருட்டு நடந்து கொண்டே இருக்கும். அதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் மணல் கொள்ளையர்கள் எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் ஆற்றில் உட்புறம் ஈரப்பதமாக உள்ளதால் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி ஆற்றின் கரையில் வைத்து பின்னர் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.
இந்த தொடர் மணல் திருட்டால் ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமப்புற வீடுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக கூட இனி ஆற்றில் மணல் இருக்காது என்று வேதனை தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை (17-ந்தேதி) காரைக்குடி வட்டத்தில் அரண்மனை சிறுவயல் கிராமத்திலும், தேவகோட்டை வட்டத்தில் வெள்ளிக் கட்டி கிராமத்திலும், திருப்பத்தூர் வட்டத்தில் பையூர் கிராமத்திலும், சிங்கம்புணரி வட்டத்தில் கரிசல் பட்டி கிராமத்திலும், சிவகங்கை வட்டத்தில் கீழப்பூங்குடி கிராமத்திலும், மானாமதுரை வட்டத்தில் மேலநெட்டூர் கிராமத்திலும், திருப்புவனம் வட்டத்தில் பிரமனூர் கிராமத்திலும், இளையான்குடி வட்டத்தில் அரணையூர் கிராமத்திலும், காளையார்கோவில் வட்டத்தில் உடையாரேந்தல் கிராமத்திலும் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் மேற்படி வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயன் அடைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தி.மு.க. அரசு 2008-ம் ஆண்டு பட்டா வழங்கியது. அந்த பட்டாவில் கணேசபுரம் என்பதற்கு பதிலாக கழனி வாசல் என்று இருந்தது.
இதையடுத்து பட்டாவில் திருத்தம் செய்து கொடுக்கவும் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கவும் பலமுறை அரசு அதிகாரிகளை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.
கோட்டாட்சியர் பிரபாகரன் அலுவலகத்திற்கு வராததால் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தேவகோட்டை ராம்நகர் காரைக்குடி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த துணை கண்காணிப்பாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அந்தோணி, கோட்டாட்சியர் உங்களது இடத்திற்கே வந்து உங்களது குறைகளை கேட்க வருவதாக உங்களிடம் தெரிவிக்க சொன்னார். இதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறையின் மூலம் 14-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 14 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 13 முகாம்கள் மூலம் 3 லட்சத்து 96 ஆயிரத்து 547 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 14 ஆயிரத்து 517 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசிகள் 8 லட்சத்து 7 ஆயிரத்து 897 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசிகள் 5 லட்சத்து 6 ஆயிரத்து 620 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு 1 லட்சத்து 38 ஆயிரமும், கோவாக்சின் தடுப்பூசி 31 ஆயிரமும் கையிருப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (பொதுசுகாதாரத்துறை), ராம்கணேஷ், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் நீலமேகம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் வரும் ஜனவரி மாதம் 18-ந்தேதி தைப்பூச விழாவையொட்டி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து பாதயாத்திரையாக பழனிக்கு செல்லும்போது அவர்கள் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதையடுத்து தைப்பூசம் வரை பகல் முழுவதும் பிள்ளையார்பட்டி கோவிலில் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இத்தகவலை கோவில் டிரஸ்டிகள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆ.முத்துப்பட்டிணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் தெரிவித்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகராட்சிக்கு சொந்தமாக பஸ் நிலையம், வாடியார் வீதி, கண்டதேவி ரோடு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் நகராட்சி நிர்வாகம் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கடை உரிமையாளர்கள் சரிவர வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மதுசூதனன் நேற்று ஆய்வு நடத்தி அதிக வாடகை பாக்கி உள்ள 6 கடைகளுக்கு சீல் வைத்தார். மேலும் வாடகை பாக்கி உள்ள கடைக்காரர்கள் உடனே அதனை செலுத்த வேண்டும் இல்லையென்றால் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
நகராட்சி ஆணையாளரின் இச்செயல் வியாபாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேவகோட்டை பஸ் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்புதான் கடை வாடகையை 100 சதவீதம் உயர்த்தியது. இதனை எதிர்த்து வாடகையை குறைக்குமாறு பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் சரிவர இல்லை. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது கடைகள் மூடப்பட்டு இருந்தது. அதற்கும் தற்போது நகராட்சி நிர்வாகம் வாடகை கேட்கிறது என்றனர்.
இதற்கிடையில் வியாபாரிகள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதாக கூறி நகராட்சி அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் உள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தேவகோட்டை பகுதியில் சமீப காலமாக ஆடுகள் காணாமல் போனது. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
ஆறாவயல் சார்பு ஆய்வாளர்கள் மைக்கேல் வாகன சோதனையில் ஈடுபட்ட போது 6 பேர் ஆடுகளுடன் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் ஜி.கே.மங்கலம் சேர்ந்த மகாலிங்கம் மகன் மனோஜ் (வயது 19), அதே ஊரைச் சேர்ந்த பொன்னையா மகன் வல்லரசு (19), கீழ்மருதங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (19), அனையர் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் கருப்பசாமி பாண்டியன் (19), தளக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் மகன் அஜய் (19), அயங்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் ஜெகன் பாலாஜி (19) என தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் திருவாடனை அரசு கலைக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் தங்களது பண தேவைக்காக ஆடுகளை திருடி சந்தையில் விற்று மது குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இதனை அடுத்து 6 கல்லூரி மாணவர்களை கைது செய்து 2 இருசக்கர வாகனம் மற்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2 ஆடுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கல்லூரி மாணவர்கள் ஆடு திருடியது அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
தேவகோட்டை கைலாசநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி மாரியம்மாள் (வயது 70). தனது வீட்டு அருகே நின்றிருந்த போது காளை மாடு குத்தியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே அந்தப்பகுதியைச் சேர்ந்த பாக்கியம் (65), தேனாம்பால் (68) ஆகிய 2 பேரையும் அதே காளை மாடு குத்தியதில் படுகாயமடைந்தனர். இவர்கள் மேல் சிகிச்சைக் காக சிவகங்கை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் காவலர்களுடன் அப்பகுதி மக்கள் துணையுடன் அந்த காளையை பிடித்து கயிற்றால் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டி வைத்தனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.






