என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சித்திரை திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்7 April 2022 9:56 AM GMT (Updated: 7 April 2022 9:56 AM GMT)
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி -சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாஆண்டு தோறும் கொண்டாப்பட்டு வருகிறது.
இந்தஆண்டுக்கான விழா இன்று காலை 9மணிக்கு மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக நேற்று மாலை விக்னேஸ்வர வாஸ்து பூஜைகள் நடைபெற்றன.
முதல்நாள் விழாவில் இன்று அம்மன் பிரியாவிடையுடன் கற்பகவிருஷம் சிம்மவாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் அதைதொடர்ந்து தினமும் இரவு பூதம், அன்னம் பறவை, கமலம், கைலாசம், யானை, கிளி ,இரண்டு குதிரை, இரட்டை சப்பரம் ஆகிய வாகனங்களில் வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான சுவாமி&அம்பாள் திருக்கல் யாணம் வருகிற 14ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மறுநாள் (வெள்ளிகிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து விழா வரும் 17ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல் வைகைஆற்று கரையில் உள்ள வீர அழகர் கோவிலில் வரும்14ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா தொடங்கு கிறது. 15ந்தேதி இரவு எதிர்சேவை நிகழ்ச்சியும் 16ந்தேதி வீர அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.
திருவிழாவிற்காக மானாமதுரை வைகைஆறு முழுவதும் நகராட்சி தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, துணை தலைவர் பால சுந்தரம், ஆனையாளர் கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில் சீரமைக்கும்பணி முடிக்கப்பட்டுஉள்ளது.
திருவிழாவை முன்னிட்டு மானாமதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் மேற்பார்வை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
Next Story
×