என் மலர்
சிவகங்கை
சிவகங்கை போலீசார் திருச்செந்தூர் சென்று சித்தார்த்தை அழைத்துவர சென்றுள்ளனர். சித்தார்த் வந்த பின்னர் தான் அவர் எப்படி அங்கு சென்றார் என்பது தெரியவரும்.
சிவகங்கை:
சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிவேல். இவர் இந்திய ராணுவத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிகிறார். இவருக்கு 2 மகன்கள். இவரது 2-வது மகன் சித்தார்த் (வயது13) சிவகங்கையில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சித்தார்த் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான் திடீரென்று அவனை காணவில்லை.
தொடர்ந்து அவனது தாயார் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். சித்தார்த்தை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அவனது தாயார் சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சித்தார்த் திருச்செந்தூரில் உள்ள கடற்கரையில் இருந்துள்ளார். இதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் சித்தார்த்தை மீட்டு அங்குள்ள புறக்காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தார்.
அவர் மீட்கப்பட்ட தகவலை திருச்செந்தூர் போலீசார் சிவகங்கை காவல் நிலையத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சிவகங்கை போலீசார் திருச்செந்தூர் சென்று சித்தார்த்தை அழைத்துவர சென்றுள்ளனர். சித்தார்த் வந்த பின்னர் தான் அவர் எப்படி அங்கு சென்றார் என்பது தெரியவரும்.

புதுவயல் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுவயல், கண்டனூர், மித்திரா வயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
விளைந்த பயிரை விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து காப்பாற்ற வயல்களை சுற்றி விவசாயிகள் சேலைகளை கொண்டு வேலிகள் அமைத்துள்ளனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலும் வசிக்கும் மக்கள் அதிகஅளவில் விவசாய தொழிலை நம்பி வாழ்ந்து வருகின் றனர். மேலும் இந்த பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ள தால் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவமழை நன்றாக பெய்து இங்குள்ள நீர்நிலைகள் நிரம்பினால் மட்டுமே இந்த பகுதியில் விவசாயம் செழிக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு கடந்த காலக்கட்டத்தில் இந்த மாவட்டத்தில் போதிய மழைஇல்லாமல் இருந்ததால் விவசாய தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெய்த பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக இந்த ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஆறுகள், ஊருணிகள் நிரம்பின.
இதை பயன்படுத்தி விவசாயிள் தங்களது விளை நிலங்களில் விவசாயம் செய்து அவற்றை பராமரித்து வருகின்றனர். முன்கூட்டியே விவசாயம் செய்த விவசாயிகள் நெல் பயிர்கள் விளைந்து தற்போது அறுவடைக்காக காத்திருந்த நிலையில் உள்ளது. மானாமதுரை, சிவகங்கை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பயிரிட்ட நெல் பயிர்கள் தொடர் மழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையில் மூழ்கி விவசாயிகளுக்கு பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளால் விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஏமாற்றமும், பெரும் நஷ்டமும் கிடைத்த நிலையில் தை மாத அறுவடைக்காக தயார் நிலையில் உள்ள நெல் பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நெல் கதிர்களை ஆடு, மாடு, பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் உள்ளிட்டவைகளால் நெல்பயிர்கள் அதிகஅளவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது.
இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் நெல் பயிரை காப்பாற்றும் வகையில் வயலை சுற்றி சேலைகள் கொண்டு வயல்களை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் பகல் நேரங்களில் விலங்குகள் தொல்லையும், இரவு நேரங்களில் காட்டு விலங்குகள் வயலில் இறங்கி நெல்பயிரை சேதப்படுத்துவதையும் தவிர்க்கும் வகையில் இந்த வேலியை அமைத்துஉள்ளனர். இதனால் எளிதாக வயலில் உள்ளே விலங்கு மற்றும் பறவைகள் நுழைவதை தடுக்க முடியும். இதுதவிர பகல் நேரங்களில் வயல்வெளிகளுக்கு செல்லும் விவசாயிகள் சத்தங்களை எழுப்பி பறவைகளிடம் இருந்து நெல்பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.
இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ரவி என்ற ரபீக் ராஜா (வயது22). இவர் கொத்தனார் மற்றும் கட்டிட பணிகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வந்தார். கண்மாய் கரை பகுதியில் சென்ற மின்சார கம்பி மீது சாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரபீக்ராஜா உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
இளையான்குடி அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:
இளையான்குடி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ஹனிபா மகன் ரவி என்ற ரபீக் ராஜா (வயது22). இவர் கொத்தனார் மற்றும் கட்டிட பணிகளுக்கான அனைத்து பணிகளையும் செய்து வந்தார். கண்மாய் கரை பகுதியில் சென்ற மின்சார கம்பி மீது சாய்ந்த நிலையில் இறந்துகிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த இளையான்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரபீக்ராஜா உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து வருகிறது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் குளிர் நிலவி வரும் வேளையில் பனிப்பொழிவு அதிகஅளவில் உள்ளது. இந்த பனிப்பொழிவானது பகலிலும் மிதமான வெயிலோடு சேர்ந்து வாட்டி வதைக்கிறது.
மேலும் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பகலில் விளக்குளை எரியவிட்டபடியே செல்லும் நிலை உருவாகி உள்ளது.
காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல்பயிர்கள் தரையில் சாய்ந்த நிலையில் கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்து இங்குள்ள நீர்நிலைகளாக உள்ள கண்மாய்கள், ஆறுகள், குளங்கள், ஊருணிகள் தற்போது நிரம்பி காட்சிஅளிப்பதால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.

இதற்கு முந்தைய காலங்களில் இரவு மட்டுமே பனிப்பொழிவு இருந்து வந்த வேளையில் தற்போது பகல் நேரத்திலும் கூட அதன் தாக்கத்தை உணர முடிகிறது. மேலும் தை பொங்கலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயிரிட்ட நெல்பயிர்கள் கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல ஏக்கர் நெல்பயிர்கள் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் அறுவடை செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வெட்டி வைத்திருந்த விறகுகளை எடுத்து விற்றதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை அடுத்த வடவிருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது65) இவரது மனைவி சந்திரா (52). கூலி தொழிலாளியான சுப்பையா விறகுவெட்டி வந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வடவிருக்கை கிராமத்தில் சுப்பையாவும் அவரது மனைவியும் விறகுவெட்டி வைத்திருந்தனர். அந்த விறகை அதே கிராமத்தைச் சேர்ந்த கிருபாலன் (52) என்பவர் எடுத்துச்சென்று விற்று விட்டாராம். இது குறித்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கிருபாலன் சுப்பையாவின் மனைவி சந்திராவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக சாலைகிராமம் போலீசார் கிருபாலனை கைதுசெய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதிசாய்பிரியா குற்றம் சாட்டப்பட்ட கிருபாலனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 15000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
சிவகங்கை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ண ராஜா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சவுந்திரராஜன், சுரேஷ், ஏட்டு சரவணகுமார் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன குன்றக்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியில் வந்த மினி லாரி ஒன்றை மறித்து சோதனை செய்தனர். அந்த லாரியில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் சிவகங்கையை சேர்ந்த பால சரவணன் (வயது42) மற்றும் லாரியில் அரிசியை கடத்தி வந்த மூர்த்தி (44) ஆகிய 2 பேரை கைது செய்து லாரியுடன் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டையை சிவகங்கையில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி சிறிய பொங்கல் பானை முதல் பெரிய வகை பானை வரை செய்து உலர்த்தும் பணி மானாமதுரை பகுதியில் மும்முரமாக நடந்து வருகிறது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் தயாராகும் மண்பாண்ட பொருள்களை தமிழகம் முழுவதும் விரும்பி வாங்கி வருகின்றனர். இங்கு ஆண்டு முழுவதும் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களில் தொடர்மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழில் முடங்கியது. தற்போது மழைபொழிவு இல்லாமல் மிதமான வெயில் அடிப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்வத்துடன் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறிய பொங்கல் பானை முதல் பெரிய வகை பானை வரை செய்து உலர்த்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் விதவிதமாக மண்பாண்ட பொருட்களை செய்து வருகின்றனர்.
மண்பானை தவிர கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு பூச்செடிகள் வளர்ப்பதற்கு பூந்தொட்டிகள், ஜாடி மற்றும் மண் அடுப்புகள், கோவில் பொங்கல் திருவிழாவிற்கு அக்கினி சட்டிகள், ஆயிரம் கண் பானைகள், கிளியான் சட்டிகள், மண் விளக்குகளையும் தயாரித்து உலர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50 முதல் ரூ. 200 ரூபாய் வரை மண்பானைகள் கிடைக்கிறது.
தமிழர் பாரம்பரியம் காக்கும் வகையில் அரசு இலவசமாக வழங்கும் பொங்கல் பரிசு தொகுப் புகளுடன் மண் பானையும், மண் அடுப்பும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்கினால் மண்பாண்ட தொழில் சிறப்படையும் என தொழிலாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.

தேவகோட்டை அருகே சாலை விபத்தில் கலெக்டரின் பாதுகாப்பு போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை டாக்டர் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகம்மது மீரா பாஜித் (வயது23). இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனனின் பாதுகாப்பு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையில் இருந்து காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு திருச்சி-ராமேசுவரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நாய் குறுக்கே பாய்ந்ததால் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழடியில் வயலில் தேங்கிய தண்ணீரை கடத்தியபோது கீழடியில் உறைகிணறு தென்பட்டது.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. பின்னர் மாநில அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.
இதில் 4,5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் நடைபெற்றது. 6, 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடி மற்றும் அதை சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதுவரை நடைபெற்றுள்ள 7 கட்ட அகழ்வாராய்ச்சியில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்த பொருட்கள் மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றி தெரியவந்துள்ளது.
தற்போது கீழடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள வயல்களில் விவசாயம் செய்யப்பட்டு இருந்தது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையாலும், கால்வாயில் தண்ணீர் வந்ததாலும் வயல் பகுதியில் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளது. இதனால் பயிர்கள் அறுவடை தாமதமாகி உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தண்ணீரை கடத்த வயலின் அருகில் பள்ளம் தோண்ட முயற்சி செய்துள்ளனர். பள்ளம் தோண்டும்போது ஆற்றுமணல் தென்பட்டு உள்ளது. மேலும் ஆழமாக பள்ளம் தோண்டும்போது உறைகிணறு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் தொல்லியல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் உத்தரவின்பேரில் தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் சென்று உறைகிணறு உள்ள பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விவசாய பயிர்கள் அறுவடை முடித்த பின்பு உறைகிணறு பற்றிய அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

கானாடுகாத்தான் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
காரைக்குடி:
கானாடுகாத்தான் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை ஸ்ரீ ராம்நகர், கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், செட்டி நாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகப் பட்டி ஆவுடைப்பொய்கை உறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய செயற் பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.