என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயராமன்.
மாடு முட்டியதில் டி.வி. மெக்கானிக் பலி
திருப்பத்தூரில் மாடு முட்டி டி.வி. மெக்கானிக் பலியானார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது இளைய மகன் சுப்பிரமணியன் (38). இவர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகவீதியில் தொலைக்காட்சி பழுதுபார்க்கும் தொழில் (டி.வி. மெக்கானிக்) செய்து வந்தார்.
கடந்த 3ந்தேதி இவர் மதுரை ரோட்டில், பெட்ரோல் பங்க் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் திரிந்த மாடு இவரது வாகனத்தை முட்டிதள்ளியது. இதில் நிலைதடுமாறி கீழேவிழுந்த சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் பகுதியில் மாடுகளை பிடிப்பதற்கு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
Next Story






