என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Handover of worker body to next of kin"

    • ஜோதி முருகன் என்பவருக்கு சொந்தமான நார் மில்லில் ஆப்ரேட்டராக பணி வேலை செய்து வந்தார்.
    • இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலை செய்துகொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள குறுக்குப்பட்டி கிராமம், கோனேரி வளவு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). இவர் கடந்த 6 மாதமாக அருகிலுள்ள காளிவட்டம் பகுதியில் இயங்கி வந்த ஜோதி முருகன் என்பவருக்கு சொந்தமான நார் மில்லில் ஆப்ரேட்டராக பணி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று செல்வம் வேலை செய்துகொண்டிருந்தபோது எந்திரத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் மில்லை நடத்தி வந்த உரிமையாளர் ஜோதி முருகனை கண்டித்து செல்வத்தின் உறவினர்கள் தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக சேலம் அரசு மருத்துவ மனையில் இருந்த செல்வத்தின் உடலை வாங்க மறுத்தும், மில் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து போலீசார் செல்வத்தின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நார் மில் உரிமையாளர் ஜோதி முருகன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து செல்வத்தின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×