என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - சிவகங்கை கோர்ட்டு உத்தரவு
வெட்டி வைத்திருந்த விறகுகளை எடுத்து விற்றதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தை அடுத்த வடவிருக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது65) இவரது மனைவி சந்திரா (52). கூலி தொழிலாளியான சுப்பையா விறகுவெட்டி வந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி வடவிருக்கை கிராமத்தில் சுப்பையாவும் அவரது மனைவியும் விறகுவெட்டி வைத்திருந்தனர். அந்த விறகை அதே கிராமத்தைச் சேர்ந்த கிருபாலன் (52) என்பவர் எடுத்துச்சென்று விற்று விட்டாராம். இது குறித்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த கிருபாலன் சுப்பையாவின் மனைவி சந்திராவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுதொடர்பாக சாலைகிராமம் போலீசார் கிருபாலனை கைதுசெய்து அவர் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுமதிசாய்பிரியா குற்றம் சாட்டப்பட்ட கிருபாலனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 15000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story






