என் மலர்
உள்ளூர் செய்திகள்

கருப்பணசாமி கோவில்
கருப்பணசாமி கோவில் களரி திருவிழா
திருப்பாச்சேத்தி அருகே கருப்பணசாமி கோவிலில் களரி திருவிழா நடந்தது.
மதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும் களரிதிருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங் கியது. நேற்று களரி திருவிழாவை முன்னிட்டு காலை முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக மாரநாடு கோவிலில் குவிந்தனர். அங்கு அவர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி சாமிகும்பிட்டனர்.திருவிழாவை முன்னிட்டு இரவு கோவில் கோபுரம் மின்னொளியில் ஜொலித்தது.
நேற்று இரவு விடிய விடிய மாரநாடு கருப்பணசாமி கோவில் திருவிழா களைகட்டியது. இரவு 9 மணிமுதல் பெண்கள், குழந்தைகள் என கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தவண்ணம் இருந்தனர்.
இரவு நீண்ட நேரம் காத்திருந்து அதிகாலை 4 மணியளவில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழங்கிய மாலைகள் சன்னதி முன்பு குவிக் கப்பட்டன. இன்று அதி காலை சிறப்பு பூஜை முடிந்தவுடன் அந்த மாலையை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.
திருவிழாவை முன்னிட்டு கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
Next Story






