search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்குடி அருகே தேனாற்று தடுப்பணையில் தற்போது குறைந்தளவு தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.
    X
    காரைக்குடி அருகே தேனாற்று தடுப்பணையில் தற்போது குறைந்தளவு தண்ணீர் செல்வதை படத்தில் காணலாம்.

    கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் கண்மாய்கள், ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது

    கடந்த ஒரு வார காலமாக போதிய அளவு மழையில்லாததால் ஏற்கனவே கண்மாய்கள், ஆறுகளில் பாய்ந்து சென்ற நீர் வரத்து சற்று குறைய தொடங்கியது.
    காரைக்குடி:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து கடந்த 20நாட்களுக்கும் மேலாக கனமழை இரவு பகலாக பெய்ய தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள நீர்நிலைகளான உள்ள கண்மாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், ஊருணிகள் ஆகியவை நிரம்பி வழிந்தது. இதில் கண்மாய்கள், ஆறுகள் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த வடகிழக்கு பருவ மழையானது சிவகங்கை மாவட்டத்திலும் தீவிரமடைந்ததையடுத்து கடந்த 15ஆண்டுகளுக்கு பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் போனது.

    இதேபோல் இங்குள்ள மணிமுத்தாறு, சருகணி, பாம்பாறு, பாலாறு, வைகையாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து அங்குள்ள தடுப்பணைகளை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சிவகங்கை மாவட்டம் வழியாக செல்லும் வைகையாற்றில் ஏறக்குறைய அதிகபட்சமாக 5 முதல் 6 நாட்கள் வரை மட்டும் தண்ணீர் சென்ற நிலை இருந்தது. ஆனால் கடந்த 30ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வைகையாற்றில் கடந்த 13 நாட்களுக்கும் மேல் ஆற்றின் இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது.

    இந்தநிலையில் தற்போது கடந்த ஒரு வாரகாலமாக மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதியில் மழையில்லாதால் நிரம்பி வழிந்த அணைகளில் சற்று தண்ணீர் வரத்து குறைந்தளவு செல்கிறது. மேலும் சில கண்மாய்களில் நிரம்பி மறுகால் சென்ற நிலையில் தற்போது அந்த கண்மாய்களில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. தொடர் மழை காலங்களில் கண்மாய்கள், ஆறுகளில் இருந்து வெள்ளப்பெருக்காக அந்த வழியில் உள்ள தரைப்பாலத்தில் செல்ல தொடங்கியதால் அந்த வழியில் சென்ற போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதையடுத்து விரைவில் அந்த சேதமடைந்த அந்த தரைப்பாலம் சாலைகளை சரி செய்து மீண்டும் போக்குவரத்து செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதேபோல் பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளதால் இந்தாண்டில் இனி வரும் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் நன்றாக உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்பது விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் மகிழ்ச்சியை தந்துள்ளது.

    Next Story
    ×