என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் மணல் திருட்டு

    தேவகோட்டை விருசுழி ஆற்றில் மணல் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விருசுழி ஆற்றில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பருவமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழை குறைந்ததால் ஆற்றில் வரும் தண்ணீர் குறைந்தது.

    இதனையடுத்து தேவகோட்டை ஆற்று ஓரங்களில் மணல் திருடர்கள் தங்களது கைவரிசையை ஆரம்பித்துள்ளனர். தேவகோட்டை ஆற்றுப் பாலத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.

    ஆற்றில் மணல் மூட்டைகளாக சேகரித்து பின்பு வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். ஆற்றின் உட்புறத்தில் மண் மூடைகள் ஆங்காங்கே உள்ளதை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கிராம மக்கள் கூறுகையில், விருசுழி ஆற்றில் மணல் திருட்டு நடந்து கொண்டே இருக்கும். அதை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் மணல் திருட்டு இல்லாமல் இருந்தது. தற்போது ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் மணல் கொள்ளையர்கள் எந்திரங்கள் மற்றும் வாகனங்கள் ஆற்றில் உட்புறம் ஈரப்பதமாக உள்ளதால் சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி ஆற்றின் கரையில் வைத்து பின்னர் வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர்.

    இந்த தொடர் மணல் திருட்டால் ஆற்றின் கரையோரம் இருக்கும் கிராமப்புற வீடுகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக கூட இனி ஆற்றில் மணல் இருக்காது என்று வேதனை தெரிவித்தனர்.

    Next Story
    ×