என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேவகோட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்

    கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தேவகோட்டை ராம்நகர் காரைக்குடி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு தி.மு.க. அரசு 2008-ம் ஆண்டு பட்டா வழங்கியது. அந்த பட்டாவில் கணேசபுரம் என்பதற்கு பதிலாக கழனி வாசல் என்று இருந்தது.

    இதையடுத்து பட்டாவில் திருத்தம் செய்து கொடுக்கவும் விடுபட்டவர்களுக்கு பட்டா வழங்கவும் பலமுறை அரசு அதிகாரிகளை சந்தித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    இந்த நிலையில் நேற்று 200-க்கும் மேற்பட்டோர் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றனர்.

    கோட்டாட்சியர் பிரபாகரன் அலுவலகத்திற்கு வராததால் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு சரியான முறையில் பதில் அளிக்கவில்லை.

    நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் தேவகோட்டை ராம்நகர் காரைக்குடி-ராமேசுவரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பலனில்லை. இது குறித்து வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்த துணை கண்காணிப்பாளர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தார். சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் அந்தோணி, கோட்டாட்சியர் உங்களது இடத்திற்கே வந்து உங்களது குறைகளை கேட்க வருவதாக உங்களிடம் தெரிவிக்க சொன்னார். இதனை ஏற்ற பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக ½ மணி நேரமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×