என் மலர்tooltip icon

    சிவகங்கை

    காரைக்குடி அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனங்களை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அடிக்கடி ரேசன்அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு  புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    இந்த நிலையில் அந்த வழியே வந்த மினிவேனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.  பொதுமக்கள் வேனை சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. 

    இதனைத்தொடர்ந்து அந்த வேன் குடிமைப்பொருள் குற்ற  புலனாய்வுதுறை சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.  அவர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    வேனில் சுமார் 5 டன் அளவிலான ரேசன் அரிசி இருந்தது. இதற்கிடையே மேலும் 2 இருசக்கர வாகனங் களில்  கடத்தி வரப்பட்ட சுமார் 300 கிலோ ரேசன்அரிசியும்  பறிமுதல் செய்யப்பட்டது. 

    கடத்திவர பயன்படுத்திய வாகனங்களின் பதிவெண்களை வைத்து உரிமையாளர்களின்மீது வழக்கு பதியப் படும் என எஸ்.ஐ. முத்துகிருஷ்ணன் தெரிவித்தார். 

    சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி

    காரைக்குடி அன்சாரி தெருவை சேர்ந்தவர் ராமு என்ற ராமகிருஷ்ணன். ஆட்டோ  டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 

    இதுகுறித்து அந்த சிறுவன் தனது பெரியம்மாவிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து  ஆட்டோ டிரைவர் ராமுவை கைது செய்தனர்.
    சிவகங்கை மாவட்டத்தில் கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அரசின் சேவைகள் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கணினி திருத்த சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை களில் நடைபெற உள்ளது. 

    அதன் தொடர்ச்சியாக நாளை (6ந்தேதி) தேவகோட்டை வட்டத்தில் கிளாமலை குரூப் தேர்போகி கிராமம், மேலச்செம் பொன்மாரி மற்றும் உஞ்சனை கிராமங்களிலும், திருப்பத்தூர் வட்டத்தில் சுண்ணாம்பிருப்பு மற்றும் இளங்குடி கிராமங்களிலும், சிவகங்கை வட்டத்தில் ஆலங்குளம் மற்றும் கத்தப்பட்டு கிராமங்களிலும், இளையான்குடி வட்டத்தில் முள்ளியாரேந்தல் மற்றும் மேலப்பிடாரிச்சேரி கிராமங் களிலும், காளையார்கோவில் வட்டத்தில் தடியமங்கலம் கிராமத்திலும் கணினி பட்டா திருத்த முகாம்கள் நடைபெற உள்ளன.

    பொதுமக்கள் மேற்கண்ட வருவாய் கிராமங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு கோரிக்கை குறித்த மனுக்களை அளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தேவகோட்டையில் பெயிண்டர் கொலையில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புதுத் தெருவைச் சேர்ந்தவர் உமர் பாருக் (வயது 38), பெயிண்டர். இவர் சாத்திக் கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் ரத்தக்காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உமர் பாருக் பரிதாபமாக இறந்தார். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதால் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவகுமார், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இதில் உமர் பாரூக்கை கொலை செய்ததாக சின்னக் கோடகுடியைச் சேர்ந்த விமல் (வயது 24), பிரவீன் (20), கைக்குடியைச் சேர்ந்த பிரபா என்ற பிரபாகரன் (26), நல்லாங்குடி செல்வ குமார் (24), பல்லாகுளம் தர்மர் (24), தேரளப்பு கார்த்திக் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து கைதானவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    உமர்பாரூக் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்தபோது அங்கு வழிப்பறி வழக்கில் கைதாகி விமல் இருந்தார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு விடுதலையாகி வந்த அவர்கள் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதில் கிடைத்த பொருட்களை உமர் பாருக்கிடம் மற்றவர்கள் கொடுத்ததாகவும் அது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்காததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எதிர்காலத்தில் நாய்க்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக முதியவர் முத்துவின் மகன் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை சேர்ந்த 82 வயது முதியவர் முத்து. இவர் 'டாம்' என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இது கடந்த 2021-ம் ஆண்டில் உயிரிழந்துள்ளது.

    இதனால் வேதனையில் இருந்த முதியவர், டாமின் நினைவாக மானாமதுரையில் சிலை ஒன்றை கட்டியுள்ளார். அதற்கு, மாலை, ஆடை அணிவித்து வழிபாடு செய்த நிகழ்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

    இதுகுறித்து முதியவர் முத்து கூறுகையில், " என் பசங்களைவிட என் நாய் மீது அதிகம் பாசம் கொண்டேன். 2010-ம் ஆண்டு முதல் என்னுடன் இருந்தது. 2021-ல் இறந்துவிட்டது. என் தாத்தா, பாட்டி, தந்தை என அனைவரும் நாய் பிரியர்கள்" என்றார்.

    மேலும் முத்துவின் மகன் மனோஜ் குமார் கூறியதாவது:-

    இறந்த டாம் நாய்க்கு ரூ.80 ஆயிரம் செலவில் இந்த பளிங்கு சிலை செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நாய்க்கு கோவில் கட்ட திட்டமிட்டுள்ளோம். புனித நாட்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னதானம் செய்து சிலைக்கு மாலை அணிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. போட்டோ ஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி- திருமணமான 20 நாளில் பரிதாபம்
    போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசுகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது.
      
    அரசு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் இங்கு நடைபெறும் இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நிலை2, நிலை2 அ(tnpsc GR-II & II A)  தேர்வுகளுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 50 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். 

    மேலும், தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமத்தால் 444 உதவி ஆய்வாளர் (காவல்) பதவிக்கு காலிப்பணியிடங் கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வேலை நாளில் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் நாளை (5ந்தேதி) முதல் பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    இந்த வகுப்புகள் தொடர்பான முழு விபரங்களை வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவ லகத்தை நேரடியாகவோ அல்லது 04575 240435 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே, இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் மேற்காணும் போட்டித் தேர்விற்கு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    இளையான்குடியில் தொழில் முனையோர் கருத்தரங்கம் நடந்தது.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர்உசேன் கல்லூரியில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்   சாகிர் உசேன் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து  தொழில் முனைவோர் வியாபாரம் திறமை மற்றும் வளர்ச்சி குறித்த 5வது கருத்தரங்கை நடத்தியது. 

    கல்லூரி  பொருளியல் துறை, உதவிப்பேராசிரியர்  மாரிமுத்து வரவேற்றார். வணிகவியல்துறை இணை பேராசிரியர்  பீர் இஸ்மாயில் மற்றும்  முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் பேசினர். 

    தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர்  நாசர் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக கீழக்கரை, செய்யது ஹமீதியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை தலைவர்  பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேராசிரியர்கள், 70 மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கணித்துறை உதவி பேராசிரியர்  ஆரிப் ரஹ்மான் நன்றி கூறினார்.
    கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள குமாரளபேட்டை, என். வைரவன்பட்டி, ஆத்தங்குடி, சென்னல்குடிபட்டி, திருமுக்கனிபட்டி ஆகிய 5 ஊர் நாட்டார்கள் இணைந்து குமாரபேட்டை பூமலைச்சி அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தினர்.

    நிகழ்ச்சியில் கோவிலில் இருந்து 5 ஊர் நாட்டார்கள் இணைந்து பட்டு எடுத்து வந்து தொழுவில் பங்கேற்ற 235 மாடுகளுக்கு வேட்டி, துண்டுகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    மாடுபிடி வீரர்களுக்கும் பங்கேற்ற காளைகளுக்கும் பரிசுகள் வழங்கினர். 40 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கீழச்சிவல் பட்டி காவல்துறையினர், வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், கால்நடை துறையினர், சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

    மஞ்சு விரட்டுக்கான ஏற்பாடுகளை 5 ஊர் நாட்டார்கள் செய்திருந்தனர். மஞ்சு விரட்டில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    தேவகோட்டையில் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பாட்டில்குத்து விழுந்தது.
    தேவகோட்டை

    மதுரை ஆனையூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தர்ஷன்(வயது 30). அதே பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் ஜீவா(27) மற்றும் சந்துரு ஆகிய 3பேரும் பெயிண்டராக வேலை பார்த்து வரு கிறார்கள்.

    இவர்கள் 3பேரும் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் பெயிண்டிங் பணிக்காக சென்றனர். அங்கு தங்கி  வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால் தனியாக வீடுஎடுத்து தங்கினர்.

    காலையில் வழக்கம்போல் நண்பர்கள் 3பேரும் வேலைக்கு சென்றனர். அதன் பிறகு மாலையில் வீடு திரும்பிய அவர்கள் மது அருந்தினர். அப்போது  ஜீவாவுக்கும், தர்ஷனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரம் அடைந்த ஜீவா மது பாட்டிலால் தர்ஷனை குத்த முயன்றார். அதனை தடுத்தபோது தர்ஷனின் கையில் குத்து விழுந்தது. ரத்தகாயம் அடைந்த அவரை சந்துரு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக் காக சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து ஜீவா கைது செய்யப்பட்டார்.
    மானாமதுரையில் ஓய்வுபெற்ற அரசுஅலுவலர்கள் சங்கவிழா நடந்தது.
     மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் 35வது ஆண்டுவிழா நடந்தது.  தலைவர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், பொருளாளர் சோமசுந்தரம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். 

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நகராட்சித் தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், தி.மு.க. நகர செயலாளர் பொன்னுசாமி, வார்டு உறுப்பினர்கள் இந்துமதி, புருஷோத்தமன், மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். 

    தமிழக அரசு ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் மறைவிற்குப் பின் அவர்களது வாரிசுகளுக்கு வழங்கப்படும் குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். 

    பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் கருணைத் தொகையை ரூ 500லிருந்து ரூ.1000ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சரகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதற்கு போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புது தெருவை சேர்ந்தவர் பிரான்மலை. இவரது மகன் உமர்பாரூக் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி ரிஸ்வானா பர்வீன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    உமர்பாரூக் பெயிண்டிங் மற்றும் கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் மணல் கடத்தல் வழக்கில் கைதாகி சிறை சென்றுள்ளார். அதன் பிறகு வழக்கம்போல் பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

    நேற்று உமர்பாரூக் வீட்டில் இருந்து மாலை 3 மணிக்கு வெளியே புறப்பட்டு சென்றார். இரவு 10 மணி ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உமர்பாரூக்கை தேடினர்.

    இந்த நிலையில் சாத்திக்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை பின்புறம் அவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த உமர்பாரூக்கை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தேவகோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சிவக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.

    உமர்பாரூக்கை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறையில் இருந்தபோது உமர்பாரூக்குக்கு அங்கு ஏற்கனவே வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் இருந்தவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இந்த பழக்கம் நீடித்துள்ளது. எனவே அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை சரகத்தில் கடந்த சில நாட்களாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு போலீஸ் நிலையங்களில் போதுமான போலீசார் இல்லாததே காரணம் என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர். பல இடங்களுக்கும் ரோந்து செல்ல போலீசார் இல்லாததால் குற்றச்செயல்கள் தொடர்வதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையை தடுக்க போலீசார் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.




    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கருதாவூரணியில்  தொழிலதிபர் அழகப்பன் வீட்டில்  நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் வீட்டின் காவலாளி வட்டாயுதம் பலத்த தீக்காயம் அடைந்தார்.

    சம்பவம் குறித்து துணை கண்காணிப்பாளர்   சிவக்குமார், தாலுகா காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தினர். 

    தனிப்பிரிவு காவலர் கர்ணன் கொடுத்த தகவலின்படி   செங்கற்கோவிலார் வீதியை  சேர்ந்த  தனுஷ் (18) மற்றும் 2 சிறுவர்கள்  சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை  போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். 

    சிறுவர்களை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது  விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ×