என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் சரகத்தில் கடந்த ஒரே ஆண்டில் 1 லட்சத்து 7 ஆயிரம் வாகனங்கள் பதிவு
- தமிழக போக்குவரத்து துறையில் வாகனங்கள் இருவகையாக பதிவு செய்யப்படுகிறது.
- தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வாகனம் பதிவு அதிகமாக இருப்பதன் மூலம் வாகன தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
தமிழக போக்குவரத்து துறையில் வாகனங்கள் இருவகையாக பதிவு செய்யப்படுகிறது. அதன்படி மஞ்சள் நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறுத்தில் பதிவெண் எழுதப்பட்டிருந்தால் அது போக்குவரத்து வாகனம் என்றும்,
வெள்ளை நிற நம்பர் பிளேட்டில் கருப்பு நிறுத்தில் பதிவேண் எழுதப்பட்டிருந்தால் அது போக்குவரத்து அல்லாத வாகனம் என்றும் குறிப்பிடப்படுகிறது.
சேலம் சரகத்தில் உள்ள சேலம், தர்மபுரி மாவட்டத்தில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி என 7 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் மற்றும் ஓமலூர், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் என 4 ஊர்களில் பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன.
போக்குவரத்து வாகனங்கள்
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த 11 அலுவலகங்களில், வாடகைக்கு பயன்படுத்தும் போக்குவரத்து வாகனங்கள் புதிதாக 5,444 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு 324 வாகனங்கள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு 8,630 வாகனங்கள் புதிதாகவும், 427 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சங்ககிரியில் 2021-ம் ஆண்டு 979 வாகனங்கள், 2022-ல் 1,912 வாகனங்கள் பதிவாகி உள்ளது.
போக்குவரத்து அல்லாத வாகனங்கள்
போக்குவரத்து அல்லாத இனத்தில் 2021-ல் 89,633 புதிய வாகனங்கள் புதிதாகவும், 121 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டுள்ளன. 2022-ல் 98,097 புதிய வாகனங்கள் புதிதாகவும், 126 வாகனங்கள் மறுபதிவும் செய்யப்பட்டுள்ளன.
இதில் சேலம் மேற்கில் மட்டும் 2021-ல் 12,338 புதிய வாகனங்கள், 2022-ல் 14,932 புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளது.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வாகனம் பதிவு அதிகமாக இருப்பதன் மூலம் வாகன தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






