search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்மங்குடி பகுதியில் விளைந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்து கிடப்பதை காணலாம்
    X
    கும்மங்குடி பகுதியில் விளைந்த நெல்பயிர்கள் தரையில் சாய்ந்து கிடப்பதை காணலாம்

    கடும் பனிப்பொழிவால் தரையில் சாய்ந்த நெற்பயிர்கள்

    சிவகங்கை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் தரையில் சாய்ந்து வருகிறது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் குளிர் நிலவி வரும் வேளையில் பனிப்பொழிவு அதிகஅளவில் உள்ளது. இந்த பனிப்பொழிவானது பகலிலும் மிதமான வெயிலோடு சேர்ந்து வாட்டி வதைக்கிறது.

    மேலும் தற்போது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் காலை 8 மணி வரை பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளிப்பதால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பகலில் விளக்குளை எரியவிட்டபடியே செல்லும் நிலை உருவாகி உள்ளது.

    காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெல்பயிர்கள் தரையில் சாய்ந்த நிலையில் கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகஅளவில் பெய்து இங்குள்ள நீர்நிலைகளாக உள்ள கண்மாய்கள், ஆறுகள், குளங்கள், ஊருணிகள் தற்போது நிரம்பி காட்சிஅளிப்பதால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு தற்போது சிவகங்கை மாவட்டத்தில் பனிப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது.

    இதற்கு முந்தைய காலங்களில் இரவு மட்டுமே பனிப்பொழிவு இருந்து வந்த வேளையில் தற்போது பகல் நேரத்திலும் கூட அதன் தாக்கத்தை உணர முடிகிறது. மேலும் தை பொங்கலை கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயிரிட்ட நெல்பயிர்கள் கதிர்கள் முற்றிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பல ஏக்கர் நெல்பயிர்கள் தரையில் சாய்ந்துள்ளது. இதனால் அறுவடை செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×