என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி கடத்திய வேன் மற்றும் ஆட்டோவை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த போது எடுத்தப் படம்.
    X
    ரேசன் அரிசி கடத்திய வேன் மற்றும் ஆட்டோவை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த போது எடுத்தப் படம்.

    தொடரும் ரேசன் அரிசி கடத்தல்

    காரைக்குடி பகுதியில் போலீசார் நடவடிக்கை இல்லாததால் ரேசன் அரிசி கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள ஒருசில அரிசி ஆலைகளுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேசன் அரிசியை கடத்தி வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மினிவேன் மற்றும் 2  இருசக்கர வாகனங்-களில கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி மூடைகளை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் ஒரு ஆட்டோவிலும், மினிவேனிலும் ரேசன் அரிசியை சிலர் கடத்தி வந்தனர். அந்த வாகனங்களை பொதுமக்கள் பிடித்தபோது டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர். வாகனங்களில் இருந்து சுமார் 2 டன்அளவில் கடத்தல் ரேசன்அரிசி பிடிபட்டது.

    இதுகுறித்து நகர காங்கிரஸ் தலைவரும், பேரூராட்சி உறுப்பினருமான கொத்தரி கருப்பையா கூறுகையில், கடந்த மாதத்தில் மட்டும் 4முறை கடத்தல் அரிசியை பொது-மக்கள்  ஒத்துழைப்போடு பிடித்துள்ளோம். சுமார் 25டன் அளவில் ரேசன் அரிசி மீட்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டாலும், வாகன பதிவெண்களை வைத்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அப்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரேசன்அரிசி கடத்தும் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால் விபத்து அபாயம் உள்ளது. குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் நிலையம் சிவகங்கையில் உள்ளதால் பொதுமக்களே களத்தில் இறங்கி தடுக்கி-றோம். 

    எனவே ரேசன்அரிசி கடத்துபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் மோதல் ஏற்படும் அச்சம் உள்ளதால் தமிழக முதல்வர் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்றார்.
    Next Story
    ×