என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.
    • இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பைப்பூரை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 28), டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். இவருக்கு சர்மிளா தேவி (25) என்ற மனைவியும், மணிகண்டன் (5), கிருசிகா (3) என்ற குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 20-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அப்புசாமி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரை உறவினர்கள் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்டிபட்டியைச் சேர்ந்த போத்தன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், அப்புசாமி பிணமாக மிதந்தார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கு இடையே அங்கு வந்த ஓமலூர் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்து இறந்தாரா என்பது தொடர்பாக தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    மேச்சேரி காளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). மளிகை கடை வைத்துள்ளார். அவரது மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு திருமணமான 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற ராஜேந்திரன், பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தொடர்ந்து தேடியபோது மேச்சேரி தொப்பூர் சாலையில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாயக் கிணறு அருகே, ராஜேந்திரன் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது.

    இதை கண்டு சந்தேகம் அடைந்த உறவினர்கள் மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றிற்குள் இறங்கி பார்த்தபோது ராஜேந்திரன் அதில் பிணமாக மிதந்தார்.

    அவரது உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கிணற்றில் விழுந்து இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா என்பது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது.
    • அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ,வீரபாண்டி மெயின் ரோடு வேங்காம்பட்டி அருகே உள்ள ெரயில்வே கேட் பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய சாலையாக உள்ளது.

    இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வாகனங்கள் வந்து

    செல்கின்றன. அதன் வழியாக ெரயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி மல்லூர் பேரூராட்சியில் கடந்த 2011 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அனுப்பப்பட்டது .

    மேலும் கடந்த 2021 -ம்

    ஆண்டு மல்லூர் பேரூ ராட்சி பொதுமக்கள் தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ஆர்ப்பாட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் வேங்காம்பட்டி ெரயில்வே கேட் முன்பு

    ெரயில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர்.

    இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தில் அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டு உதவி கோட்ட பொறியாளர் ஆத்தூர் துணைக்கோட்ட அலு வலகத்திற்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பது தொடர்பாக சுமார் ரூ. 3.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் மல்லூர் பேரூராட்சிக்கு தென்னக ெரயில்வே கடிதம் அனுப்பி உள்ளது. அதில், 2 மாதங்களில் சுரங்கப்பாதைக்கான பணி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் இன்று நடைபெறவிருந்த ெரயில் மறியல் போராட்டம் தற்கா

    லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை

    அய்யனார் தெரி வித்துள்ளார். பாலம் அமைப்பதால் அந்த வழியாக போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் அந்த பகுதி மக்கள் மல்லூர் பேரூராட்சி துணைத் தலைவர் வேங்கை அய்யனாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • மேட்டூர் அணையில் மீன் வளத்தை பெருக்குவதற்காக ஓராண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பு தக்க வைக்கப்படுவதால் அணையில் மீன் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது.

    அணையில் கிடைக்கும் மீன்கள், உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் காவிரி நெடுக மீன் வளம் அதிகரித்து கரையோர மாவட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது.

    அணையில் மீன் வளத்தை அதிகரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு மேட்டூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஈடுபட்டு வருகிறது.

    இந்த அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடுவிக்கப்படுகின்றன.

    மேட்டூர் அணை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி நிரம்பியது. அதன் பின்னர் நீர்மட்டம் சில அடிகள் குறைந்து வந்தபோதிலும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி, நீர்மட்டம் 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. அணையில் தற்போது வரை 100 அடிக்கு மேல் நீர்மட்டம் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி, தற்போது வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுள் அணையில் விடுவிக்கப்பட்டுள்ளன. மீன்வளத்துறை சார் ஆய்வாளர் பாலதண்டாயுதம் மற்றும் அதிகாரிகள் தொடர்ச்சியாக நேற்றும் மீன் குஞ்சுகளை அணையில் விடுவித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மேட்டூர் அணையில் மீன் வளத்தை பெருக்குவதற்காக ஓராண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகளை அணையில் விடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கடந்த ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை 63.86 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக கட்லா 6.02 லட்சம், ரோகு 53.18 லட்சம், மீர்கால் 3.88 லட்சம், கெண்டை 78 ஆயிரம் என பல ரக மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வருகிற ஜூன் மாதத்துக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கின்படி மொத்த மீன்களும் அணையில் விடப்படும். அணையில் போதிய அளவு நீர் இருப்பதால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும், என்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.
    • மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 841 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்றும் அதே அளவில் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 103.71 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 103.68 அடியானது. இனிவரும் நாட்களில், நீர்வரத்து குறையும்பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

    • கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன.
    • ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்ட சுற்றுலா தலங்களில் ஏற்காடு பிரதானமாக விளங்குகிறது. இங்குள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான காட்டெருமைகள், மான், நரி உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருகின்றன.

    தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு, அங்கு வசிக்கும் காட்டெருமைகள் தண்ணீரை தேடி ஊருக்குள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    நேற்று ஏற்காடு முளுவி கிராமம் செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று ஹாயாக நடந்து சென்றது. இதை கண்ட வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். காட்டெருமைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்காடு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
    • மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- பிரதம மந்திரி கிஷான் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் நிலமுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்குதல் மற்றும் வேளாண்மை தொடர்பாக செலவினங்கள் மேற்கொள்ள ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது 7953 விவசாயிகள் தனது பயன்பாட்டிலுள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளி களுக்கு பி.எம்.கிசான் திட்டத்தின் 13-வது தவணை தொகை விடுவிக்கப்பட இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஆதார் விவரங்களை வங்கி கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் 13-வது தவணைத் தொகையினை தொடர்ந்து பெறுவதற்கு உடனடியாக வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் விவரங்களை இணைத்திடவும், இல்லை யெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களில் பூஜ்ஜியம் தொகையில் வங்கி கணக்கு தொடங்கிடவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

    • ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ேஜாடுகுளியில் 2021-ம் ஆண்டு தீவட்டிப்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து சேலம் வழியே கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முயன்ற 2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஓமலூர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த புகையிலை பொருட்களை தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று தாசசமுத்திரம் ஏரி அருகே தீ வைத்து அழித்தனர்.

    • ஜோதி முருகன் என்பவருக்கு சொந்தமான நார் மில்லில் ஆப்ரேட்டராக பணி வேலை செய்து வந்தார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலை செய்துகொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குப்பட்டி கிராமம், கோனேரி வளவு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் கடந்த 6 மாதமாக அருகிலுள்ள காளிவட்டம் பகுதியில் இயங்கி வந்த ஜோதி முருகன் என்பவருக்கு சொந்தமான நார் மில்லில் ஆப்ரேட்டராக பணி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலை செய்துகொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மில்லை நடத்தி வந்த உரிமையாளர் ஜோதி முருகனை கண்டித்து செல்வத்தின் உறவினர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக சேலம் அரசு மருத்துவ மனையில் இருந்த செல்வத்தின் உடலை வாங்க மறுத்தும், மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து போலீசார் செல்வத்தின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நார் மில் உரிமையாளர் ஜோதி முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து செல்வத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • தமிழக போக்குவரத்து துறையில் வாகனங்கள் இருவகையாக பதிவு செய்யப்படுகிறது.
    • தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வாகனம் பதிவு அதிகமாக இருப்பதன் மூலம் வாகன தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    தமிழக போக்குவரத்து துறையில் வாகனங்கள் இருவகையாக பதிவு செய்யப்படுகிறது. அதன்படி மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறுத்தில் பதிவெண் எழுதப்பட்டிருந்தால் அது போக்குவரத்து வாகனம் என்றும்,

    வெள்ளை நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறுத்தில் பதிவேண் எழுதப்பட்டிருந்தால் அது போக்குவரத்து அல்லாத வாகனம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

    சேலம் சரகத்தில் உள்ள சேலம், தர்மபுரி மாவட்டத்தில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி என 7 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் ஓமலூர், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் என 4 ஊர்களில் பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    போக்குவரத்து வாகனங்கள்

    கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த 11 அலுவலகங்களில், வாடகைக்கு பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்கள் புதிதாக 5,444 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு 324 வாகனங்கள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு 8,630 வாகனங்கள் புதிதாகவும், 427 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சங்ககிரியில் 2021-ம் ஆண்டு 979 வாகனங்கள், 2022-ல் 1,912 வாகனங்கள் பதிவாகி உள்ளது.

    போக்குவரத்து அல்லாத வாகனங்கள்

    போக்குவரத்து அல்லாத இனத்தில் 2021-ல் 89,633 புதிய வாகனங்கள் புதிதாகவும், 121 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் 98,097 புதிய வாகனங்கள் புதிதாகவும், 126 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டுள்ளன.

    இதில் சேலம் மேற்கில் மட்டும் 2021-ல் 12,338 புதிய வாகனங்கள், 2022-ல் 14,932 புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வாகனம் பதிவு அதிகமாக இருப்பதன் மூலம் வாகன தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
    • மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள மலைகிராம பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் முழுமையாக கிடைக்கப் பெறுகிறதா என்பது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து அரசு துறை தலைமை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஏற்காடு மலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, பொறுப்பு அலுவலர்கள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்பு அலுவலர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    மேலும் நேற்று பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மலை கிராமங்களுக்கு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் முழுமையாக கிடைத்திடும் வகையில் அரசு அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து ஏற்காடு பகுதியில் உள்ள அரசு மாணவர் மற்றும் மாணவிகள் தங்கும் விடுதிகளில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா? அவர்களுக்கு முழுமையான வசதிகள் கிடைக்கிறதா? என்றும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவ மாணவியர்களின் வருகை குறித்தும், மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

    இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர், ஆவின் பொதுமேலாளர் விஜய் பாபு, ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, தனித்துறை ஆட்சியர் மயில், இணை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
    • அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கல்லோடை பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் கடந்த 18-ம் தேதி சேலம் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கோழிப்பண்ணை தீவன கிடங்கில் ரேசன் அரிசி 40 டன் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கோழிப்பண்ணை உரிமையாளரை தேடி வருகின்றனர். இதனிடையே ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ஆத்தூர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ரேசன் கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் 30 கடைகளில் சிறு, சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார்.
    • மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாலைவாசல் அருகே உள்ள வரகூரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன் ஆகியவற்றை திருடினார். மேலும் அங்கு தனியாக தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கயிற்றில் கட்டி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீசார், அங்கு வந்து மர்ம நபரை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர் சிறுவாச்சூரை சேர்ந்த முத்துக்கண்ணன (வயது 57) என தெரியவந்தது. இதேபோல் வேறு எங்கெல்லாம் திருடி உள்ளார் ? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×