என் மலர்
சேலம்
- போலீசார் விசாரணை நடத்தி ஏட்டை தாக்கிய அண்ணன்-தம்பிகளான முத்துராஜா, சிவசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- தலைமறைவான முத்துராஜாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் இருசப்பன் (வயது 46).
இவர் கடந்த 3-ந் தேதி இரவு பணியை முடித்து விட்டு மாங்கானூர் காலனி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர், கார் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளை ரோட்டில் நிறுத்தியிருந்தனர்.
இதனை பார்த்த ஏட்டு இருசப்பன் வழிவிட்டு நில்லுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும், அவரை கொடூரமாக தாக்கினர்.
கல்லால் தாக்கியதில் தலை, உதடு, கால் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட சொட்ட கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் ஏட்டு இருசப்பன் புகார் கொடுத்தார். காயம் அடைந்த இருசப்பன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் 4 தையல்கள் போடப்பட்டன. மேலும், அவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஏட்டை தாக்கிய அண்ணன்-தம்பிகளான முத்துராஜா, சிவசக்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சிவசக்தி கைதான நிலையில் முத்துராஜா தலைமறைவாகி விட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சிவசக்தி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடந்து வந்தது.
ஏட்டு இருசப்பனுக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக மாற்றப்பட்டுள்ளதாகவும், ஜாமீன் வழங்கக் கூடாது எனவு அரசு வக்கீல் தம்பிதுரை வாதிட்டார். இதையடுத்து சிவசக்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தலைமறைவான முத்துராஜாவை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
- தேன்மொழியின் கழுத்தை நெரித்த இளைஞர் தங்கத்தாலி, தோடு, மூக்குத்தி போன்றவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
- கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் ஊராட்சி, மேலுார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனபால் மனைவி தேன்மொழி (வயது 37). இவர் நேற்று மாலை இவரது பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடை அணிந்த மர்மநபர் ஒருவர், தனக்கு தாகமாக இருப்பதாகக் கூறி, குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய தேன்மொழி, அந்த இளைஞருக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். அப்போது தேன்மொழியின் கழுத்தை நெரித்த அந்த இளைஞர், அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலி மற்றும் தோடு, மூக்குத்தி ஆகியவற்றை பறித்துக் கொண்டு மாயமானார்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான தனிப்படை போலீசார், பெண்ணிடம் தங்க நகைகளை பறித்த மர்ம நபரை பிடிக்க, கண்காணிப்பு கேமிரா பதிவுகளை சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
- சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோதா நேற்று முன்தினம் சென்னை தலைமை இட ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக மாறுதல் செய்யப்பட்டார். ஆவடி போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றிய விஜயகுமாரி சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.
சேலம் மாநகர காவல்துறையில் முதல் கமிஷனரான ஜெகநாதன் தொடங்கி அடுத்தடுத்து ஆண்களே கமிஷனராக நியமிக்கப்பட்டனர். 2006-ல் முதல் பெண் கமிஷனராக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டார்.
அவருக்கு பின், 13 ஆண்கள் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் சேலம் மாநகர போலீசில், 2-ம் முறையாக, 16 ஆண்டுகளுக்கு பிறகு, ஆவடி போக்குவரத்து, தலைமை இட கூடுதல் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது சேலம் மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், நேற்று விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரித்தது.
இதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று விநாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 841 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
தண்ணீர் வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக இருப்பதால், நேற்று 103.66 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.63 அடியாக குறைந்தது.
- பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர்.
- ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா சந்தைப்பேட்டையில் இந்தியா ஒன் ஏ.டி.எம். மையம் உள்ளது. அங்கு காவலாளி இல்லை.
இதை குறி வைத்து ஏ.டி.எம். மையத்தில் கடந்த 21-ந்தேதி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் ஏற்காடு ஒலக்கூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 29), சேலம் குகை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்தன் (22) ஆகியோரை போலீசார் கடும் போராட்டத்திற்கு பிறகு பிடித்து கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த கடந்த 21-ந்தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியை சேர்ந்த வீரமுத்து மகன் ராமர் என்கிற குட்டி பையன் (22) ஆகியோர் சந்தைப்பேட்டையில் உள்ள இந்தியா ஒன் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து பெரிய இரும்பு கடப்பாரையை கொணடு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். சந்தைபேட்டையில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து சத்தம் கேட்டது. இதனால் பெண் போலீசார் அங்கு சென்றனர்.
அப்போது ஏ.டி.எம். வாசலில் யாராவது வருகிறார்களா? என நோட்டமிட்டு கொண்டிருந்த குட்டிபையன் போலீசாரை கண்டதும் அவர் கம்பி உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றான்.
மேலும் லட்சுமணன், ஆனந்தன் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்ற நிலையில் ஏ.டி.எம். முன்பு அவர்கள் தங்களது செருப்புகளை விட்டு சென்றதும், கடப்பாரை கிடந்ததும், ஏ.டி.எம். உடைக்கப்பட்டுள்ளதையும் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பெண் போலீசார் உடனடியாக இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் பெண் போலீசார் வாக்கி-டாக்கி மூலமாக தீவட்டிப்பட்டி போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விட்டு சந்தைப்பேட்டை பகுதியில் கொள்ளையர்களை தேடினர்.
இதனிடையே தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சந்தை பேட்டைக்கு விரைந்து வந்தார். உடனே அவர் சமயோசிதமாக செயல்பட்டு, தீவட்டிப்பட்டி ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு செருப்பு இல்லாமல் யாராவது வந்தால் சொல்லுங்கள் என கூறினார்.
அப்போது ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த டிரைவர் சந்தோஷ், செருப்பு இல்லாமல் அந்த வழியாக கொள்ளையன் வேகமாக ஓடுவதை கண்டு, சப்-இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீஸ்காரர் சந்திரன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளையர்களை பிடிக்க துரத்திச் சென்றனர். இதில் 100 மீட்டர் தூரம் வரை ஓடிச்சென்று கொள்ளையர்களை பிடித்த போது, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தவறி கீழே விழுந்தார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டருக்கு இடது கை, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் கொள்ளையர்கள் இருவரையும் தப்ப விடாமல் பிடித்தார். பின்னர் கொள்ளையர்கள் லட்சுமணன், ஆனந்தன் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தார். தப்பி ஓடிய குட்டி பையனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ்காரர் சந்திரன், பெண் போலீசார் தெய்வராணி, நர்மதா, ஆட்டோ டிரைவர் சந்தோஷ் ஆகியோரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
பெண் போலீசார் உரிய நேரத்தில் தகவல் கொடுத்ததால் கொள்ளையர்கள் இருவரும் பிடிபட்டனர். இதனால் ஏ.டி.எம்.-ல் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.
- சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
- விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.
சேலம்:
தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.
வெயில் தாக்கம் அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.
விற்பனை அதிகரிப்பு
அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
- அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டிற்கான தேர்வு நாளை மறுநாள் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11, 385 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
சேலம்:
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தடுக்கவும், நலிவ டைந்த பிரிவை சேர்ந்த மாண வர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும்
திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்)
இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.48 ஆயிரம்
ஆண்டு ேதாறும் இத்திட்டத்தின்படி நடத்தப்ப டும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்ெவாரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
நாளை மறுநாள் தொடங்குகிறது
நடப்பாண்டிற்கான தேர்வு நாளை மறுநாள் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11, 385 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த என்.எம்.எம்.எஸ். தேர்வானது, மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளை
கொண்டதாகும். மாணவர்க ளின் பகுப்பாய்வுத்திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், எண்ணியல் திறன் ேபான்றவற்றை சோதித்து அறிவது, மனத்திறன் தேர்வாகும்.
இதேேபால் மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக படிப்பறிவுத்திறன் தேர்வு அமைகிறது. இத்தேர்வில் கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
47 மையங்களில்...
இந்த தேர்வை சேலம்
மாவட்டத்தில் 47 மையங்க ளில் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சிறப்பு வகுப்புகள்
இது குறித்து பள்ளிக்க ல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-சேலம் மாவட்ட பள்ளிக்க ல்வித்துறை மாநில அளவில் பங்கேற்று சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தது, பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் மற்றும் சென்டம் அதிகரிப்பு, என்.எம்.எம்.எஸ், தேர்வில் அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை கலைத்திருவிழாவில் சாதனை என சிறப்புகளை பெற்று வருகிறது.
மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் பலர், விருப்பத்தின்பேரில் சிறப்பு வகுப்புகளை நடத்தி அனைத்து தேர்வுகளுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதன்பலனாக நடப்பாண்டிற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு மாநில அளவில் அதிகபட்சமாக 705 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலிருந்து 11,385 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காலை, மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஒவ்வொரு வாரமும் அலகு தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், திருப்புதல் தேர்வும், மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் நடப்பாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று தலா ரூ.48 ஆயிரம் உதவித்ெதாைக பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.
- சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஏற்காடு:
தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டன்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரக்கிங்) உள்ளன. ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது.
இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.
தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள், மூலிகை தாவரங்கள் தீக்கிரையாகின.
இதனால் மலை பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடைவிதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த பகுதிகளில் இருந்து மலையேற்றத்திற்கு தடை விதிப்பதாக வன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளர் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.
சேலம்:
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங் காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குன ரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமை யில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்று இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 20 விவசா யிகளும், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட் சமாக 55 ரூபாய் 75 காசுக்கும், அதிகபட்சமாக 82 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 2 டன் எடை யுள்ள கொப்பரை தேங்காய் ரூ. 2 லட்சத்துக்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப் பாளர் பிரபாவதி தெரிவித்தார்.
- மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சேலம்:
மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.
இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது
இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.
- மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
சேலம்:
மல்லூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடிய சேலம் வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சிலம்பன் காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 32), டிரைவர்.
இவர் கடந்த 8-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை.
சேலம் வாலிபர்கள் 2 பேர் கைது
இது குறித்த அவர் மல்லூர் போலீசில் புகார் அளித்தார். இந்த திருட்டு சம்பவம் குறித்து சேலம் புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் தாதகாப்பட்டி பங்களா தோட்டம் பகு தியை சேர்ந்த தினேஷ் (23), தாதகாப்பட்டி அம்பாள் ஏரி பகுதியை சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகிய 2 பேரும் சேர்ந்து கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
கைதான 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வேறு எங்கும் கைவரிசை காட்டியுள்ளனரா? என்றும் விசாரணை நடக்கிறது.
- கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர்.
- இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தினசரி சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு டிக்கெட் எடுத்து முறைகேடாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு (ஆர்.பி.எப்) புகார் வந்தது. இதையடுத்து போலீசார், முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுப டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி.யில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்பவர்களை பணபரிமாற்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
75 பேர் கைது
அந்த வகையில் கடந்த 2022-ம் ஆண்டில் சேலம் ரெயில்வே கோட்டத்தில் முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் ஆர்.பி.எப்.போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த 73 வழக்குகளிலும் முறைகேடாக கூடுதல் விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்க
ளிடம் இருந்து ரூ.28 லட்சம்
மதிப்பிலான டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த
னர். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட மின்னணு எந்திரங்களையும் கைப்பற்றினர்.
ரூ.1 லட்சம் மதிப்பு
நடப்பாண்டில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் 4 வழக்குகள் பதிவு செய்ய ப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பெயரில் எடுக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான ரெயில் டிக்கெட்டுகளை ஆர்.பி.எப். போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






