ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை

கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
ஏற்காடு, மேட்டூர், கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு தடை
Published on

ஏற்காடு:

தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேட்டூர் பச்சமலை, தேனி குரங்கணி, ஆத்தூர் கல்வராயன்மலை, களக்காடு முண்டன்துறை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் (டிரக்கிங்) உள்ளன. ஆங்காங்கே மலையேற்ற பயிற்சிக்கு என தனிக்குழுக்களும் இயங்கி வருகிறது.

இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் வனச்சரகர் மற்றும் மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் இளைஞர்கள் காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த பயங்கர தீ விபத்து உயிரிழப்பால் கோடை காலத்தில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்ற முடிவுக்கு வனத்துறை வந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே மலைப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள், மூலிகை தாவரங்கள் தீக்கிரையாகின.

இதனால் மலை பாதைகளில் மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள தடைவிதித்து வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலை, மேட்டூர் பச்சமலை, ஆத்தூர் கல்வராயன்மலை, கொல்லிமலை ஆகிய இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்த பகுதிகளில் இருந்து மலையேற்றத்திற்கு தடை விதிப்பதாக வன அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் கோடை காலம் முடியும் வரை மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com