search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NMMS Exam"

    • சேலம் மாவட்டத்தில் (என்எம்எம்எஸ்) இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர்.
    • இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    சேலம்:

    நாடு முழுவதும் அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்எம்எம்எஸ்) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதத்திற்கு ரூ.1000 வீதம், 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு நேற்று நடந்தது.

    சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11,602 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டம் முழுவதும் 42 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 முதல் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடந்தது. நேற்றைய தேர்வில் 11,407 பேர் கலந்து கொண்டு தேர்வெழுதினர். விண்ணப்பித்திருந்த 195 மாணவர்கள், தேர்வெழுத வரவில்லை. இத்தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்) இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நடப்பாண்டிற்கான தேர்வு நாளை மறுநாள் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11, 385 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

    சேலம்:

    நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தடுக்கவும், நலிவ டைந்த பிரிவை சேர்ந்த மாண வர்களுக்காகவும், கல்வியில் சிறந்து விளங்கவும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும்

    திறன் படிப்பு உதவித்தொகை திட்டம் (என்.எம்.எம்.எஸ்)

    இந்திய அரசு கல்வி அமைச்சகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ரூ.48 ஆயிரம்

    ஆண்டு ேதாறும் இத்திட்டத்தின்படி நடத்தப்ப டும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ- மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்ெவாரு வருடமும் ரூ.12 ஆயிரம் வீதம் மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

    நாளை மறுநாள் தொடங்குகிறது

    நடப்பாண்டிற்கான தேர்வு நாளை மறுநாள் 25-ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 11, 385 மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்த என்.எம்.எம்.எஸ். தேர்வானது, மனத்திறன் தேர்வு மற்றும் படிப்பறிவுத்திறன் தேர்வு என இரு பகுதிகளை

    கொண்டதாகும். மாணவர்க ளின் பகுப்பாய்வுத்திறன், காரணம் அறியும் திறன், சிந்திக்கும் திறன், எண்ணியல் திறன் ேபான்றவற்றை சோதித்து அறிவது, மனத்திறன் தேர்வாகும்.

    இதேேபால் மாணவர்கள் பாடப்பொருளில் பெற்றுள்ள அறிவை சோதித்து அறிவதாக படிப்பறிவுத்திறன் தேர்வு அமைகிறது. இத்தேர்வில் கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

    47 மையங்களில்...

    இந்த தேர்வை சேலம்

    மாவட்டத்தில் 47 மையங்க ளில் நடத்த ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது. அன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை மனத்திறன் தேர்வும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடக்கிறது. இந்த தேர்வுக்கான பணிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறப்பு வகுப்புகள்

    இது குறித்து பள்ளிக்க ல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-சேலம் மாவட்ட பள்ளிக்க ல்வித்துறை மாநில அளவில் பங்கேற்று சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீட் தேர்வில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தது, பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் மற்றும் சென்டம் அதிகரிப்பு, என்.எம்.எம்.எஸ், தேர்வில் அதிக மாணவர்களுக்கு உதவித் தொகை கலைத்திருவிழாவில் சாதனை என சிறப்புகளை பெற்று வருகிறது.

    மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்கள் பலர், விருப்பத்தின்பேரில் சிறப்பு வகுப்புகளை நடத்தி அனைத்து தேர்வுகளுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதன்பலனாக நடப்பாண்டிற்கான என்.எம்.எம்.எஸ். தேர்வுக்கு மாநில அளவில் அதிகபட்சமாக 705 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளிலிருந்து 11,385 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்களுக்கு அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காலை, மாலைகளிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அத்துடன் ஒவ்வொரு வாரமும் அலகு தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், திருப்புதல் தேர்வும், மாதிரி தேர்வும் நடத்தப்பட்டுள்ளது.

    இதனால் நடப்பாண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று தலா ரூ.48 ஆயிரம் உதவித்ெதாைக பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×