என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டரசன்கோட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    X
    நாட்டரசன்கோட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தடுப்பூசி முகாம் குறித்து கலெக்டர் ஆய்வு

    தடுப்பூசி முகாம், நூலகம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை பேரூராட்சி சமுதாயக்கூடத்தில் நடந்த 28வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட கலெக்டர்  மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு  செய்தார். 

    பின்னர் அவர் கூறுகையில், முதலமைச்சர் உத்தரவின்படி, 12.9.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 12-9-2021 முதல் 2-4-2022 வரை 27 சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை 7 லட்சத்து 27 ஆயிரத்து 980 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 

    கடந்த 16.1.2021 முதல் 7.4.2022 வரை மொத்தம்  19 லட்சத்து 60 ஆயிரத்து 765 தடுப்பூசிகள் செலுத்தப்-பட்டுள்ளது. 

    சிவகங்கை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பூசி 10.1.2022 முதல் 8 ஆயிரத்து 790 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை அவசியம் செலுத்திக் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 

    அதனைத்தொடர்ந்து, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி பகுதியிலுள்ள நூலகத்தில் கலெக்டர் பார்வையிட்டு நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

     நூலகத்தினுள் இருந்த புத்தக வாசகர்கள் மற்றும் தேர்வுக்கு தயராகும் தேர்வாளர்களிடம் தேவையான அனைத்து வகையான புத்தகங்கள் உள்ளனவா என்பது குறித்தும், இந்த நூலகத்தை மேம்படுத்த வேண்டிய தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

    இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்-பணிகள்) ராம்கணேஷ், நாட்டரசன்கோட்டை பேரூராட்சித் தலைவர் பிரியதர்சினி ஜெபராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னமருது, மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×